The Justice League-ஜஸ்டிஸ் லீக் : ஓர் சிறிய அறிமுகம்!
கையில் கிடைத்த வார இதழ்கள், நாளிதழ்களில் வெளியான விளம்பரங்கள், மற்றும் புகைப்படங்களை வெட்டி எடுத்து அதை ஒரு நோட்டில் படக்கதை போல ஒட்டி ஒவ்வொன்றின் மேலும் சிறிய சிறியதாக ஸ்கெட்ச் பென்சிலில் எழுதி நானே ஒரு காமிக்ஸ் புத்தகத்தை தயாரித்த போது எனது வயது பதினைந்து.
அந்த வயதில் என் உலகம் காமிக்ஸ் புத்தகங்களால் நிரம்பியிருந்தது.
பள்ளிபுத்தகங்கள் மனதில் இருந்த கனவுகளை கொஞ்சம் கொஞ்சமாக உதிரச் செய்து கொண்டிருந்த போது சாசகத்தின் மீதும் விசித்திரங்களின் மீதும் மனதை குவிய செய்தன காமிக்ஸ் புத்தகங்கள்.
அந்த நாட்களில் எனக்கிருந்த ஒரே குறை ஏன் நூலகங்களில் புதிய காமிக்ஸ் புத்தகங்கள் வாங்குவதில்லை என்பதே.
மாதந்தோறும் வெளியாகும் தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் எதுவும் நூலகத்தில் படிக்க கிடைக்காது.
பழய காமிக்ஸ் மட்டுமே கிடைக்கும்.
ஆயிரம் புத்தகங்கள் உள்ள நூலகத்தில் வீட்டிற்கு எடுத்து வந்து படிக்க கிடைத்தது ஒரு சில பழய காமிக்ஸ் புத்தகங்களே!
பல முறை இதை பற்றி நூலகரிடம் கேட்டிருக்கிறேன்.
அவர் காமிக்ஸ் படிப்பதால் அறிவு வளராது என்று பொதுவாக கூறுவார்.
அது உண்மையில்லை என்று அந்த வயதிலே தோன்றியது.
காமிக்ஸ் புத்தகங்களின் வழியே நான் நிறைய கனவு கண்டேன்.
கெய்ரோ நகரம், தங்கவிரல் கொண்ட புத்தர்சிலை, நயாகரா அருவி, வேதாளம் வசிக்கும் காடு, நியூயார்க் நகரம், சிவப்பிந்தியர்கள், இரட்டை குழல் துப்பாக்கி, கடற்கொள்ளையர்கள்
என்று கனவெங்கும் காமிக்ஸ் உலகம் நிரம்பி வழிந்தது.
எழுத்தின் மீதான எனது முதல் ஆசைகளை உருவாக்கியது காமிக்ஸ் புத்தகங்களே.
ஒரு சிறிய தகவல் : உலகிலேயே கொமிக்ஸ் வாசகர்களில் முதலிடம் ஜப்பானியர்களுக்குத்தான்!
ஜப்பானில் மட்டும் ஏன் காமிக்ஸ் அதிகம் படிக்கிறார்கள் என்ற கேள்விக்கு
ஜப்பானியர்கள் சொல்லும் பதில்,
ஜப்பானில் மட்டும் தான் ஒசாமு டெசூகா (Osamu Tezuka) இருக்கிறார்,
இவரது சித்திரக்கதைகளை ஒரு முறை வாசித்தால் போதும் பிறகு வாழ்க்கை முழுதுவம் நீங்கள் மாங்கா வாசிப்பவராகி விடுவீர்கள் என்கிறார்கள்,
அது உண்மை தான்
ஒசாமு டெசூகாவை மாங்காவின் கடவுள் என்று சொல்கிறார்கள்.
மாங்கா என்பது ஜப்பானிய காமிக்ஸ்!
அமெரிக்கன் கொமிக்ஸ் :
National Allied Publications என்ற பெயரில் 1934-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட டீசீ காமிக்ஸ்,
அமெரிக்க கொமிக்ஸ் புத்தகச் சந்தையில் செயல்படும் ஒரு மிகப்பெரிய நிறுவனம் ஆகும்.
இது டைம் வார்னெர் நிறுவனத்துக்குச் சொந்தமான
வார்னெர் பிரதர்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான
DC Entertainment Inc நிறுவனத்தின் பதிப்பகப் பிரிவு ஆகும்.
சூப்பர்மேன், பேட்மேன், வொண்டெர் வுமன், பிளாஷ், கிரீன் லாண்டர்ன், கேப்டன் மார்வெல் மற்றும் ஜஸ்டிஸ் லீக் உள்ளிட்ட நன்கு-அறிந்த கதாப்பாத்திரங்களை கொண்ட புத்தகங்களை டீசீ காமிக்ஸ் தயாரித்து உள்ளது.
இந்நிறுவனத்தின் பிரபல வரைகதை தொடரான டிடக்டிவ் காமிக்சிலிருந்த தலைப்பெழுத்துக்கள் தான் இந்நிறுவனத்தின் அலுவல் பெயரான டீசீ என்றாகியது.
