Search This Blog

மகா சாசனம் என்ற 'MAGNA CARTA' (மேக்னா கார்டா) செல்லாகாசான கதை!


Magna Carta என்பது இங்கிலாந்து இராச்சியதின் அரசருக்கும் அந்நாட்டுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட ஓர் உடன்படிக்கையாகும்.



இங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்கும் இடையில் பல நூற்றாண்டுகளாகப் போர் நடைபெற்று வந்தது. 
13ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ஒரு போரில், இங்கிலாந்து இழப்புகளைச் சந்தித்தது. 
குறிப்பாக, ஆங்கிலோ-நோர்மன் மக்களின் வாழ்விடமாக இருந்த Normandy(நோர்மாண்டி) என்னும் பகுதியை இங்கிலாந்து இழந்தது.
அப்போது பிரான்ஸின் மன்னராக இருந்தவர் KING பிலிப் II.
இங்கிலாந்தின் மன்னராக இருந்தவர்,  KING ஜோன்.

KING  PHILLIP II  of  FRANCE
KING JOHN of ENGLAND
KING JOHN in Robin of  Sherwood
ஏற்கெனவே ஜோன் மீது மக்களுக்கு மிகுந்த அதிருப்தி. 
கடுமையான வரிவிதிப்பு.  போப்புடன் தகராறு. 
போரிடவும் தெரியவில்லை. 
வருத்தம், கோபமாக மாறியது. 
பிரபுக்கள், வியாபாரிகள், செல்வந்தர்கள், பொது மக்கள் 
என்று ஒரு பெரும் கூட்டம் ஜோனுக்கு எதிராக கலகம் செய்ய ஆரம்பித்தது. 
பிரான்ஸை அடக்குவதைக் காட்டிலும் இந்தக் கலகத்தை அடக்குவது மிகப் பெரிய சவாலாக இருந்தது ஜோனுக்கு. 

கலகம் செய்துகொண்டிருப்பவர்களை அழைத்துப் பேசவேண்டும் என்று ஜோனுக்குத் தோன்றவில்லை. 
அவர்களை ஒடுக்கவே விரும்பினார். 
அரசருக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் பிடித்து வரப்பட்டு கொல்லப்பட்டனர். 
ஆனால், ஜோன் எதிர்பார்த்தது போல் கலகம் அடங்கவில்லை. முன்பைக்காட்டிலும் கூடுதல் பலம் பெற்றது. 
சீற்றத்துடன் ஒரு உள்நாட்டுப் போர் தொடங்கியது. 
கலகக்காரர்கள் லண்டனைக் கைப்பற்றினர். 
பேச்சுவார்த்தை நடத்துவது தவிர வேறு வழி இல்லை ஜோனுக்கு. அழைத்துப் பேசினார். 
பல சுற்றுகளுக்குப் பிறகு, மகாசாசனம் என்று அழைக்கப்படும் Magna Carta உருவானது. 
ஜூன் 15, 1215 அன்று அரசு முத்திரை சாசனத்தில் பதிக்கப்பட்டது. 
1225ம் ஆண்டு சட்டமாக அங்கீகரிக்கப்பட்டது.

உடன்படிக்கையின் உள்ளடக்கத்தின் சாராம்சம்
"அரசரின் முடிவு தன்னிச்சையாக இராது. அவர் மகாசபையின் அனுமதியைப்பெற்றே செயற்படமுடியும்"

இங்கிலாந்து வரலாற்றில் இது ஒரு முக்கியமான அத்தியாயமாகக் கருதப்படுகிறது. 

This Little Britain நூலாசிரியர் ஹரி பிங்கமின் 
வார்த்தைகளில் சொல்வதானால், 
"பிரிட்டன் இந்த உலகுக்கு கொடுத்த ஆகச் சிறந்த கொடை Magna Carta ."

HARRY BINGHAM


1297ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட  இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் அரசமைப்புப் புத்தகங்களில் Magna Carta வானது
'The Great Charter of the Liberties of England, and of the Liberties of the Forest'  (இங்கிலாந்தின் சுதந்திரங்களுக்கும் வனங்களின் சுதந்திரங்களுக்குமான பெரும் சாசனம்)  என குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்று கொள்கைகள் இன்னமும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சட்டங்களில் இடம் பெற்றுள்ளன.

