'சிவராத்திரி'யில் சயன்ஸ் - SCIENCE in 'SHIVARATRI'
இன்று புனித மஹா சிவராத்திரி!
முதலில் மூலாதாரம்:
இரண்டாவது சுவாதிஷ்டானம்:
மூன்றாவது மணிப்பூரகம்:
நான்காவது அனாகதம்:
ஐந்தாவது விசுக்தி:
ஆறாவது ஆக்ஞை (அல்லது ஆக்கினை):
இறுதியாக சஹஸ்ரஹாரம் (அல்லது துரியம்):
இத் திருநாட்களில் தனித்திருந்து, விழித்திருந்து, பசித்திந்ருது இறைவனை வழிபட்டால் இறையருள் கிட்டும்!
அதென்ன தனித்திரு, விழித்திரு, பசித்திரு?
தனித்திரு:
விழித்திரு:
பசித்திரு:
நித்ய சிவராத்திரி:
பட்ச சிவராத்திரி:
மாத சிவராத்திரி:
யோக சிவராத்திரி:
மகா சிவராத்திரி :
முதல் சாமம்:
இரண்டாம் சாமம்:
மூன்றாம் சாமம்:
நான்காம் சாமம்:
சிவனின் நெற்றிக்கண் |
இது எங்கே ஆரம்பித்தது?
இந்த சிஸ்டத்தை வடிவமைத்தது யார்?
அதாவது இந்த உலகத்தை உருவாக்கியது யார்?
சிலருக்கு அது கடவுள் சிலருக்கு BIG BANG THEORY.
வேடிக்கை என்னவெனில் இரண்டுமே இன்னும் Practical லாக நிரூபிக்கப்படவில்லை!
சரி... கடவுள் இருக்கிறாரா இல்லையா?
இந்த கேள்விக்கு 'கேயாஸ் தியரி' மூலமாக பதில் கிடைக்கும் என்று நான் கனவில் கூட நினைத்ததில்லை!
இதற்கு பதில் தேடி நான் அலைந்த போது எனக்கு கிடைத்த ஒரு விளக்கம்!!!
கடவுள் ஒருவரே! என்று கூறும் இஸ்லாமிய மார்க்கம்!
(Light of Sacred Scriptures – Islam – Chapter 112 Verse 124) ல் கடவுள் விளக்கம் கூறப்பட்டிருப்பதாவது:
"கடவுள் ஒருவரே! பிறப்பு இறப்புக்கு அப்பாற்பட்டவர்;
அவருக்கு உருவம், படம், எதுவும் கிடையாது! (Eternal)
சர்வ வல்லமை படைத்தவர் அவரே!"
இஸ்லாமிய மார்க்கத்தில் உருவ வழிபாடு கிடையாது!
ஒரே கடவுள் தான்! கிறிஸ்துவத்திலும் அப்படியாக இருக்கலாம்!
ஆனால் சனாதன தர்மம்? (இந்து சமயம்)
இதில் எத்தனை கடவுளர் உளர்? என்பது தெரியாது (மன்னிக்க!).
ஆனால், மும்மூர்த்திகள் என்ற (Creator, Protector, Destroyer) பிரிவு காணப்படுகிறது.
இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயங்களில் இவை ஒரே பெயரில் அழைக்கப்படுகிறது!
உண்மையில் சனாதன தர்மத்தில் கடவுள் விளக்கம் என்ன தெரியுமா???
இன்னும் ஆச்சரியத்தில் மூழ்கி கிடக்கிறேன் நான்!
வேதம் உபநிடதங்கள் கூறும் விளக்கம் இவை:
"இறைவன் ஒருவனே! வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்! "
(RIG VEDA Book 1 Hymn 164 Mantra 46)
இதே குறிப்பில்,
கடவுளுக்கு 33 பெயர்கள் மட்டுமே உள்ளது.
"இறைவனுக்கு ப்ரதீமா கிடையாது! அதாவது உருவம், படம், ஒளி யாவும் கிடையாது!"
(Yadhur Veda Chapter 32 Verse 3)
இதற்கும் மேலாக, "இறைவன் பிறப்பு இறப்புக்கு அப்பாற்பட்டவர்" என்பதும் கூறப்படிருக்கிறது!!!
[ Upanishads Chapter 6 Verse 9, Chapter 4 Verse 19, Chapter 4 Verse 20, Bhagawat Gita Chapter 7 Verse 20, Yadhur Veda Chapter 40 Verse 8]
கடவுள் என்பவர் இந்த விஷயங்களுக்கு பொருந்தவேண்டும்!
