கால எந்திரம் - THE TIME MACHINE
என்றாவது ஒரு நாள், உங்கள் வீட்டின் கதவு தட்டப்பட்டு,
யார் வந்தது என்றுப் பார்த்தால்...
ஒரு சிறுமி நின்றுக்கொண்டு
"நான் உங்களின் கொள்ளுப்பேரனின், பேத்தியின்,கொள்ளுப்பேத்தி"
என்றுச் சொன்னால், டமாரென்று கதவை மூடி விடாதீர்கள் !
அவள் கூறுவது உண்மையாக இருக்கலாம்!
ஆயிரம் ஆண்டுகளுக்கு அப்பாலிருந்து கால இயந்திரம் எனப்படும் Time Machine துணையோடு உங்களை காண வந்தவளாக இருக்கலாம்!
நவீன அறிவியல் நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு வளர்ந்துவிட்ட இன்றைய சூழ்நிலையிலும்,
அதை நோக்கிக் கேட்கப்படும் முக்கிய கேள்வியாக இருப்பது,
“காலத்தினூடாகப் பயணம் செய்ய முடியுமா?” என்பதுதான்.
ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே கேட்கப்பட ஆரம்பித்த இந்தக் கேள்வி, இன்றுவரை கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
ஐன்ஸ்டைனின் ‘சார்புக் கோட்பாடு’ (Theory of Relativity) மூலம் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கேள்வி,
‘கால இயந்திரம்’ (Time Machine) ஒன்றை உருவாக்கி
இறந்தகாலம், நிகழ்காலம் ஆகியவற்றிற்கு மனிதன் பயணம் செய்வதாகப் புனையப்பட்ட கதைகளையும், திரைப்படங்களையும் ஏராளமாக நமக்குத் தந்திருக்கிறது.
ஆனால் நிஜத்தில் இன்னும் சாத்தியப்படவில்லை.
Albert Einstein |
இப்போது அதே கேள்வியை மீண்டும் நமக்குள்ளே கேட்டுக் கொள்வோம்.
‘உண்மையிலேயே நாம் எதிர்காலத்திற்கோ, இறந்தகாலத்திற்கோ சென்றுவர முடியுமா?’
அதற்கு ‘முடியும்’ என்றுதான் பதில் சொல்கிறது அறிவியல்.
மறுக்கவே முடியாத கணிதச் சமன்பாடுகள் மூலம்,
காலப் பயணம் சாத்தியமே என்று நிறுவுகிறது.
இறந்த காலத்துக்கோ, எதிர்காலத்துக்கோ நம்மால் பயணம் செய்ய முடியும் என்று அறிவியல் சொல்கின்றது என்றால்,
‘நாம் ஏன் இன்னும் அந்தக் காலங்களுக்குப் பயணம் செய்யவில்லை?’
என்ற கேள்வியும் நமக்கு எழுவது இயல்புதானே!
இன்றுவரை நம்மால் காலத்தினூடாகப் பயணம் செய்ய முடியவில்லையென்றால்,
அது சாத்தியமற்றது என்றுதானே அர்த்தமாகின்றது.
நிகழ்காலத்தில் நம் கண் முன்னால் எல்லாமே நடந்து கொண்டிருக்கின்றது.
ஆனால், நடந்து முடிந்து, இறந்து போன காலத்துக்கு நம்மால் மீண்டும் செல்லலாம் என்று யாராவது சொல்லும்போது,
நம்ப முடியாமல் நமக்குள் ஒரு கேலிச் சிரிப்பொன்றுதான் வெளிப்படும்.
நேற்றைக்கோ, முந்தா நேற்றைக்கோ நம்மால் மீண்டும் செல்லலாம் என்று சொன்னால்
அதை எப்படி நம்பமுடியும்?
இறந்துபோன மனிதரையும், இறந்துபோன காலத்தையும் எப்படி நாம் திரும்பிப் பார்க்க முடியும்?
கனவிலோ, கற்பனையிலோ அது சாத்தியமாகலாம்.
நிஜத்தில் அது எப்படிச் சாத்தியமாகும்?
“இல்லை, நாம் நினைப்பது அனைத்தும் தவறு.
அவையெல்லாம் சாத்தியம்தான்” என்று சொல்கிறது நவீன இயற்பியல்.
