Search This Blog

சீயான் விக்ரமின் 'ஐ' விமர்சனம் - 1000c வசூலா? சேச்சே... அதுக்கும் மேல!


இந்தப் படத்த இன்னிக்கு கல்முனை G.K சினிமாஸ்ல (இலங்கை) 2.30 சோ பார்த்தேன்... முதல் சோக்கு டிக்கட் கெடைக்கல... இன்னும் 3 நாளைக்கு புல் புக்கிங்காம்... ஒரு நாளைக்கு மொத்தம் 4 சோ போட்றாங்க! 
இலங்கையில கிட்டத்தட்ட 22 தியேட்டர்ல ரிலிஸ்! 
இதெல்லாம் வச்சி பார்க்கும்போது இங்கய்யே ஒரு 200c தேறிடும்போல!

முதலிலேயே நான் ஏன் படத்துக்கு இவ்வளவு ஆர்வமா போனேன்? என்கிற காரணத்த சொல்லிடறேன்!
விக்ரம், விக்ரம், விக்ரம் அப்புறமா சங்கர்!

ஒரு சீயான் விக்ரம் ரசிகனா, எனக்குள்ள ஒரு ஏக்கம் இருந்துச்சு... 
என்னடா... நம்ம சீயான் 
ஒரு 10 வருசமா... சொல்லிக்கிற அளவுக்கு பெரிய ஹிட்டு ஒன்னும் தரலியே! அப்டின்னு... 
தெய்வத்திருமகள், பீமா, கந்தசாமில்லாம் எங்களுக்கு பத்தாதுங்க... 
எங்க தேவை... 
அதுக்கும் மேல!

சரி ஐ படம் என் எதிர்பார்ப்பையெல்லாம் நிறைவேத்திடுச்சானு 
பார்த்தா... ஹே ஹே... 
அதுக்கும் மேல.... கொண்டாடிட்டேன்!

சரி இனி படத்தோட விமர்சனம்...



படத்தை இயக்கியிருப்பது சங்கர். 
இதுவரைக்கும் வந்த சங்கர் படங்கள்லேயே இது கொஞ்சம் டிவ்ப்ரெண்ட்!
காரணம்... 
சங்கர் படங்கள்ல எப்போதுமே கடைப்பிடிக்கப்படும் ஸிட் ஃபீல்டின் திரைக்கதை விதி இங்கே சற்றே மீறப்படுகின்றது.

ஸிட் ஃபீல்டின் விதி என்ன சொல்லுதுன்னா...
ஆரம்பம் – நடுப்பகுதி – முடிவு = Setup – confrontation – Resolution .
இந்த மூன்று பகுதிகளே, திரைக்கதையின் துண்டுகளை ஒன்றிணைத்து, முழுக்கதையாக்கும் பகுதிகள்... இன்னும் நெறைய சொல்லியிருக்கார்... 
அது நமக்கிப்போ வேணாம்!
(குறும்படம் ஒன்று இயக்கவிருப்பதால்... இதையெல்லாம் படித்தேன்!)

ஆனால் ஐ யின் திரைக்கதை non linear... 
அதாவது ஒரு சீனுக்கும் இன்னொரு சீனுக்கும் தொடர்பில்லாமல் கொண்டு சென்று 
இறுதியில் தொடர்புபடுத்துவது.. 
இதனால்தான் இது என்று புரியவைப்பது...
இதற்கு அதிக கெட்டித்தனம் வேண்டும்.
சங்கர் கெட்டிக்காரர்தானே! சிறப்பாக கையாண்டிருக்கிறார்.

கதை சுபா என்றார்கள். 
ஆனால் சுஜாதாவின் பாதிப்பு அதிகம் இருந்ததாக எனக்குப் பட்டது.

சுஜாதாவின் கதையில் இதெல்லாம் சகஜம்.

  • ஹீரோயின்... ஒரு படி தாண்டிய பத்தினி! அதாவது... பல ஆண்களுடன் சுற்றுவார். கட்டிப்பிடிப்பார். சமயத்தில் முத்தம்கூட கொடுத்து வாங்குவார். ஆனால், படுக்கையறைப் பகிர்வு ஒருவனுடன் மட்டுமே! (சிலவேளை... இருவருடன்!)
  • ஹீரோ மிகவும் அழகானவன். மென்மையானவன்.
  • ஹீரோவுக்கு ஒரு பிரச்சினை என்றால்... ஹீரோயின் காப்பாற்றுவாள். வில்லன்களை ஹீரோயின்தான் பழிவாங்குவாள். ஹீரொவை காதலிக்க மட்டுமே யூஸ் பண்ணுவாள். அடிப்படையில் ஹீரொவை விட ஹீரொயின் திறமைசாலியாக இருப்பாள்.
  • வில்லன் பெண்களின் உடலை தடவுவதிலும் அவர்கள் உள்ளாடைகளை தொடுவதிலும் இன்பமடைவான். சில நேரத்தில் ஹீரொவும் இதை செய்வான்.
  • வில்லனுக்கும் ஹீரொவுக்கும் பிரச்சினை ஹீரொயினால்தான் ஆரம்பிக்கும். வில்லன் ஹீரோவை விட திறமைசாலி. ஆனால் கெட்டவன். கூட இருந்தே குழி பறிப்பான். அனேகமாக கதையில் வரும் ஒரு மரியாதையான கெரக்டர். கடைசிப் பக்கத்தில் வில்லனின் மரியாதை ஹீரொயினால் கிழித்தெறியப்படும்!