இதில் பொருந்தாதவர் கடவுளாக இருக்கமுடியாது என்பதும் அவை உணர்த்தும் ஒரு உண்மை! (மன்னிக்க!)
சற்று உற்று நோக்கினால், மூன்று சமயங்களும் ஒரே விஷயத்தைதான் சொல்கின்றன என்பது புலப்படும்!
ஆக பிரிவினை உண்டானது மனிதனால்தான் என்பது என் கருத்து!
நாம் நம்பும் ஒரு விஷயத்திற்காக அடுத்தவர் நம்பிக்கையை புண்ணாக்கலாமா?
சக நிகழ்வுகளின் கோர்வை தான் உலக சரித்திரம் என்பது ஒருபுறம் இருக்கட்டும்.
"எந்த ஒரு செயலும் நிகழ்வும் மற்றவரின் செயல்-நடவடிக்கை-மாற்றம் என்பவற்றை பொருத்ததே!"
என்பது கேயாஸ் தியரி!
அதாவது ஆரம்ப நிலையில் ஏற்படும் சிறிய மாறுதல் பெரிய வித்தியாசங்களை ஏற்படுத்தும் என்பதாகும்!
அதாவது ஒரு விஷயத்தின்/செயலின் ஆரம்ப நிலைப்பாட்டை வைத்தே முடிவு இருக்கும்.
[Sensitive Dependence of Complex Systems on Initial Conditions]
இன்னும் ஒரு உதாரணம்!
உங்கள் மூளையில் "இது இப்படி இருக்கலாமோ" என்ற நம்பிக்கையை நான் விதைத்தேன்!
அது உங்களை நம்ப வைத்தது.
எந்த அறிவிப்பும் இல்லாமல் இருந்தால் நீங்கள் இதை நம்பியிருக்க மாட்டீர்கள்!
இதைத்தான் Sensitive Dependence on Initial Conditions என்கிறது கேயாஸ் தியரி!
(சிம்பிளாக சொன்னால் 'தசாவதாரம்' படத்தில் வரும் 'பட்டாம்பூச்சி' தத்துவம்)
ஒரு சாதாரண என்னால், இவ்வளவு கல்வியறிவு இருந்தும் ஒரு விஷயத்தை நம்பவைக்கும் போது,
பெரிய பெரிய பிரிவினைகள் அந்த காலத்தில் எப்படி புகுந்திருக்கும் என யூகிக்க முடிகிறதா???
ஏற்றத்தாழ்வுகள் இப்படித்தான் உருவாகியிருக்கக்கூடும்!
அனைவரும் சமமே!
அறிவியல் பூர்வமாக விளக்கம் என்று சொல்லிவிட்டு புராணக்கதை பேசுகிறானே என எண்ண வேண்டாம்!
அடுத்து அதுதான்!
சிவ தாண்டவம் |
எந்த ஒரு அறிவியல் விஷயமும் எதேனும் தத்துவத்தை சார்ந்தே இருக்கும்!
அதுபோலவே ஒவ்வொரு அமைப்பும்! சமயங்கள் உட்பட!
இன்று வழக்கத்தில் இருக்கும் பிரிவினைகள், சில சம்பிரதாயங்கள் ஏற்றத்தாழ்வுகள் இடையில் புகுத்தப்பட்டவையே என்பது வரலாற்றை உற்று நோக்கினால் தெரியும்! (மன்னிக்க!)
இந்தப் பிரபஞ்சத்தை இன்றைய நவீன விஞ்ஞானம் நாளுக்கு நாள் புதிய புதிய ஆய்வுகளுக்கு உட்படுத்திக்கொண்டே இருந்தாலும், அந்த ஆய்வுகளில் இருந்து முன்னரைவிடவும் பிரபஞ்சம் குறித்த மர்மங்கள் கூடிக்கொண்டே போகின்றனவே தவிர, குறைந்தபாடில்லை.
ஆண்டின் மிக இருண்ட நாளாகிய மஹா சிவராத்திரியில் ஆகாயத்தை நீங்கள் அண்ணாந்து பார்த்தால்,
எட்டாயிரத்திலிருந்து பத்தாயிரம் நட்சத்திரங்களை நீங்கள் எண்ணி முடிக்க முடியும்.
எனவே காலங்காலமாகப் பத்தாயிரம் நட்சத்திரங்களே என்று மக்களால் கருதப்பட்டது.
பிறகு தொலைநோக்கிகளின் மூலம் மேலும் பல நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இரண்டு கோடிக்கும் அதிகமான நட்சத்திரங்கள் இருப்பதாக இப்போது சொல்கிறார்கள்.