மார்வெல் காமிக்சுக்கு மிகப்பெரிய போட்டியாளர் டீசீ காமிக்ஸ்.
மேலும்,அமெரிக்க கொமிக்ஸ் புத்தகச் சந்தையில் இவ்விரு நிறுவனங்களும் எண்பது விழுக்காட்டைக் கைப்பற்றி உள்ளனர்.
DC Comics VS Marvel Comics :
1934ல் தொடங்கப்பட்டு தனிக்காட்டுராஜாவாக வெற்றி நடை போட்ட டிசி கொமிக்ஸ் 1939ல் ஆட்டம்காண ஆரம்பித்தது. காரணம் 1939ல் ஆரம்பிக்கப்பட்ட மார்வல் கொமிக்ஸ்.
டிசி கொமிக்ஸின் பிரதான படைப்புகளான சுப்பர்மென், பேட்மென் தவிர்த்து ஏனைய கதாபாத்திரங்கள் பெரியளவில் சோபிக்கவில்லை!
ஆனால் மார்வெல் கொமிக்ஸை பொறுத்தவரையில்
கேப்டன் அமெரிக்காவை தவிர்த்து பார்த்தால்
அது அறிமுகப்படுத்திய அனைத்து ஹீரோக்களுமே வெற்றி நாயகர்கள்தான்.
பிரதானமாக ஹல்க், அயன்மென், தோர், ஸ்பைடர்மென், X-மென், நிக் பியூரி, பெண்டாஸ்டிக் 4 என சொல்லிக்கொண்டே போகலாம்!
மார்வெலின் பெரும்பாண்மை ஹீரொக்களை உருவாக்கியவர் எழுத்தாளர் ஸ்டென் லீ!
ஜஸ்டிஸ் லீக் :
விற்பனையில் ஏற்பட்ட திடீர் சரிவை ஈடுகட்ட டிசி கொமிக்ஸார் கண்டுபிடித்ததுதான் The Justice League!
வருடம் – 1956.
அமெரிக்காவின் புகழ்பெற்ற DC காமிக்ஸ் நிறுவனம்,
ஃப்ளாஷ் (Flash) என்ற ஒரு சூப்பர்ஹீரோவை தன் பரிவாரங்களுடன் தூசிதட்டி எடுத்து உலவ விட்டிருந்த காலம்.
எதிர்பாராதவிதமாக அந்த சீரீஸ் நன்றாகவே வெற்றியடைந்ததால்,
உடனேயே ‘ஜஸ்டிஸ் லீக்’ (Justice League) வெளியே விடப்பட்டது.
அந்தக் காலகட்டம் வரை, சூப்பர் ஹீரோ என்றால் நிஜமாகவே ஹீரோதான்.
அதாவது, அந்த ஹீரோவிடம் எந்தக் குறையும் இருக்காது.
நல்லவனாக, அபரிமிதமான சக்தியுடன், அடக்கமானவனாக, மக்களை வில்லனிடமிருந்து காப்பவனே அபோதைய சூப்பர் ஹீரோ.
உதாரணத்துக்கு: சூப்பர்மேன் மற்றும் கேப்டன் அமெரிக்கா.
ஆனால், வில்லனை அடி பின்னியபின் ஹீரோ என்ன செய்வான்?
இங்குதான் ரசிகர்கள் மாற்றத்தினை எதிர்பார்த்தார்கள்.
ஜஸ்டிஸ் லீக்கின் ஹீரோக்கள்,
தங்களின் சக்திகளைப் பற்றி ஜம்பம் அடித்தனர்.
தங்களின் வாழ்க்கைத் தேவைகளுக்குப் பணம் சம்பாதிப்பது எப்படி என்று யோசித்தனர்.
ஹீரோயின்களை எப்படி மடக்குவது என்று சிந்தித்தனர். தங்களுக்குள்ளேயே ஈகோ மிகுந்து அடித்துக்கொண்டனர்.
சூப்பர் ஹீரோக்களை ஒன்றாக உலாவ விடுவதன் சுவாரஸியமே இங்குதான் ஆரம்பிக்கின்றது. தங்களுக்குள் அடித்துக்கொண்ட சுப்பர் ஹீரோக்கள்; தனியொருவரால் வெல்லமுடியாத சக்தியை எதிர்க்க நேர்ந்தபோது ஒன்றினைந்து போராடினர்.
இதனால் வெளிவந்தவுடன், அட்டகாச ஹிட்டாக மாறியது இந்த சீரீஸ்.
பயங்கர நல்லவர்களாக இல்லாமல்,
சாதாரண மனிதர்களாக இருந்த இந்தக் கதாபாத்திரங்கள்,
காமிக்ஸ் ரசிகர்களுக்குப் பிடித்திருந்தன.
(பின்னர் ஜஸ்டிஸ் லீக்கிற்கு போட்டியாக
மார்வெலின் அவெஞ்சர்ஸ் வெளியானது தனிக்கதை!)