‘காலம்’, ‘வெளி’ (Time, Space) ஆகிய இரண்டைப் பற்றியும் சரியாக நாம் புரிந்து கொள்ளாத வரையில்,
இவை சாத்தியமற்றவை என்றுதான் நினைத்துக் கொள்வோம். இவற்றைப் பற்றிப் புரிந்துகொண்டுவிட்டால்,
இவற்றின் சாத்தியங்களும் நமக்குப் புரிய ஆரம்பிக்கும்.
காலத்தினூடாகப் பிரயாணம் செய்வதற்கு நமக்குத் தேவையானது வேகம்.
சாதாரண வேகம் இல்லை, ஒளியின் வேகம்.
ஒளி எவ்வளவு வேகமாகச் செல்கிறதோ,
அந்த வேகத்தை நாம் அடைய முடியுமானால், நம்மால் காலத்தினூடாகப் பயணம் செய்ய முடியும் என்கிறது அறிவியல்.
நேற்று மாட்டு வண்டியில் ஊர்ந்து சென்ற நம் வேகம்,
படிப்படியாகக் கார், விமானம், ராக்கெட் என்று வேகத்தில் இன்று அதிகரித்து நிற்கிறது அல்லவா?
அதுபோல, நாளை ஒளியின் வேகத்திலும் நாம் பயணம் செய்யும் வேளையும் வரும்.
அப்போது, காலத்தினூடாக நம்மால் பிரயாணம் செய்ய முடியும் என்கிறது அறிவியல்.
ஒளியின் வேகம் என்பது ரொம்ப அதிகமெல்லாம் கிடையாது.
வெறும் 3 இலட்சம் கிலோமீட்டர் ஒரு செக்கனுக்கு.
சரியாக வாசியுங்கள்,
ஒரு செக்கனுக்கு மூன்று இலட்சம் கிலோமீட்டர் வேகத்தில் ஒளி பயணம் செய்யும்.
இதுவரை நம் அறிவின்படி, அதிக வேகமாகச் செல்லக் கூடியது ஒளிதான்.
ஒளியை விட வேறு எந்தப் பொருளும் வேகமாகப் பயணிக்க முடியாது என்கிறது இன்றைய அறிவியல்.
ஒருவேளை ‘ஏதாவது ஒன்று’ ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்தில் சென்றால்,
அல்லது அந்த ‘ஏதாவது ஒன்று’ நாமாக இருந்தால்,
நம்மால் எதிர்காலத்திற்குப் பயணம் செய்ய முடியும்.
பிரதானமாய் நம் அனைவரிடமும் பொதுவான ஓர் ஆசை உண்டு.
இன்னொரு இன்னிங்ஸ்!
நிகழ்கால வாழ்க்கைக்கு மறுவாய்ப்பு!
யாருக்குமே வாழ்க்கை தப்பு, தவறு இன்றி அமைவதே இல்லை.
அதன் வினைப் பயன் வாழ்க்கையின் நிகழ்வுகளை அடுத்தடுத்து பாதி்த்துக்கொண்டே வருகிறது சங்கிலித் தொடராய்.
இதில் பாமரன், ஞானி என்று யாரும் விதிவிலக்கில்லை.
‘அன்று அந்த நேரத்தில் அப்படிச் செய்ததால் அல்லது செய்யாமல் போனதால்
இதோ இன்று என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது’
என்ற அயர்வு,ஆயாசம் நம் எல்லோரிடமும் உண்டு.
‘அப்படியெல்லாம் இல்லை. என் வாழ்க்கை பக்கா.
நான் பிறந்த நொடியிலிருந்து இப்பொழுதுவரை அனைத்தும் நலம்’
என்று சொன்னால் -
சற்றுத் தள்ளிநில்லுங்கள் நீங்கள் வேற்று கிரகவாசி!
மறுவாய்ப்பு ஒன்று கிடைத்துவிட்டால் போதும்;
நிகழ்ந்துவிட்ட தவறுகளை அழித்துவிட்டு புதிதாய் வாழ்க்கையைத் துவக்கலாம்.
மீண்டும் புதிதாய்ப் பிறக்க வாய்ப்பளித்தால்,
என் அனுபவம் உணர்த்திய பாடத்தால் இம்முறை சிறப்பாய் வாழ்ந்துவிடுவேன்.