எல்லாமே மாயை என்பதைத்தான் இன்றைய விஞ்ஞானம் நிரூபித்துக்கொண்டிருக்கிறது.
மாயை என்று சொன்னால், இல்லாத ஒன்று என்று பொருள் அல்ல.
நீங்கள் எதை நினைக்கிறீர்களோ அதுவல்ல என்பதுதான்
மாயைக்கு அர்த்தம்.
விஞ்ஞான ரீதியாக மகா சிவராத்திரி நாள் மனிதனின் ஆன்ம வளர்ச்சிக்கு மிகப் பெரும் உறுதுணையாக இருக்கிறது.
அந்த நாளில் கோள்களின் அமைப்பானது மனிதர்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு உகந்தவாறு ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்கிறது.
விஞ்ஞான பூர்வமாக எல்லா கோள்களும் ஒரே நேர் கோட்டில் வரும் நாளை தான் மஹா சிவராத்ரியாக வழிபடுகிறார்கள்.
இரவெல்லாம் உறங்காமல் இருக்கிறார்கள்.
அப்போதுதான் முதுகு தண்டு நேர் கோட்டில் இருக்கும் போது 'குண்டலினி சக்தி' மேல் நோக்கி நகரும்.
தியானம் பண்ணாமலே இருந்தால் கூட இது நடக்குமாம்!
இந்த இடத்தில் 'குண்டலினி சக்தி' என்றால் என்னவென்று ஒரு கேள்வி எழுகிறதல்லவா?
குண்டலினி = குண்டம்(நெருப்பு) + அலி(பாலின வேறுபாடுக்கு உட்படாத)
+ னி(உயிர்).
சனாதன தர்மத்தில் (இந்து சமயத்தில்) அடிப் படையான உயிராற்றல் அல்லது உயிர் சக்தியை குண்டலினி என்பார்கள்.
குண்டலினி என்பது சரீரம் சார்ந்த சக்தி!
வேதாந்திகளில் (இந்துக்கள்) சிலர் பாம்பினை வழிபடுகிறார்கள். கடவுளர்களும் பாம்புடன் இருப்பதைப் பல இடங்களில் “சிலை”ப்படுத்தியிருக்கிறார்கள்.
இது தவறா? சரியா? என்பது இந்த இடத்தில் தேவையில்லாதது!
உண்மையில் பாம்பு குண்டலினி சக்தியைக் குறிக்கவே பயன் படுத்தப்படுகிறது.
ஏன் பாம்பு? என்ற கேள்வி எழலாம்.
ஒரு பாம்பு அசையாமல் இருக்கும் போது அது இருப்பதே தெரியாது.
ஆனால் அது சரசர வென்று ஓடும் போது தான் அது இருப்பதை நாம் நன்கு தெரிந்து கொள்ள முடியும்.
குண்டலினியும் இந்தப் பாம்பு போன்றதுதான்.
மனிதனின் முதுகுத் தண்டின் அடிப் பகுதியில் அமைதியாய் இருக்கும்.
அது அமைதியாய் இருக்கும் வரையில் நமக்கு சக்தி இருப்பதே தெரியாது.
யோகம் மற்றும் தியானம் மூலம் அதை எழுப்பும் போதுதான் அதன் அளவிட முடியாத பேராற்றலும் மகத்து வமும் நமக்குப் புரியும்.
'குண்டலினி' யோகா குறியீடு |
குண்டலினியை எழுப்பினால் என்ன செய்ய முடியும்? என்று சொல்வதற்கு முன் மனித உடலில் உள்ள ஆற்றல் மையங்களைப் பற்றிச் சொல்வது அவசியமாகிறது.
சாதாரணமாக மனிதன் உட்கொள்ளும் உணவு செரிக்கப்பட்டு ஆற்றலாக மாற்றப்படுகிறது.
அது என்ன உணவாக இருந்தாலும் அதிலுள்ள புரதம், கொழுப்பு எதுவாயுனும் இறுதியில் பிராண சக்தியாக மாற்றப்படுகிறது.
இந்தப் பிராண சக்தியே வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
(விரிவாக இதை எழுதினால் மனித உடலியல் பற்றிய கட்டுரையாகிவிடும் என்பதனால் சுருக்கமாக முடித்து விட்டேன்.)
இந்தப் பிராண சக்தி மனித உடலில் உள்ள சுமார் 70000 நாடிகள் வழியாகப் பாய்கிறது.
இந்த எழுபதாயிரம் நாடிகளும் ஏழு முக்கிய மைய நாடிகளில் இணைகிறது.
இவற்றையே மனித உடலில் ஏழு சக்கரங்களாக சொல்லப்பட்டுள்ளது.
