Disparaging Post - A.R. ரஹ்மான் சுட்ட M.S.Va (வ) டை
இன்றைக்கு நான் கொஞ்சம் பிசி. மாணவர்களின் தேர்வுதாள்களை உடனடியாக திருத்தி ரிசல்டை ப்ரின்சிபாலுக்கு e-mail பண்ணவேண்டுமாம்! தவளை தன் வாயாலே கெடும் என்பார்கள்... நானும்தான்!
சும்மாயிருக்க இயலாமல் எந்த பாடத்தையும் கற்பிக்க முடியும் என வேலையில் சேர்ந்த ஆரம்பத்தில் ஓர் நாள் உளறியதன் விளைவு? கொம்பியுடர் கற்பிக்க வேண்டியவன் விஞ்ஞானம், உடற்பயிற்சி என்று என்னவெல்லாமோ... ம்!
நமக்கு வாய்தானே எதிரி! விடுமுறையில் வந்தாலும் விடாது பணி!
சாயந்தரம்... நண்பன் கஜா வந்தான்.
ஜீ... எப்புடி இருந்த ஜீ ? இப்டீ ஆயிட்டியே ஜீ !
வருத்தப்பட்டான் மேலாக... உள்ளுக்குள் நக்கல்!
ஜீ... சூப்பர் ஜீ, இப்ப தான் பாத காணிக்கை படம் பார்த்தேன். கிட்ட தட்ட ஒரு 50 வருஷத்துக்கு மேல ரிலிஸ் ஆன படம், இருந்தாலும் சூப்பர் திரைக்கதை ஜீ! TVல பார்த்துட்டேன்! இப்ப தான் DVD கிடைத்தது. இன்று இரவு இன்னொரு முறை பார்க்கலாம், என்ன சொல்லுற?
கஜா இன்றைக்கு நான் கொஞ்சம் பிசி. இன்னொரு நாள் பார்த்து கொள்ளலாம்.
ஜீ... ஜெமினி கணேஷன் படம் ஜீ!
டேய்... அஜித்குமார் படங்களே எனக்கிப்ப போரடிக்குது. இதுக்கென அவசரம்.
எனக்கு தெரிஞ்ச ஆட்களிலே அஜித்குமார் படத்த பத்தி பரபரப்பா பேசாத ஆளு நீ தான் ஜீ!
நீ பார்த்தவங்கள்ல நா ஒருத்தனாவது ரசனையோட இருக்கனே !
மனசுக்குள் நினைத்தவாறே
கஜா படத்த ஆரம்பி, நான் இந்த தாள்களை திருத்தி கொண்டே முடிந்தால் பார்க்கின்றேன்.
நான் ஒரு ஆசிரியர், கஜா ஒரு Bank Officer.
சரி கஜா, இது வந்து ஒரு 50 வருஷம் ஆகிவிட்டது என்கிறாய். இந்த பட பாடல்களை பற்றி நாம கேள்வி படவே இல்லையே.
ஜீ, எந்த காலத்தில் இருக்கிற? இந்த படத்திற்கு M.S.விஸ்வனாதன்தான் இசை.பாட்டு ஒன்னு ஒன்னும் தூள். "வீடுவரை உறவு" ன்னு ஒரு பாட்டு... கலக்கிட்டார்!
அப்படியா கஜா..நீ சொல்றது படிக்கும் போது அப்ப இருந்த இன்னொரு நண்பன் சொல்லுகிற மாதிரியே இருந்தது.
என்ன சொல்ல வர ஜீ?
இல்ல கஜா.. அந்த காலத்தில் இப்படி தான் இன்னொரு நண்பன் சொன்னான்.
ஜீ! மணியின் ரோஜா படத்து பாட்டுகள் சூப்பர்.
கண்டிப்பா, இசைஞானிதானே ம்யூசிக்?
இல்லை ஜீ, ரஹ்மான்னு ஒருத்தர் வந்து இருக்கின்றார். "சின்னச் சின்ன ஆசை" ன்னு ஒரு பாட்டு. என்னமா இருக்கு!
இவன் ஓவரா பில்ட் அப் கொடுத்தததால் நான் இன்னும் ரோஜா பார்க்கவில்லை.
சரி, படம் ஆரம்பித்து விட்டது. அமைதி ப்ளிஸ். ஓகே,
கே.
தாள்களை திருத்தி கொண்டே ஒர கண்ணால் கொஞ்சம் பார்க்க ஆரம்பித்தேன். பழைய படம் என்று உடனே சொல்லிவிடலாம். அரை இருட்டு, நீண்ட வசனம். அந்த பின்னணி இசை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.
தாள்களில் கவனத்தை திருப்பினேன். என்னடா தொல்லையிது? நொந்து கொண்டே இருக்கையில், பாடல் ஆரம்பித்தது.
"வீடுவரை உறவு... வீதிவரை மனைவி"
குதித்தே விட்டான் கஜா!
ஜீ, இந்த பாட்டு தான்.. சூப்பர் இல்ல.
ஆமா கஜா நல்லாத்தான் இருக்கு.
கேட்டவுடனே மனதில் உட்காரும் மெட்டு. ஆனால் எங்கேயோ கேட்ட மாதிரி மெட்டு.. பாடல் ஆரம்பித்தது. அசோகன் பாட ஆரம்பிக்கின்றார்.
அடடா, இந்த பாடல் மட்டும் எங்கேயோ கேட்ட மாதிரி உள்ளதே?. எங்கே? எங்கே? என்று யோசித்து கொண்டு இருக்கும் போதே பாடல்களின் வரிகள் மேலே மேலே போய் கொண்டு இருந்தன.
பாடலும் முடிந்து படமும் முடிந்தது! என் ஜோசனைதான் இன்னும் முடிந்த பாடில்லை!
சரி, நீ போய்ட்டு வா கஜா, அந்த கடையில் "ரோஜா" DVD இருந்தா வாங்கி வா. அந்த படத்த ஒரு நாள் பார்த்தே ஆகவேண்டும் ஒரு "சின்ன சின்ன ஆசை"
இந்த "வாத்தியார் குசும்பு" தானே வேண்டாங்கிறது.
என்று சொல்லி கொண்டே...
"சின்ன சின்ன ஆசை... சிறகடிக்கும் ஆசை"
என்று பாடி கொண்டே வெளியே கிளம்பினவனை...
டேய், நீ ரொம்ப நல்லாவே பாட்ரடா..?
என்ன கேள்வி கேட்டுட்ட ஜீ? சூப்பர் சிங்கர் ஜீ, ஏன் கேக்குற?
எங்க மீண்டும் ஒரு முறை பாடு..
"சின்ன சின்ன ஆசை... சிறகடிக்கும் ஆசை... முத்து முத்து ஆசை...".
மாப்பு... இப்ப அந்த "வீடுவரை உறவு" மெட்டில் அப்படியே அதை பாடு.
"சின்ன சின்ன ஆசை..."... ... ஜீ... MSV ஒரு இசை மேதாவி தான் ஜீ. தனக்கே தெரியாமல் ரோஜா படத்திற்கு இசை அமைத்து இருக்கார் பார்.
இரண்டு பாடல்களையும் ஒரு தடவை கேட்டுவிடுங்கள்...
யான் பெற்ற இன்பம் பெறுக மை ப்ரெண்ட்ஸ்!
Post a Comment