இப்படி ஆரம்பித்த ஜஸ்டிக் லீக் வரலாறு,
பழைய ஹீரோக்கள் விலகி,
பல புதிய ஹீரோக்கள் அறிமுகம்,
மறுபடியும் பழையவர்களில் சிலர் திரும்பி வந்தது,
சிலரின் கௌரவ வேடம் என்றெல்லாம் போய்,
’ஜஸ்டிக் லீக் ஆப் அமெரிக்கா’,
‘ஜஸ்டிக் லீக் டார்க்’,
‘ஜஸ்டிக் லீக் இன்டர்நேசுனல்’
என்பதுபோல பல அவதாரங்கள் எடுத்துள்ளது.
இந்த ஜஸ்டிக் லீக்கின் பொதுவான நோக்கம் என்னவெனில்,
எந்த ஒரு தனிப்பட்ட ஹீரோவினாலும் முறியடிக்கமுடியாத சக்தியை
அனைவரும் சேர்ந்து எதிர்ப்பதுதான்.
இத்தனை வெற்றிகரமான ஒரு காமிக்ஸ் சீரீஸை
ஹாலிவுட் விட்டுவிடுமா?
அவெஞ்சர்ஸ் காமிக்ஸை திரைப்படமாக எடுத்தவுடனே
ஜஸ்டிக் லீக்கையும் திரைப்படமாக எடுக்கும் முயற்சிகள், எப்போதோ துவங்கிவிட்டன.
வோர்னர் பிரதர்ஸ் தயாரிக்கின்றார்கள்.
ஜஸ்டிஸ் லீக் உறுப்பினர்கள் :
1. Super Man - சுபர் மென்
சுபர் மெனாக பிரபல நடிகர் ஹென்றி காவில் நடிக்கிறார்.
2. Bat Man - பேட் மென்
துரதிஸ்டவசமாக பேட்மெனாக நமக்கு நன்கு பரிச்சயமான
ஹொலிவுட் சீயான் - கிறிஸ்டியன் பேல் நடிக்கமறுத்துவிட்டாராம்.
எனினும் பொருத்தமான நடிகரை தெரிவு செய்வார்களென நம்புகிறேன்.
3. Green Lantern - கிரின் லெண்டர்ன்
பெரும்பாலும் கிரீன் லெண்டெனாக ரையன் ரெனொல்ட்ஸ் நடிப்பாரென நம்புகிறேன்!
கிரீன் லெண்டெர்ன் படத்திலும் அவர்தான் நடித்திருப்பார்!
சுவாரசியமான தகவல் என்னவெனில்
கிரின் லெண்டர்னை போலவே
ப்ளாக் லெண்டெர்னும் கொமிக்ஸில் உண்டு.
எனினும் ஜஸ்டிஸ் லீக்கில் இடம்பெறுவார் என நினைக்கவில்லை!
4. Wonder Woman - வொண்ட வுமன்
வொண்ட வுமனாக கெரி ரசல் நடிக்கலாம்.
2009ம் ஆண்டு வெளியான படத்தில் அவர்தான் நாயகி!
5. Hawk Girl - ஹவ்க் கேர்ள்
ஹவ்க் கேர்ளாக மர்கொட் ரொப்வி நடிக்ககூடும்.
The Wolf of Wall Street படத்தில் நயோமியாக நடித்தவர்.
6. The Flash - ப்ளாஸ்
ப்ளாஸ் சீரிஸ்கள் பல தொலைக்காட்சித் தொடர்களாக வெளிவந்துள்ளன.
அனேகமாக அவற்றில் நடித்த க்ராண்ட் கஸ்டினே படத்திலும் நடிக்கலாம்.
7. Martian Manhunter - மார்சன் மென்ஹண்டர்
இந்தப் படத்தை நான் இவ்வளவு சுவாரசியமாக எதிர்பார்க்க காரணமே இந்தக் கெரக்டர்தான்.
காரணம் மார்சனாக நடிக்கப்போவது
நம்ம ஹெர்குலிஸ் புகழ் ரொக்(டிவய்ன் ஜொன்சன்)
8. Aqua Man - அக்வா மென்
அக்வாமெனாக தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் ஜஸ்டின் ஹார்ட்லி.
படத்திலும் இவர்தானா இல்லை வேறா என தெரியவில்லை.
ஜஸ்டிஸ் லீக்கில் மிக முக்கியமான கெரக்டர் இது!
பலத்தில் சுப்ப மெனுக்கு நிகரானவன்.
***
இவர்கள்தான் ஜஸ்டிஸ் லீக் கொமிக்ஸில் பிரதானமாக இடம்பெறுவோர்.
அனேகமாக ஜஸ்டிஸ் லீக்-1ம் பாக படத்திலும் இவர்களே வரக்கூடும்!
ஹாலிவுட் இதுவரை கண்டிராத பிரம்மாண்டத்தோடு வெளிவர இருக்கும்
இப்படம் பற்றிப் பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன!
Post a Comment