இவையே ஆற்றல் மையங்கள்.
(கட்டுரையில் ஆற்றல் மையம் என்றாலும் சக்கரம் என்றாலும் ஒரே பொருளாகக் கருத வேண்டுகிறேன்.)
இந்த ஏழு சக்கரங்கள்தான் ஒவ் வொரு மனிதனின் செயல்கள், சாதனைகள், சாகசங்கள் ஆகிய அனைத்துக்கும் காரணமாக இருக்கின்றன.
மனித உடலில் உள்ள இந்த ஏழு சக்கரங்க ளையும் ஒவ்வொன்றாகக் கீழிருந்து மேலாகக் காண்போம்.
முதலில் மூலாதாரம்:
- இது பிறப்புறுப்புக்கும் ஆசன வாய்க்கும் இடையில் அமைந்துள் ளது.
- இந்தச்சக்கரத்தின் முக்கிய செயல் பாடு அனுபவம் மற்றும் தகவல் சேகரிப்பு ஆகும்.
- இச் சக்கரம் நன்கு தூண்டப்பட்ட நிலையில் உள்ள ஒரு மனிதன், உணவு, உறக்கத்தில் அதிக விருப்பம் கொண்டவனாக இருப்பான்.
- இந்த மூலா தாரச் சக்கரம்தான் மனிதனின் வளர்ச்சிக்கு அடிப் படியான முக்கிய தூண்டு சக்தி ஆகும்.
- இந்தச் சக்கரம் பஞ்ச பூதங் களில் நிலத்துக்கு நிகராகச் சொல்லப்படுகிறது.
இரண்டாவது சுவாதிஷ்டானம்:
- இது பிறப்புறுப்புக்கு சற்று மேலாக அமைந்துள்ளது.
- இச்சக்கரத்தின் முக்கிய செயல்பாடு இன்பம் ஆகும்.
- இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட்டுள்ள மனிதன் உலக வாழ்க்கையில் இன்பங்களை அனுபவிக்க நாட்டம் கொள்வான்.
- இந்தச் சக்கரம் நீர்த்தத்துவத்துக்கு உதாரணமாகச் சொல் லப்படுகிறது.
மூன்றாவது மணிப்பூரகம்:
- இது தொப்புளுக்கு அருகில் அமைந்துள்ளது.
- இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு முயற்சி மற்றும் உழைப்பு ஆகும்.
- மணிப்பூரகம் நன்கு தூண்டப்பட்ட மனிதன் கடும் உழைப்பாளியாக வாழ்வில் சிறந்து விளங்குவான்.
- இந்தச் சக்கரம் நெருப்புத் தத்துவத்தை பிரதி பலிக்கிறது.
நான்காவது அனாகதம்:
- இது நெஞ்சுப் பகுதியில் அல்லது இருதயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.
- இந்தச் சக்கரத்தின் முக்கிய குணம் 'அன்பு' ஆகும்.
- (அன்பு என்றால் எல்லோரும் ஏன் நெஞ்சைத் தொடுகிறார்கள்? காதலைக் குறிக்க இதயம் ஏன் குறியீடாக பயன்படுத்தப்படுகிறது? சிந்தியுங்கள்!)
ஐந்தாவது விசுக்தி:
- இது தொண்டைக் குழியில் அமைந்துள்ளது.
- ஆகாயத் தத்துவத்தைக் குறிக்கும் இந்தச் சக்கரத்தின் முக்கிய ஆற்றல் தீமைகளை தடுத்து நிறுத்துவது ஆகும்.
- (ஆலகால விஷம் அருந்திய சிவன் தொண்டையில் விஷம் தடுத்து நிறுத்தப்பட்டது ஞாபகம் வருகிறதா?)
சிவனின் தொண்டையில் ஆலகால விஷம் |
ஆறாவது ஆக்ஞை (அல்லது ஆக்கினை):
- இது மனிதனின் புருவ மத்தியில் அமைந்து ள்ளது.
- ஞானம், பேரறிவு ஆகிய வை வெளிப் படக் காரணமாக அமைவது இந்தச் சக்கரம்தான்.
இறுதியாக சஹஸ்ரஹாரம் (அல்லது துரியம்):
- இது உச்சந் தலை யில் அமைந்துள்ளது.
- தன்னிலை கடந்து ஆன்ம விடுதலையைக் கொடுத்து பேரானந்தத்தை அள்ளித் தருவது இந்தச் சக்கரம்தான்.
- இந்தச் சக்கரம் தூண்டப்படுவது ஆயிரம் தாமரை ஒன்றாக மலர் வதைப் போல் சொல்லப்படுகிறது.
