Search This Blog

Honey Badger - தேன் வளைக் கரடி

வணக்கம் நட்பூஸ்...@!!@


“Honey Guide” என்றொரு பறவை. விலங்குகளுக்கும்(சில சமயங்களில் மனிதர்களுக்கும்) தேன்கூடுகள் எங்கிருக்கின்றன என்று அடையாளம் காட்டுவதாலேயே இந்தப்பெயர்.. விலங்குகள் வந்து தேன்கூடுகளை உடைத்து சாப்பிட்டுச் சென்றபின் மீதமிருக்கும் தேனையும், கூடுகளிலிருக்கும் சிறு புழு,பூச்சிகளையும் உணவாக உட்கொள்வதற்காகவே இந்த வழிகாட்டும் வேலை. 

தேனை விரும்பி உண்ணும் Honey Badger என்ற கரடி வகைகளுக்கே இவை அதிகம் வழிகாட்டுவதாக நம்பப்படுகிறது!



தேன்வளைக்கரடி  / தேன்உண்ணும் தரைக்கரடி  என்பது தென்மேற்கு ஆசியா, இந்திய உபகண்டம், ஆப்பிரிக்காவை பிறப்பிடமாக கொண்ட கீரி வகையைச் சேர்ந்த ஓர் சிற்றினம். தேன்வளைக்கரடி ஏனைய வளைக்கரடி இனங்களுடன் நெருங்கிய தோற்றப்பாடு கொண்டு காணப்படாது மரநாயின் உடல் தோற்றத்தைக் கொண்டு காணப்படுகின்றது. 




இதன் பரவல் எல்லை மற்றும் சுற்றாடல் இசைவாக்கம் என்பவற்றினால் இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. 





இது முதன்மையாக ஊனுண்ணி வகையாக காணப்படுவதோடு, இதன் தடிப்பான தோல் மற்றும் இதன் மூர்க்கமான தற்காப்பு திறன்களினால் சில கொன்றுண்ணிகளையே கொன்று உண்ணக்கூடியது!




ஆப்ரிக்காவிலும் இந்தியாவிலும் காணப்படும் தேன்வளைக்கரடிகளின் டயட்டில் தேனுடன் சேர்த்து பழங்களும், எலி முதலிய சிறு விலங்குகளும் இடம்பிடித்துள்ளன. பாம்புகளைக்கூட கொன்று சாப்பிடும் பழக்கமுடையவை இந்த வகைக்கரடிகள். இவற்றின் கடினமான தோலை பாம்புகளின் விசப்பல்லினால் துளையிடுவது கடினம். இதனால் மிக இலகுவாக பாம்புகளை வேட்டையாடும் வல்லமை இவற்றுக்குண்டு!



இவற்றின் வேட்டைப்பற்களைக் கொண்டு ஆமையின் ஓட்டைக்கூட துளையிட முடியும்! அந்தளவிற்கு வலிமையான பற்களை கொண்டவை!




வேட்டை என்று வந்துவிட்டால் எவ்வளவு பெரிய விலங்காக இருந்தாலும் தயங்காது சண்டையிடும் தைரியசாலிகள் இந்த தேன் வளைக் கரடிகள்!



சமயத்தில் சிங்கத்தை விரட்டிவிட்டு சிங்கம் வேட்டையாடிய உணவையே கபளீகரம் செய்யும் திறமை இவற்றுக்குண்டு!





இந்திய துணைகண்டத்தில் இவ்விலங்கு மிகவும் அரிதாக காணப்படுகிறது. கர்நாடக மாநிலம் கனகபுரா தாலுகாவின் தொட்டாலஹல்லி என்ற கிராமத்தில் கிணற்றில் இருந்து காப்பாற்றப்பட்டு மைசூர் மிருகக்காட்சி சாலைக்கு மாற்றப்பட்டது, ஆனால் சில நாடகளிலேயே இறந்துவிட்டது. 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் காணப்பட்டமை புகைப்பட ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!




நன்றி
வணக்கம் 

No comments

Powered by Blogger.