இப்படியான எண்ணவோட்டம் நம் அனைவருக்கும் உண்டு.
எனவே பின்னோக்கிச் செல்லும் தேவையும்
கால எந்திரமும் ஒரு வசதியான கற்பனை நமக்கு.
காலம் மூலம் பின்நோக்கி செல்லுதல் சாத்தியம் என்பதை நான் விளக்குகிறேன்.
ஒரு பொருளை நாம் பார்க்க பயன்படுவது அதன் மேல் பட்டு வெளிப்படும் போட்டான்ஸ் (photons).
பூமி போட்டான்ஸ் வெளியிடமுடியாது,
ஏனெனில் இது கிரகம்.
சூரியனால் முடியும் , ஏன்? அது நட்சத்திரம்.
இப்ப நம்மால் பார்க்க சாத்தியம் ஆவது போட்டான்ஸ் ஒரு பொருள் மேல போய் மோதுவதால் .
உங்களுக்கு எல்லாருக்கும் தெரியும்
சூரியனிலிருந்து புறப்பட்டு ஒரு போட்டன்ஸ் (light) பூமியை அடைய 8 min 24 sec ஆகும்.
அதாவது சூரியனில் ஒளி வெளிப்பட்டுவிட்டது,
செயல் நடந்து விட்டது.
ஆனால் அதை நாம் பார்த்தல் மூலம் அறிய 8 min 24 sec ஆகும்.
இதே நாம் இன்னும் தூரத்தில் இருந்தால் இன்னும் தாமதமாகும்.
அதாவது நெப்டியூன் கிரகத்தை பொறுத்தவரை அந்த செயல் நடைபெறவில்லை.
ஏனென்றால் ஒளி இன்னும் சென்றடையவில்லை.
இதுதான் கால பின்னோக்கி செல்லுதலை நிருபிக்கிறது.
அதாவது ஆற்றல் அழிவின்மை விதிப்படி நடந்த நிகழ்ச்சிகளின் காட்சிகளால் வெளிபடுத்தப்பட்ட போட்டான்கள்
சென்று கொண்டே இருக்கும்.
நாம் ஒளியை அதாவது போட்டானை விட வேகமாக சென்று பார்த்தால் அதனை அறிய முடியும்.
இது தான் time travel என்கிறோம்.
அப்படிஎன்றால் எதிர்காலத்திலிருந்து நம் காலத்திற்கு யாராவது வந்திருப்பார்களே என்று நீங்கள் கேக்கலாம்.
அவர்கள் காட்ச்சிகளைதான் பார்க்க முடியும்
செயல் முடிந்து விட்டதால் அதில் பாதிப்பை ஏற்படுத்த முடியாது.
அதாவது one dimension -னில் மட்டும் கால பின்னோக்கி செல்லுதல் சாத்தியம்.
Tycho Brahe |
அதுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்
டைஹோ பிராகி 1624 -ல் ஒரு நட்சத்திர வெடிப்பை பார்த்து பதிவு செய்தார்.
அது அந்த நிமிடம் நடந்த நிகழ்வு இல்லை.
அது நடந்து பல நூற்றாண்டுகளுக்கு பின்தான் அறியப்பட்டது.
ஏனென்றால் அந்த நட்சத்திரத்துக்கும் பூமிக்கும் தூரம் அதிகமாவதால் ஒளி நம்மை அடைய அவ்வளவு காலம் ஆயிற்று.
இந்த நொடியே சூரியன் வெடித்து அழிந்தால் கூட
அதை நாம் அறிய 8 min 24 sec ஆகும்.
இதனால் ஒளியின் வேகத்தைவிட வேகமாக பயணித்தால் இறந்த காலத்திற்குதான் செல்ல முடியும்(அறிய முடியும்),
எதிர் காலத்திற்கு அல்ல.
எனக்கு time machine மூலம் எதிர் காலத்திற்கு செல்வோம் என நம்பிக்கை இல்லை.
சிலர் parallel universe எனும் கோட்பாட்டின் படி இரண்டும் சாத்தியம் என்கிறார்கள்.
negative velocity ல பயனிச்சா எதிர் காலத்திற்கு செல்லுதல் சாத்தியமாகலாம்.