- (சிவபெருமானின் தலையில் பாம்பு இருப்பது தலையில் உள்ள சஹஸ்ரஹாரம் தூண்டப்பட்ட நிலையைக் குறிக்கவே.)
சாதாரண மனிதனுக்கு இந்த ஏழு சக்கரங்களும் முழுமையாகத் தூண்டப்படுவது இல்லை.
பெரும் பாலான மனிதர்கள் முதல் மூன்று சக்கரங்கள் அரைகுறையாய் தூண்டப் பட்டிருப்பதிலே யே வாழ்க்கையை முடி த்துக்கொள்கிறார்கள்.
வெகுசிலர்தான் நான்கு வரை வருகிறார்கள்.
ஏழு சக்கரங்களும் தூண்டப்பட குருவின் துணையும் அருளும் முக்கியம்.
இந்தக் குண்டலினியின் முக்கிய செயல்பாடே இந்தச் சக்கரங்களை முழு அளவில் எழுச்சியூட்டுவதுதான்.
அணையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீர், மதகுகளைத் திறந்தவுடன் முழு வீச்சில் பாய்ந்தோடுவதைப் போல
குண்டலி னியை எழுப்பி சக்கரங்க ளைத் தூண்டும் போது மனிதனின் அளப் பறியா ஆற்றல் வெளிப்படுகிறது!
மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்
இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு கிரகங்கள் மற்றும் கோடான கோடி அண்ட நட்சத்திரங்களின் கதிர்வீச்சுக்கள் நம்மை கடந்து சென்றுக் கொண்டிருகின்றன.
இத்தகைய கதிர்வீச்சுக்களை ஆய்வு செய்த அன்றைய வேதாந்திகள் தம் யோக வலிமையினால் இந்த ரகசியங்களை அறிந்து வெளிப்படுத்தினார்கள்.
அவர்களின் அன்றைய வானவியல் கோட்பாடுகளை ஆய்வு செய்தால் இன்றைய விஞ்ஞானத்தின் ஆணிவேராகத்திகழ்கிறது.
இன்றைய விஞ்ஞானம் பெரிதும் நம்மியிருக்கும் அனைத்து சாதனங்களும் இந்த பிரஞ்சத்திலிருந்து எடுக்கப்பட்டவையே தவிர அவர்களால் உருவாக்கப்பட்டதல்ல.
அவர்கள் சிந்தனை உட்பட அனத்தும் அவர்களால் இயக்கப்பட்டதல்ல.
மார்க்கண்டேயன் முக்தியடைதல் |
சிவன் –இதில் மறைந்துள்ள ஒவ்வொரு எழுத்தின் ஒலி ஓசைக்கான உண்மை விளக்கம் வேறு.
ஆனால் இவற்றை ஒரு சமயம் சார்ந்த விளக்கமாக மாற்றி மதங்களுக்கிடையே விவாதம் செய்து உழன்றுக்கொண்டிருக்கிறார்கள்.
எல்லாம் வல்ல இறைசக்தி ஒவ்வொரு அனுவிலும் இருக்கும் போது பிற மதங்களின் கோட்பாடுகளில் மட்டும் ஏன் இருக்கமுடியாது?
இது நம் சிற்றறிவைதான் குறிக்கிறது.
மனிதன் உடலின் கட்டுப்பாட்டில் இருந்தால் வெளிமுகமாகவும், ஆன்மாவின் கட்டுப்பாட்டில் இருந்தால் உள்முகமாகவும் செயல்படுகிறான்.
சூரிய மண்டலத்தில் ஏற்படும் சில கிரக நிகழ்வுகள் மனிதனை தன்னிச்சையாக உள்முகமாக்குகின்றன.
அமாவாசை, பெளர்ணமி நாட்களில் பூமி-சந்திரன்- சூரியன் ஆகியவை ஒருவிதமான கிரக நிகழ்வுகளில் அமைகிறது.
இதனால் மனிதன் எந்த விதமான சுயமுயற்சியிம் இன்றி உள்முகமாகிறான்.
இத்தகைய நாட்களில் மனிதன் தனது உடல் செயல் மூலம் வெளிமுகமாக திரும்ப முயற்சி செய்தால் அவனது உடலும், மனமும் சமநிலை தவறுகிறது.
மனிதன் சமநிலை தவறாதவண்ணம் அவனை உள்முகமாகவே வைத்திருக்க ஆன்மீக செயலில் ஈடுபடுத்த நமது முன்னோர்கள் ஏற்படுத்தியது தான் இந்த விரதங்கள்.
