Search This Blog

CRIMINAL (2016) - American Sci-Fi Action Crime Thriller Film


"if you hurt me I hurt you worse!"
"'வேட்டையாடு விளையாடு' ராகவனின் நினைவுகளை,  'பாட்ஷா' மார்க் அண்டனியின் மூளையுடன் கனெக்ட் செய்தால் என்ன ஆகும்?"

திரைக்கதை – ஒரு படத்தின் உயிர்நாடி. அத்தகைய திரைக்கதை அமைப்பதில், பல ஜாம்பவான்கள் உண்டு. 
அவர்களது படங்கள் ஆரம்பித்தவுடன் நம்மை சர்ரென்று உள்ளிழுத்துவிடும். அந்த சுவாரசியம், கடைசிவரை தொடரும். 

வெற்றிகரமான திரைக்கதையமைப்பில், ‘Suspension of Disbelief ‘ என்ற அம்சம் மிகவும் முக்கியமானது. படத்தில் என்னதான் நம்பமுடியாத காட்சிகள் வந்தாலும், அவை, பார்க்கும் ஆடியன்ஸினால் நம்பப்படவேண்டும். படம் பார்ப்பவர்கள், படத்துடன் ஒன்றி, படத்தில் என்ன நடந்தாலும் அவற்றை நம்பவேண்டும். 
இது மட்டும் நடந்தால், அப்படம் வெற்றிபெற்றுவிடும்.

Douglas Cook &  David Weisberg இவர்கள்தான் இப்படத்தின் திரைக்கதை ஆசிரியர்கள்
இவர்கள்  ஒரு நிமிடம் கூட போரே அடிக்காமல், சீட்டு நுனியில் நம்மை அமரவைக்கும் வித்தை தெரிந்தவர்கள். 

இந்த படத்தின் கதையை ஒரு ஸ்டாம்புக்குப் பின்னால் எழுதிவிடலாம்.

 'வேட்டையாடு விளையாடு' ராகவனின் நினைவுகளை 'பாட்ஷா' மார்க் அண்டனியின் மூளையுடன் கனெக்ட் செய்தால் என்ன ஆகும்? 

இது தான் கதை!

ஷேவியர் ஹெய்ம்டால், ஒரு ஸ்பானிஷ் தொழிலதிபர், 
'டச் மென்' எனப்படும் ஒரு ப்ரில்லியண்டான ஹேக்கரை வைத்து 'வோர்ம் ஹோல்' ப்ரோக்ரம் ஒன்றை செய்யச் சொல்கிறான். 
அந்த ப்ரோக்ரம் உலகிலுள்ள நியூக்கிளியர் வெப்பன் களை கட்டுப்படுத்தும் சகல கொம்பியுட்டர்களையும் bypass செய்ய அனுமதிக்கும்.

ஹெய்ம்டாலால் தனக்கு ஆபத்து நேரலாமென பீதியடையும்  'டச் மென்' தனது 'வோர்ம் ஹோல்' ப்ரோக்ரம்மை CIA விடம் ஒப்படைக்க எண்ணி லண்டனை தளமாக கொண்டு இயங்கிவரும் CIA ஏஜெண்ட் பில் போப்பை தொடர்பு கொள்கிறான்.

பில் போப் டச் மேனை ஒரு பாதுகாப்பான இடத்திலும், டச் மேனின் சேவைக்காக கொடுக்க வேண்டிய பணத்தினை இன்னொரு இடத்திலும் பதுக்கி வைக்கிறான்.

எனினும் இதனை பில் போப் தனது தலைவரான குவெகர் வெல்ஸிடம் தெரிவிக்க முன்னரே ஹெய்ம்டாலின் ஆட்களினால் பிடிக்கப்பட்டு கொல்லப்படுகிறான்.

குவெகர் வெல்ஸ் - டொக்டர் மைகா ப்ராங்க்ஸை அழைக்கிறார்.  டொக்டர் ப்ராங்க்ஸ் இறந்தவர்களின் மூளையில் இருக்கும் நினைவுகளை உயிரோடிருக்கும் ஒருவரின் மூளையில் நடும் தொழில்னுட்பத்தை கண்டுபிடித்திருக்கிறார்.

இவ்வேளையில்தான் கதையின் நாயகன் ஜெரிகோ ஸ்டூவர்ட் நமக்கு அறிமுகமாகிறான்.
ஜெரிகோ ஒரு முரடன். கொலைகாரன். கொள்ளையடிப்பவன். பெண்களை கற்பழிப்பவன். இன்னும் என்னென்ன குற்றச்செயல்கள் உள்ளனவோ அத்தனையும் கூசாமல் செய்வான். 

அவனது அபிமான பஞ்ச் தான் மேலே இந்த பதிவின் ஆரம்பத்திலேயே தந்திருக்கிறேன்.

"if you hurt me I hurt you worse!"