பொருளில் மற்றம் செய்யாமல் காலத்தை மட்டும் முன் நோக்கி அல்லது பின்னோக்கி நகர்த்தி பார்க்க முடியுமா?
உதாரணமாக 2100 ம் ஆண்டு இலங்கை எப்படி இருக்கும் என்பதை உங்கள் உடலில் மற்றம் இல்லாமல் 2100 ம் ஆண்டுக்கு சென்று பார்ப்பது ..
இது சாத்தியமா ?
சாத்தியம் என்கிறார் Stephen Hawking.
Stephen Hawking |
இவ்வகை காலப்பயணம் செய்ய Warm Hole (வோர்ம் ஹோல்) என்னும் அமைப்பு தேவை படும்.
வார்ம்ஹோல் என்பது, விண்வெளியின் இரண்டு இடங்களை ஒன்றுசேர்க்கும் ஒரு நீளமான குழாய் (Sphere shaped)
குழாயின் இரண்டு பக்கங்களிலும் ஓட்டைகள்.
குழாயின் நீளம் என்பது அந்த ஓட்டைகளுக்கு இடையே இருக்கும் தூரம்.
ஓட்டைகள் = விண்வெளியின் இரண்டு தனிப்பட்ட இடங்கள்.
இரண்டுக்கும் இடையே எத்தனை தூரமோ அத்தனை நீளத்தையும் கடந்தால்தான் மறுபக்கம் போய்ச்சேர முடியும்.
இந்த வார்ம்ஹோல் இயற்கையாக உருவாகவே முடியாது.
புவியீர்ப்பு விசையை இஷ்டத்துக்குக் கட்டுப்படுத்த முடிந்த,
அறிவிலும் விஞ்ஞானத்திலும் பலமடங்கு முன்னேறிய
உயிரினங்கள்தான் இப்படி ஒரு வார்ம்ஹோலை உருவாக்கமுடியும்.
வார்ம்ஹோலின் ஒரு பக்கத்தில் இருந்து பார்த்தால்,
மறுபக்கத்தில் இருக்கும் உலகங்கள் சற்றே குழம்பிய நிலையில் தெரியும்.
குழப்ப நிலைக்குக் காரணம் ஈர்ப்புவிசை.
மிக மிக எளிமையாக சொல்லப்போனால்,
நாம் தற்போது நம் ஊரில் அமர்ந்துகொண்டு கணினித் திரையை நோக்கியவாறே எதையாவது நோண்டிக்கொண்டிருக்கிறோம்.
அப்போது திடீரென நமக்கு ஒரு மின்னஞ்சல் வருகிறது.
‘இன்னும் அரை மணி நேரத்தில் அண்டார்ட்டிகாவில் வந்து முதலில் என்னைச் சந்திப்பவர்களுக்கு 500 கோடி அளிக்கப்படும்’ என்று பில் கேட்ஸ் அறிவித்திருக்கிறார்.
இது முற்றிலும் நம்பகமான உண்மை என்று வைத்துக்கொள்ளலாம்.
எப்படி அரை மணி நேரத்தில் அண்டார்ட்டிகாவுக்குச் செல்வது?
இருக்கும் இடத்தை விட்டு எழுகிறோம்.
ஜாலியாக நமது அறையில் இருக்கும் ஒரு கதவைத் திறக்கிறோம்.
கதவின் மறுபக்கத்தில் அன்டார்ட்டிகா.
தொலைவில் கண்ணாடியைத் துடைத்துக்கொண்டு பில் கேட்ஸ் நிற்கிறார்.
அடுத்த நிமிடம் நம் கையில் 500 கோடி.
இதுதான் Wormhole.
இரண்டு இடங்களை இணைக்கும் ஒருவித பாலம் போன்ற அமைப்பு.
அந்த இரண்டு இடங்களுக்கும் இடையே இருக்கும் தூரம்,
மனித மனதால் கற்பனையே செய்யமுடியாத ஒரு மிகப்பெரிய தூரமாகவும் இருக்கலாம்.
இது சாத்தியமா?
அவசியம் சாத்தியம்தான் என்பதுதான் ஸ்டீபன் ஹாக்கிங்கின் கருத்து.
இன்னும் சொல்லப்போனால், தற்போதுகூட நம்மைச் சுற்றிலும் எக்கச்சக்கமான wormholeகள் உள்ளன என்று சொல்கிறார் ஹாக்கிங்.