பார்வதி சிவவிரதமிருந்து அருள் பெறுதல் |
மஹா சிவராத்திரி விரதத்தின் தோற்றம் குறித்து கூறப்படும் புராண கதைகளை பாருங்கள்!
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களாக எட்டுவிரதங்களை கந்தபுராணம் குறிப்பிடுகிறது.
- சோம வார விரதம்
- திருவாதிரை
- உமா மகேசுவர விரதம்
- மகா சிவராத்திரி விரதம்
- கேதார விரதம்
- கல்யாண விரதம்
- சூல விரதம்
- ரிசப விரதம்
என்பன அவையாகும்!
இத் திருநாட்களில் தனித்திருந்து, விழித்திருந்து, பசித்திந்ருது இறைவனை வழிபட்டால் இறையருள் கிட்டும்!
அதென்ன தனித்திரு, விழித்திரு, பசித்திரு?
தனித்திரு:
- ஆசாபாசங்களில் மனதை அழுந்த விடாமல் பற்றற்ற மன நிலையை பற்றிக் கொண்டிருத்தல்.
- எவ்வித கூட்டுறவுகளில் கலந்திருந்த போதிலும் இறைவனை பற்றி இருத்தலே தனித்திருத்தல்.
- மனம் தனித்து அமைதி நிலையில் இறையுணர்வோடு இருத்தல் ஆகும்.
விழித்திரு:
- மனம், புத்தி, சித்தம், அகங்காரம் முதலிய காரணங்களை அன்புக்குரிய நன் முயற்சியில் ஈடுபடுத்தி
- பொய், பொறாமை, காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் முதலான துவேச உணர்வுகளிலிருந்து தடுத்துப் பழகுதலே விழித்திருத்தல்.
- விழிப்புடன் இருத்தல் ஆகும்.
பசித்திரு:
- பசியோடு இதிருந்தால்தான் புசிக்கலாம்.
- ஆண்டவர் அருளமுதம் அருந்த அருட்கணல் ஏற்றி அவாக் கொள்ளுதலே பசித்திருத்தல்.
- முழுமை சித்தி அடையும்வரையில் ஞானப் பசியுடன் இருத்தல் ஆகும்.
ப்ரமனும் விஷ்ணுவும் சிவனின் அடி முடி தேடிய பயணத்தை ஆரம்பித்தல் |
மகா சிவராத்திரியின் மகிமையை ஆகமங்கள், சிவபுராணம், ஸ்காந்தம், பத்மம் உள்ளிட்ட பத்து புராணங்களும் குறிப்பிடுகின்றன. மகாசிவராத்திரியானது சிவனுக்கு உரிய இரவு என பொருள்படும்.
மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசி திதியன்று வருவது மஹா சிவராத்திரி.
வேத பிரிவுகளில் சாமவேதமும், நதிகளில் கங்கையும், பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாகிய சிதம்பரமும் எப்படி உயர்ந்ததோ அதே போல விரதங்களில் உயர்ந்தது மஹா சிவராத்திரி விரதம் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன.
சிவனுக்குரிய விரதங்களாக நித்ய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பக்ஷசிவராத்திரி, யோக சிவராத்திரி, மஹா சிவராத்திரி என்று வருடம் முழுவதும் கொண்டாடப்பெற்று வந்தாலும் மஹா சிவராத்திரி விரதம் எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பானது என புராணங்கள் கூறுகின்றன.
நித்ய சிவராத்திரி:
- ஒவ்வொரு மாதமும் தேய்பிறை, வளர்பிறை, சதுர்த்தசி திதிகள் ஆகியன நித்திய சிவராத்திரி எனப்படும்.
- ஒவ்வொரு சதுர்தசியிலும் சிவனை நான்கு காலங்களிலும் முறைப்படி பூஜை செய்ய வேண்டும்.
- இப்படி ஒரு வருஷத்தில் இருபத்தி நான்கு சதுர்தசியில் இரவில் பூஜை செய்து வழிபடுவதற்கு நித்திய சிவராத்திரி என்று பெயர்.
பட்ச சிவராத்திரி:
- தை மாதம் தேய்பிறை பிரதமையன்று தொடங்கித் தொடர்ந்து பதின்மூன்று நாட்கள் இரவில் சிவபூஜை செய்ய வேண்டும்.
- பின்னர் சதுர்த்தசியில் பூக்ஷையை நிறைக்க வேண்டும்.
- நான்கு காலத்திற்குப் பதில், பக்ஷ சிவராத்திரியில் ஒரு காலம் பூஜை செய்தால் போதுமானது என்பது கொள்கை.