இப்போது வெல்ஸ் ஜெரிகோவை பிடித்து ஜெயிலில் வைத்திருக்கிறார். வெல்ஸின் கட்டளையின்படி டொக்டர் ப்ராங்க்ஸ் போப்பின் நினைவுகளை ஜெரிகோவின் மூளையில் நடுகிறார். 

இதற்காக ஜெரிகோவை தேர்ந்தெடுக்க காரணம் குழந்தைப்பருவத்தில் ஜெரிகோவுக்கு வந்த ஒருவகை மூளைக்காய்ச்சல். 
இதனால் அவனது மூளையின் முன்புறமடல் சரியாக வளர்ச்சியடையாத நிலையில் அவனால் உணர்ச்சிகளையும் உடலின் உந்துவிசை இயக்கங்களையும் கட்டுப்படுத்துவது கடினம். 
இதனால் போப்பின் நினைவுகள் அவன் மூளையில் சில நாட்களுக்கு மட்டுமே உயிரோடிருக்கும். பின்னர் அழிந்துவிடும். 
டச் மேனை கண்டுபிடித்தபின் ஜெரிகோவை மீண்டும் ஜெயிலில் இடலாம். 

ஒப்பரேசன் சக்கஸ். இருந்தாலும் ஜெரிகோ வெல்ஸுக்கு ஒத்துழைக்க மறுக்கிறான். தனக்குள் இருக்கும் போப்பின் அறிவை பயன்படுத்தி ஜெயிலிலிருந்து ஜெரிகோ தப்பிக்கிறான். 
போப்பின் நினைவுகள் ஜெரிகோவை வழினடத்துகின்றன.

போப்பின் வீட்டுக்கு செல்கிறான். அங்கே போப்பின் இளம் விதவை மனைவி ஜில் போப்பையும் மகள் எம்மா போப்பையும் சந்திக்கிறான்.

ஜில்லிடம் ஜெரிகோ தனக்குள் போப்பின் நினைவுகள் புதைந்து கிடப்பதை வெளிப்படுத்துகிறான். ஜில்லும் எம்மாவும் ஜெரிகோ தங்களுடனேயே வாழ சம்மதிக்கிறார்கள்.

இப்போது ஹெய்ம்டால் டச் மேனை தேடி வருகிறான். தனக்கு கிடைக்கவேண்டிய பணம் கிடைக்காததால் டச் மேன் நியுக்கிளியர் குண்டுகளை வெடிக்கச் செய்ய நினைக்கிறான். இன்னொரு புறம் வெல்ஸ் ஜெரிகோவை தேடுகிறார். ஜெரிகோ டொக்டர் ப்ராங்க்ஸை தேடி கிளம்புகிறான். ஜில்லுக்கும் எம்மாவுக்கும் என்ன நடக்கிறது? என்பதையெல்லாம் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இப்படியான ஒரு கதையை எவ்விதமான குழப்பமும் வராமல் சுவாரசியமாக இயக்கியிருக்கிறார் ஏரியெல் வொமன். புகழ்பெற்ற The ICE MAN (2012) பட இயக்குனர்.

ஜெரிகோவாக  Kevin Costner. மனிதருக்கு 60 வயதாகிறது. ஆனாலும் நடிப்பில் பின்னியெடுக்கிறார். ஜெரிகோவுக்கும் போப்புக்கும் இவர் உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பில் காட்டும் வித்தியாசங்கள் அபாரம்.

பில் போப்பாக Ryan Reynolds. அதாங்க நம்ம டெட் பூல். சில நிமிடங்களே வந்தாலும் தெரிந்த முகமென்பதால் ஈர்க்கிறார்.

வெல்ஸாக Gary Oldman, டொக்டர் ப்ராங்ஸாக Tommy Lee Jones கொடுத்த பாத்திரத்தை நிறைவாய் செய்திருக்கிறார்கள்.

ஜில் போப்பாக நம்ம வொண்டர் வுமன் Gal Gadot தன் கவர்ச்சியாலும் நடிப்பாலும் கிறங்கவைக்கிறார்.

சிறுமி எம்மா போப்பாக நடித்திருக்கும் Lara Decaro வும் கவர்கிறாள்.

இந்தப் படம் வெளியான சமயத்தில்தான் The Junglebook வெளியாகியிருந்தது. இதனால் Criminal பொக்ஸ் ஒவ்விஸில் பின்னடைவைச் சந்தித்தது. அத்தோடு விமர்சகர்களின் மோசமான கருத்துக்களும் சேர படம் ப்ளொப். 

இருந்தும் இது ஒரு சுவாரசியமான ஆக்ஷன் படம் என்பதில் துளியும் சந்தேகமில்லை. படத்தின் வித்தியாசமான கருவுக்காகவும் விறுவிறுப்பான இயக்கத்துக்காகவும் ஒருதடவை பார்க்கலாம்.

படத்தை காண கீழே லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
http://www.watchonline.red/criminal-2016-watch-online/

படத்தின் ட்ரெய்லர் கீழே


No comments

Powered by Blogger.