ஆனால் ஐ கதையில் சில வித்தியாசங்கள் இருக்கின்றன.


  • ஹீரோ ஆணழகன். பலசாலி. அத்தோடு வில்லன்களைவிட திறமைசாலி.
  • ஹீரொவுக்கும் ஹீரொயினுக்கும் இடையில் மிக ஆழமான காதல் இருப்பது.
  • ஹீரொதான் வில்லனை பழி வாங்குகிறான்.


...இவற்றினை சுபா இரட்டையர்கள் உருவாக்கியிருக்ககூடும்.

இனி கதையென்று பார்த்தால்... சொல்லமாட்டேன்... திரையில் பார்த்துக்கோங்க...  plz

படத்தின் மேக்கிங்க் சூப்பர்... பாடல்கள் சூப்பர் ஹிட்!
இதற்கு சங்கரோடு P.C.ஸ்ரீராம்(ஒளிப்பதிவு), A.R.ரஹ்மான்(இசை), அண்டனி(எடிட்டிங்க்) போன்றோர் துணை நிற்கிறார்கள்.

படம் செம வேகம். 2ம் பாதி நகர்வதே தெரியவில்லை. hats off அண்டனி.

சண்டைப் பயிற்சியாளர்களையும் பாராட்ட வேண்டும். 

மிக மிக முக்கியமாக  weta workshop பற்றி சொல்லியே ஆகவேணும். படத்தின் சிறப்பே மேக்கப்தான். இதற்கு காரணம் இவர்கள்தான்!




 படத்தில் எமி இப்படியெல்லாம் வருகிறார். கதைப்படி அவர் ஒரு மொடல் என்பதால்.... இது கண்டிப்பாய் தேவை!

அடுத்து நம்ம ஹீரோ... எங்கள் சீயான் விக்ரம்... 
என்ன சொல்வது? 
சும்மா சிக்ஸர் சிக்ஸரா அடிச்சுதள்ளுறார். 

சண்டைக்காட்சிகளில் வெறித்தனம் காட்டும் சீயான், 
காதல் காட்சிகளில் தென்றலாய் மாறிவிடுகிறார்.
எனக்கு தெரிந்து திரையில் சந்தானத்தை ஓவர்டேக் பண்ணிய ஒரே நடிகர் நம்ம சீயாந்தான்! 

"கெமிஸ்ரி வரவில்லை" என்று சொல்லும் ஆர்ட் டிரைக்டரிடம் 
"நான் கெமிஸ்ரில முட்டை, பிஸிக்ஷ்ல ஸ்ற்றோங்க்!" என்று சொல்லும் காட்சியில் தியேட்டரே கலகலத்தது!

வில்லனை பார்த்து "ஜோன், யு ஆ கோன்(gone)" என்று சொல்வதாகட்டும் "சும்மா... தண்ணி காட்டினேன்" என்பதெல்லாம் தெறி மாஸ்!




my dear சீயான்- நீங்க அடுத்த கமலா? அதுக்கும் மேல.

படம் பார்த்துட்டு இருக்கும்போது பக்கத்தில இருந்த ஒரு அறிவாளி சொல்லுது 
"என்ன இருந்தாலும் விக்ரம் பன்றது தப்புப்பா. முதலாளிய அவரு மீடியா கிட்ட காட்டிகொடுத்திருக்ககூடாது" 

நான் சொன்னேன் 
"விக்ரம் இப்போ மொடலா இருந்தாலும் அடிப்படைல நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர். இவரு விளம்பரபடுத்துர பொருள அதிகமா யூஸ் பண்ணப்போறது அந்த மக்கள்தான். அதனால அவருக்கு அக்கறை கண்டிப்பா இருக்கும். 
அவர் பண்றது சரிதான்! 
அதுவும் இல்லாம பணத்துக்காக ஒரு தப்பான பொருள மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்க்குறது தேசத்துரோகத்தைவிட கொடுமையான செயல். தான் இல்லேன்னாலும் அந்த முதலாளி இன்னொரு மொடல வச்சி இத பண்ணிடுவாங்கிறதுனால... 
அவன மாட்டிவிட்டது தப்பேயில்ல!"

கொஞ்ச நேரம் கழித்து அதே மேதாவி என்கிட்ட கேட்கிறான்
"நீங்க ஒரு ஆசிரியர். நீங்களே இப்படி கை தட்டி விசிலடிக்கலாமா?"

அவருக்கு என் பதில்... வேணாம்!

மொத்தத்தில...

ஐ - தமிழ் சினிமாவின் மைல் கல்லா? அதுக்கும் மேல!


No comments

Powered by Blogger.