- ரோகங்கள் விலகவும், உன்மத்த ரோக சமனம் ஏற்படவும், இது துணையாவது. இதை ரோகிகளுக்காக மற்றவர்கள் கூடச் செய்யலாம்.
மாத சிவராத்திரி:
- ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் இந்த விரதம் வரும்.
- சித்திரையில் தேய்பிறை அஷ்டமி, வைகாசியில் வளர்பிறை அஷ்டமி, ஆனியில் வளர்பிறை சதுர்த்தி, ஆடியில் தேய் பிறை பஞ்சமி, ஆவணியில் வளர்பிறை அஷ்டமி, புரட்டாசியில் வளர்பிறை திரயோதசி, ஐப்பசியில் வளர்பிறை துவாதசி, கார்த்திகையில் வளர்பிறை சப்தமி, மார்கழியில் வளர்பிறை சதுர்த்தசி, தை மாதம் வளர்பிறை திருதியை, மாசியில் தேய் பிறை சதுர்த்தசி (மகா சிவராத்திரி), பங்குனியில் வளர்பிறை திரிதியை ஆகிய நாட்களில் இந்த விரதம் இருக்க வேண்டும்.
- சிவலோகத்தையும், சிவசாயுஜ்யத்தையும் அடைவார்கள்.
- மாத சிவராத்திரிகளில் சிவபூஜை செய்பவர்களுக்கு சுகவாழ்வும் பரத்தில் கைவல்யமும் கிட்டும்.
யோக சிவராத்திரி:
- திங்கட்கிழமையன்று அறுபது நாழிகையும் அமாவாசையாக இருந்தால் அந்த அமாவாசை யோகிகளுக்கு மிகவும் உயர்ந்தது.
- சித்தர்களுக்கு மிகவும் சிறந்தது.
- இது யோக சிவராத்திரி எனப்படும்.
- யோக சிவராத்திரியில் யோகியானவன் யோக பூஜை செய்ய வேண்டும்.
- யோக சித்தியை இது வழங்கும்.
- யோகியர் அல்லாத மற்றவர்கள் யோக சிவராத்திரியில் பூஜித்தால் ஆத்ம ஜோதியில் சிவத்தைத் தரிசனம் காண ஏதுவாகும்.
மகா சிவராத்திரி :
- மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி
- மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே சிறப்புடையது.
- பல்வேறு வகையான பெரிய நலன்களை இது வழங்குவது.
- மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது.
- மஹா சிவராத்திரியில் நான்கு காலங்களிலும் இரவில் பூஜை செய்ய வேண்டும்.
- சிவபஞ்சாயதனம் கைக்கொண்டவர்கள் இரவில் பூஜையைத் தரித்து நற்பலன் பெற வேண்டும்.
அர்ச்சுனனும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் சிவனை பணிந்து 'பாசுபதம்' எனும் அஸ்திரத்தை பெறுதல் |
ஒவ்வொரு ஆண்டும் உத்தராயண சிசு ருதுவில் குளிர் காலத்தில், மாசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தியில் இரவு 14 நாழிகைக்கு மேல் 16 நாழிகைக்குட்பட்ட வேளை தான் மகா சிவராத்திரி எனப்படும்.
உத்தமோத்தம சிவராத்திரி, உத்தம சிவராத்திரி, மத்திம சிவராத்திரி, அதம சிவராத்திரி என மகா சிவராத்திரியானது நான்கு வகைப்படும்.
சூரியன் அஸ்தமிக்கும் வரை திரயோதசி திதியிருந்து, அதன் பிறகு சதுர்தசி வந்து, அந்த இரவும், மறுநாள் பகலும் முழுவதுமாக சதுர்தசி திதியிருந்தால் அது உத்தமோத்தம சிவராத்திரி.
சூரியன் அஸ்தமித்த பிறகும், இரவின் முன் பத்து நாழிகையிலும் சதுர்தசி திதி வந்தால் அது உத்தம சிவராத்திரி.
காலை முதல் மறுநாள் சூரிய உதயம் வரை வரும் சதுர்தசி திதியும், சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பே வரும் சதுர்தசி திதியும், இரவின் பத்து நாழிகைக்குப் பிறகு வரும் சதுர்தசி திதியும் மத்திமம்.
இரவில் 20 நாழிகை அளவு சதுர்தசி திதியிருந்து, அதன் பின் அமாவாசை வந்தால், அது அதமம்.
(1 நாழிகை = 24 நிமிடங்கள்)
மகாசிவராத்திரி வழிபாட்டில் முக்கியமான ஆறு அம்சங்கள்
- சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். இது ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலைக் குறிக்கும்
- லிங்கத்திற்கு குங்கும் அணிவித்தல் நல்லியல்பையும் நல்ல பலனையும் வழங்கும்.
