கலியுகத் தமிழனின் கிறுக்கல்கள்
கவிக்கோ அப்துல் ரஹ்மானுக்கு சமர்ப்பனம்
வெண் தாமரை சூழ் ஏரியைப்போல்
செங்கவிதைகளால் நிறைந்திருந்த
என் சின்னஞ்சிறு மூளைக்குள்
பெஸ்களும் ஜாவாவும்
பெண்டாட்டியை துரத்திய வைப்பாட்டியாய்
இன்னும் சிலவும்
'செல்' எங்கும் சொப்ட்கொப்பிகளாய் பதிந்து நிற்க
வானவில் கனவுகள் துயிலெழுகையில் தொலைவதுபோல்
மென் கவிதை நரம்புகள் அறுந்துதான் போயின
இருந்துமென்ன
கருவறையில் கவிதை கற்றவனின் கண்களை
மாயக்கன்னியின் மோகச் சித்துக்களாய்
மடிக்கணணியின் போஜிச்(4G) சிக்னல்கள் கட்டிவிடுமா என்ன?
இதோ
கவிக்கோவின் பசை கொண்டு அறுந்துபோன
கவிதை நரம்புகளை ஒட்டிக்கொண்டேன் நான்!
-கலியுகத் தமிழன்
***
வசந்தத்தை தேடும்
வாழ்ந்து கெட்டவனின்
வீட்டுச் சிதிலங்கள்!
-கலியுகத் தமிழன்
***
சில நிமிடங்களில்
சங்கமிக்கவில்லை நதிகளிரண்டும்
மறித்தது அணை!
-கலியுகத் தமிழன்
***
சுற்றியிருந்த இருள்
கருவறைச் சாமியை
பரிவோடு விசாரிக்கிறது
தன்னோடு நட்புக்கொள் என்பதுபோல
எல்லோரும் உள்ளபோதும்
எல்லோரும் போனபிறகும்
கருவறைச் சாமி
தனியன்தான்!
-கலியுகத் தமிழன்
***
நீ சூடிய ஒற்றை
பூ வாசத்தின்
பெக்கப் (backup) ஒன்று
இன்னும் வீசுகிறது
பழைய டைரியின்
பக்கங்களிடையே!
-கலியுகத் தமிழன்
***
ஐ- போனில் பதிந்த
அண்ட்ரொய்ட்டாய்
பரிதவிக்கிறது மனது
வெளியூரில்!
-கலியுகத் தமிழன்
***
தொலைவில் வரும்
தொடர்வண்டியாய் தொல்லைகள்
எவ்வித சலனமுமின்றி
இரும்புப் பாதையில்
பட்டாம்பூச்சியாய் நான்!
-கலியுகத் தமிழன்
***
கனவில் அவள் கொடுத்த
கனல் ஒளி முத்தம்
உதட்டில் சூட்டுக்காயம்!
-கலியுகத் தமிழன்
***
கிஸ்
உன் உதட்டோரம்
தேன் வழிந்தால்
என் உதடுகள்
தேனியை முந்தும்
-கலியுகத் தமிழன்
***
'நினைவு வெளி'
கடந்து சென்றது நிச்சயம் நீயாகவே இருப்பின்
எதிர்த்திசையில்
எனது சாயலில் நீயும்
எனைக் கண்டிருக்கலாம்
எனது வெளியெங்கும்
நினைவுகளால் நீ நிரம்ப
இன்று நாம் பயணித்தது
திறந்துகொண்ட இறந்தகாலப்
பாதையொன்றின் மீதெனலாம்!
எதிர்த்திசையில்
எனது சாயலில் நீயும்
எனைக் கண்டிருக்கலாம்
எனது வெளியெங்கும்
நினைவுகளால் நீ நிரம்ப
இன்று நாம் பயணித்தது
திறந்துகொண்ட இறந்தகாலப்
பாதையொன்றின் மீதெனலாம்!
-கலியுகத் தமிழன்
***
'ஆதியானவள்'
சிந்தனையற்ற அணுக்களுக்கு
சிக்கலான உயிர் அளிக்கும்
அகிலத்தின்
ஆதியான வானிலையே!
தனித்தனியாக திரிந்தாலும்
வாழ்வெனும் சங்கீதத்தை
மிக மிகத் தெளிவாக
இசைக்கின்றாய்.
சிக்கலான உயிர் அளிக்கும்
அகிலத்தின்
ஆதியான வானிலையே!
தனித்தனியாக திரிந்தாலும்
வாழ்வெனும் சங்கீதத்தை
மிக மிகத் தெளிவாக
இசைக்கின்றாய்.
-கலியுகத் தமிழன்
***
'இசைமொழி'
ஓரெழுத்தால்
பக்கங்களை நிரப்பிய
புத்தகம் நான்
பிரபஞ்சத்தின்
பிரமாண்ட
வினாக்களுக்கும்
விடையளிக்கும்
நூலகமானேன்
இசைமொழியின்
கடைவிழி எய்திடும்
பாணம் பட்டதனாலே!
பக்கங்களை நிரப்பிய
புத்தகம் நான்
பிரபஞ்சத்தின்
பிரமாண்ட
வினாக்களுக்கும்
விடையளிக்கும்
நூலகமானேன்
இசைமொழியின்
கடைவிழி எய்திடும்
பாணம் பட்டதனாலே!
-கலியுகத் தமிழன்
***
Post a Comment