அப்படியென்றால் எளிதில் இதுபோன்று எங்குவேண்டுமானாலும் செல்லலாமே?
அங்குதான் கதையில் ட்விஸ்ட்.
தற்போது இருக்கும் wormholeகள் அளவில் மிக மிகச் சிறியவை.
எந்த அளவு என்றால்,
ஒரு சென்டிமீட்டரில், ட்ரில்லியனில் ட்ரில்லியனில் பில்லியன் பாக அளவே இவை இருக்கின்றன.
இதை வைத்துக்கொண்டு எதுவுமே செய்யமுடியாது.
இவ்வளவு சிறிய வஸ்துக்களுக்குள் எப்படி மனிதன் நுழைய முடியும்?
இவை எங்கே இருக்கின்றன?
க்வாண்டம் மெகானிக்ஸில் Quantum Foam என்ற ஒரு பதம் உண்டு.
எந்தப் பொருளுக்குள்ளும் அடிப்படையாக இருக்கும் ஒரு துகள்.
இதனை எப்படி அளப்பது?
மனிதர்களால் அளக்கக்கூடிய அளவைகளில் இதுவரை இருப்பதிலேயே சிறிய அளவு ஒன்றை, Planck Length என்று அழைப்பார்கள்.
இதை எண்ணிக்கையில் சொல்லவேண்டும் என்றால், 0.00000000000000000000000000000000001 என்று அதனைக் குறிக்கலாம்
(டெஸிமல் பாயிண்ட்டுக்குப் பின்னர் 34 ஸைஃபர்கள்).
எனவே, இத்தனை சிறிய ஒரு வஸ்துவை நாம் wormholeஆக உபயோகிக்க முடியாது.
கூடவே, இந்த வார்ம்ஹோல்கள் உருவானவுடனே அழிந்துவிடுபவை.
சரி. எப்படியாவது ஒரு வார்ம்ஹோலைப் பிடித்து,
அதனை பலப்பல மடங்குகள் பெரிதாக்கினால்,
அப்போது மனிதன் அதனுள் செல்ல இயலும்.
அதேபோல், இப்படிச் செய்வதன்மூலம் நம்மாலேயே சொந்தமாகப் பெரிய வார்ம்ஹோல்களை உருவாக்கலாம்.
அப்படி நடந்தால்?
பூமியின் அருகே இந்த வார்ம்ஹோலின் ஒரு பகுதி.
அதன் மற்றொரு பகுதி, எங்கோ தொலைதூரத்தில்,
நம்மால் கற்பனையே செய்துபார்க்கமுடியாத விண்வெளியின் மற்றொரு இடத்தில் இருக்கும்.
எனவே, இதனுள் நுழைந்தால், குறுகிய காலத்தில் அந்த இன்னொரு பகுதிக்குப் போய்விடமுடியும்.
இதனால் தூரம் என்பது குறுகிவிடுகிறது.
மனிதன் விண்வெளியின் பலப்பல இடங்களை ஆராயமுடியும்.
இது, தூரம் என்பதை மனதில்கொண்டு உருவான தியரி.
அதுவே, இந்த வார்ம்ஹோலின் இரண்டு முனைகளும், ‘காலம்’ என்ற அளவையால் பிரிக்கப்பட்டால்?
அதாவது, வார்ம்ஹோலின் இரு முனைகளுமே
பூமியை நோக்கியே குவிக்கப்பட்டால்,
ஒரு முனையில் நுழைந்து, மற்றொரு முனையின் வழியாக நாம் வெளியேறும்போது பல்லாயிரக்கணக்கான வருடங்கள் முன்போ பின்போ பூமியை நாம் பார்க்கலாம்.
இதுதான் விஞ்ஞானத்தின் பார்வையில் காலப்பயணம்.
எதிர்காலத்திற்குப் பயணம் செய்தவர்கள் நமக்கு முன்னே வாழ்கிறார்கள் என்பதை அறிந்தால் திகைத்துப் போவீர்கள்.
கீழே உள்ள இரண்டு வீடியோக்களிலும் இதற்கான ஆதாரங்கள் கொட்டி கிடக்கின்றன.
பார்த்து ஆராயுங்கள்!
nice post. goo dexplanation
ReplyDeletethank u
Delete