- உணவு நிவேதித்தல் நீண்ட ஆயுளையும் விருப்பங்கள் நிறைவேறுவதையும் குறிக்கும்.
- தீபமிடுதல் செல்வத்தை வழங்கும்.
- எண்ணெய் விளக்கேற்றுதல் ஞானத்தை அடைதலைக் குறிக்கும்.
- வெற்றிலை அளித்தல் உலக இன்பங்களில் திருப்தியைக் குறிக்கும்.
பகீரத மன்னன் ஆகாய கங்கையை பூமிக்கு அழைத்தல் |
இந்த ஆறு அம்சங்களும் வீட்டிலாவது கோயிலிலாவது சிவராத்திரியை அனுஷ்டிக்கும் போது இறைவனுக்கு வழங்கப்படவேண்டியவை என்று புராணங்கள் கூறுகின்றன.
வீட்டில் பூஜை செய்வதாக இருந்தால், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூஜையைத் துவக்க வேண்டும்.
ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம்.
சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க வேண்டும்.
சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம்.
பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும்.
சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா,பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும்.
கோயில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும்,
சிவன் கோயிலுக்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம்.
சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களுக்கான பொருட்களை வாங்கி கொடுத்து பூஜையில் கலந்து கொள்ளலாம்.
கண்ணப்ப நாயனார் முக்தியடைதல் |
சிவராத்திரியின் போது இரவு நான்கு யாமங்களாகப் பிரிக்கப்படுகிறது.
அந்த நான்கு யாமங்களிலும் சிவலிங்கத்துக்கு விசேடமாக அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன.
அந்த யாமப் பூசைகளின் போது எவையெவற்றால் வழிபடவேண்டும் என்பதை புனித நூல்கள் எடுத்துக் கூறுகின்றன.
முதல் சாமம்:
- இந்த முதல்கால பூஜை,
- படைக்கும் தேவன் "பிரம்மா" சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும்.
- இந்த கால பூஜையில் "பஞ்ச கவ்வியத்தால்" (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது.
- இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.
இரண்டாம் சாமம்:
- இந்த இரண்டாவது காலை பூஜையை காக்கும் தேவன் "விஷ்ணு". சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும்.
- இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணை தீபத்துடன், இரண்டாவது கால பூஜை யஜுர்வேத பாராயணத்துடன் நடத்தப்படுகின்றது.
- இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன தானிய சம்பத்துக்கள் சேரும்.
மூன்றாம் சாமம்:
- இந்த பூஜை சக்தியின் வடிவமாக அம்பாள் பூஜிப்பதாகும்.
- இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து "எள் அன்னம்" நிவேதனமாக படைத்து, இலுப்பை எண்ணை தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது.
- இந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதை லிங்கோத்பவ காலம் என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம்.
- இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.
நான்காம் சாமம்:
- இந்த நான்காவது கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது.
- குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு & பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் சுத்தான்னம் நிவேதனமாகப் படைத்தும், தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது.
சிவராத்திரி சமயத்தில் மட்டும் கிடைக்கும் சிவகரந்தை எனும் பத்ரம் (இலை) கொண்டு அர்ச்சனை செய்வது மிகப் பெரும் பலன்களையும் அருளையும் தரக் கூடியது.
கீழே கூறப்பெற்றுள்ள அதிசய நிகழ்வுகள் இப்புனித தினத்தில் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன:
- அம்மை, அப்பனை நோக்கிக் கடுந்தவமியற்றி அப்பனின் இடப்பாகத்தில் இடம் பெற்று உமையொருபாகனானது.
- அருச்சுனன் தவம் செய்து பாசுபதம் எனும் ஆசுகம்(அஸ்திரம்,அம்பு) பெற்றது.
- கண்ணப்ப நாயனார் தன் கண்களையீந்து முத்தி பெற்றது.
- பகீரதன் ஒற்றைக் காலில் கடுந்தவம் புரிந்து கங்கையை பூமிக்கு வரவழைத்த நாள்
- மார்க்கண்டேயருக்காக எம்பெருமான் காலதேவனை தண்டித்த நாள்.
அர்த்தநாரிஸ்வரர் |
மிக உயர்வான இந்த மகா சிவராத்திரி விரதத்தை அனுஸ்டித்து சிவபெருமானை வழிபட்டு அனைத்து செல்வத்தையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் அடைவோமாக!
'ஓம் ஷிவாயநமஹ'
Post a Comment