Search This Blog

SPLICE (2009) - Canadian French film



"If God didn't want us to explore his domain, why'd he give us the map?"

காட்சி ஒன்று :

இடம் 
நவீன பரிசோதனைக் கூடம்

கதாபாத்திரங்கள் 
க்ளைவ் & எல்சா 

இதுக்குமேல இனி எந்த பிரச்சினையும் இல்லல...

இல்ல... இனி எந்த பிரச்சினையும் இல்ல.
நாம சாதிச்சுட்டோம்!

மெல்வின் - ஜிஞ்சர் எங்கிற பேரு இதுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும்.

வேண்டாம்! வேண்டாம்!  மெல்வின் - ஜிஞ்சர் எங்கிற பேரு நல்லாவே இல்ல...

ஆ.. OK! ப்ரெட்டுனு வைக்கலாமா?

ம்... 

OK! Alright! இனிமே எந்த பயமும் இல்ல.

க்ளைவ் ஒரு பரிசோதனை பெட்டியின் மூடியை திறக்க... எல்சா அதனை வீடியோவில் பதிகிறாள்.

பெட்டியின் உள்ளே  எந்த அவயவங்களும் அற்ற இரு ஜந்துகள் ஒன்றோடொன்று இணைந்து காதலில் ஈடுபடுகின்றன.



காட்சி இரண்டு :

இடம் 
மக்கள் கூடியிருக்கும் பெரிய அரங்கம்

ஒரே அணுவிலிருந்து எடுத்த ஆண் பெண் படைப்பு.  இந்த ஜீவன் களும் மத்த ஜீவன் கள் மாதிரியே சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பிருக்கு! 
இதோ அங்கங்களே இல்லாத உலகத்தோட முதல் உயிரி. 
இதன் படைப்பாளர்கள் க்ளைவ் மற்றும் எல்சா! இதோ உங்கள் முன்னிலையில்...

க்ளைவ்வும் எல்சாவும் பார்வையாளர்கள் முன்னிலையில் பேச ஆரம்பிக்கிறார்கள்.

அப்போது அந்த இரு உயிரினங்களும் ஒன்றையொன்று தாக்கிக்கொண்டு செத்து மடிகின்றன!

காட்சி மூன்று :

நீங்க என் நம்பிக்கைய கெடுத்திட்டீங்க... ஏன் இப்படி ஆச்சுனு சொல்லுங்க?

ம்... ஒரே வகையான அணுக்கள் இதுக்குள இருக்குறது காரணமா இருக்கலாம். ஹார்மோன் சேஞ்சஸ்தான் இதுக்கெலாம் காரணம்.

நாங்க இத ஆரம்பத்துல ஒரு ஆணாவும் மத்தத பொண்ணாவும்தான் படைச்சோம். but கொஞ்ச நாள்ல பெண் ஜந்து ஆணா மாறிடுச்சு. அதுதான் இந்த விபரீதத்துக்கு காரணம்.


இதுதான்  SPLICE : 
splice என்றால் இணைப்பு என்று பொருள்.

சமீபத்தில் இப்படி இன்னொரு படத்தை பார்த்தேன். அது  LIFE
இருந்தும் படம் போவதே தெரியாமல் பார்த்தேன். படத்தின் முதல் நொடியிலேயே , கதை ஆரம்பித்துவிடுகிறது. கொஞ்சம் கூட அலுக்காத திரைக்கதை. 


Vincenzo Natali, Antoinette Terry Bryant, Doug Taylor ஆகியோர் இணைந்து செதுக்கிய திரைக்கதை இது. 



சுருக்கமான திரைக்கதை :

ஜெனெடிக் எஞ்சினியர் தம்பதிகளான க்ளைவ் மற்றும் எல்சா ஆகிய இருவரும் தடைசெய்யப்பட்ட ஆராய்ச்சியான மனித DNAவையும் மிருக DNAவையும் இணைத்து Dren எனும் பெண் உயிரியை படைக்கிறார்கள்.

மனிதன் ஒரு நாளில் அடையும் வளர்ச்சியை Dren ஒரு நிமிடத்தில் அடைகிறது. இதனால் அதனை பாதுகாப்பாக எல்சாவின் அம்மாவின் வீட்டில் ஒளித்து வைக்கிறார்கள். 


Drenஐ உருவாக்க எல்சா தனது  DNAவையே பயன்படுத்துகிறாள். இது க்ளைவுக்கு தெரிவதில்லை. 

இன் நிலையில் விரைவாக பருவ வயதுக்கு வரும் Dren  க்ளைவை காதலிக்க ஆரம்பிக்கிறாள். ஒரு சந்தர்ப்பத்தில் இருவரும் சல்லாபிக்கிறார்கள்.

நாளாக நாளாக Dren இடம் மனித குணங்கள் மறைந்து மிருகமாக மாற ஆரம்பிக்கிறாள்.  எல்சா வளர்த்துவரும் செல்ல பூனையை கொல்கிறாள். எல்சாவையும் கொல்ல முயல்கிறாள்.

இதனால் க்ளைவும் எல்சாவும் Dren ஐ கொல்ல முடிவெடுக்கிறார்கள்.

ஆனால் திடீரென தற்கொலை செய்து கொள்ளும் Dren பின்னர் ஆணாக உயிர்த்தெழுகிறாள்.

தன்னை கொல்லவரும் எல்சாவிடம் காதல் வயப்படும் ஆண் Dren  அவளை பலவந்தப்படுத்தி சல்லாபிக்கிறது.

இறுதியில் இந்த இயற்கைக்கு விரோதமான உயிரினத்தை எல்சா & க்ளைவ்வால் அழிக்க முடிந்ததா என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்க!



படத்தில் எனக்கு தெரிந்த ஒரேயொரு நடிகை எல்சாவாக நடித்திருக்கும் Sarah Polley. புகழ்பெற்ற Down of The Dead படத்தின் நாயகி. மற்றவர்கள் யாவரும் எனக்கு புதியவர்களே!



சட்ட விரோதமான தடை செய்யப்பட்ட ஆராய்ச்சி, அதன் விளைவாக விளையும் கொடூரங்கள் என்ற கருவை வைத்துப் பின்னப்பட்ட இந்தப் படம், திரைக்கதையில் என்னை அசத்தியது.


படத்திற்கான லிங்க் கீழே :


குறிப்பு : இது வயது வந்தவர்களுக்கான படம். 





No comments

Powered by Blogger.