LORD டென்னிங் இந்த சாசனத்தை 
"எல்லாக் காலங்களுக்குமான மிகசிறந்த அரசமைப்பு ஆவணம்;தன்னிச்சையான சர்வாதிகார ஆட்சிக்கெதிர் தனிநபரின் சுதந்திரத்திற்கான அடிக்கல்" எனக் கூறுகிறார்.

LORD DENNING

LORD உல்ஃப் தனது பேச்சில் 
தற்போது சிறப்பு அரசமைப்பு நிலையுள்ளதாக அங்கீகரிக்கப்படும் ஆவணங்களில் முதலாவதாக இதனைக் குறிப்பிடுகிறார்.

LORD WOOLF
இதன் முன்னோடியாகவும் உந்துதலாகவும் 1100ம் ஆண்டு 
இங்கிலாந்தின் KING ஹென்றி I தானாகவே வெளியிட்ட Charter of Liberties(சுதந்திர சாசனம்) / Coronation Charter அமைந்தது.

KING    HENRY    I   of   ENGLAND
ஜோன் மன்னருக்கு எதிராக பொது மக்கள், பிரபுக்கள், செல்வந்தர்கள் என்று பலரும் கலகம் செய்திருந்தாலும், 
சாசனம் மன்னருக்கும் பிரபுக்களுக்கும் இடையில்தான் உருவாக்கப்பட்டது. 
அந்த மன்னருக்கும் சரி, கையெழுத்து வாங்கிக்கொண்ட பிரபுக்களும் சரி, 
இருவருக்குமே Magna Cartaவின் மகத்துவம் என்னவென்று தெரியும். 
இது ஒரு வெற்று காகிதம் என்பதைத் தாண்டி வேறில்லை. 
இது தெரிந்ததால்தான் மன்னரும் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் முத்திரையைப் பதிந்தார். 
இது தெரிந்ததால்தான் பிரபுக்களும் ஒப்புக்கு இதை பெற்றுக்கொண்டனர்.

சாசனம் உருவான பிறகும் ஜோன் தொடர்ந்து அடக்குமுறையை ஏவிவிட்டுக்கொண்டுதான் இருந்தார். 
சாசனம் உருவான பிறகும் கலகக்காரர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்துகொண்டுதான் இருந்தார்கள். 
எந்தவிதத் தடங்கலும் இன்றி படுகொலைகள் நடந்துகொண்டுதான் இருந்தன. 
ஒருவ்ரும் Magna Cartaவை துணைக்கு அழைக்கவில்லை. 
கற்பனை ஹீரோவான ரொபின்ஹூட் உட்பட!

ROBIN HOOD & HIS MILITANTS
மேலும், மன்னருக்கும் பிரபுக்களுக்கும் இடையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாவது என்பது இயல்பான ஒன்று. 
எப்போதெல்லாம் மோதல் தீவிரமடைகிறதோ அல்லது எப்போதெல்லாம் ராணுவத்துக்கு ஓய்வு தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. 
பிரிட்டன் மட்டுமல்ல, மத்தியக்கால ஐரோப்பா முழுவதிலும் இப்படிப்பட்ட ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. 
முடியாட்சிக்கு எதிரான கலகங்கள் வெடிக்கும்போதெல்லாம் மன்னர் தன் படைகளைத்தான் ஏவிவிடுவார். 
படைகள் செயலிழந்தால், ஒப்பந்தம். 
ஒரு நாட்டின் அதிபதியாகத் திகழும் மன்னருக்கும், 
ஆயுதக் குழுக்களைக் கொண்டிருக்கும் பிரபுக்களுக்கும் இடையில் 
தொடர்ச்சியாக இப்படிப்பட்ட அதிகாரப் போட்டி நடந்துகொண்டிருந்தது. 
Magna Carta  உருவானது இந்தப் பின்னணியில்தான்!

அரசு முத்திரை பதிப்பிக்கப்பட்ட அதே நாள் Magna Carta   செயலிழந்தும் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. 
மரணங்களு்ம் மோதல்களும் நிகழ்ந்துகொண்டிருக்கையில் சாசனம் தனது பேழையில் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தது. 
லண்டனைக் கைப்பற்றியிருந்த கலகக்காரர்கள் அதனை திருப்பித் தரவில்லை. 
அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் அளிக்கிறேன் என்று முழங்கியிருந்த மன்னர், 
தன் படைகளை திரும்பப் பெறவில்லை. 
உறக்கத்தில் இருந்ததாகக் கருதப்பட்ட Magna Carta, 
உண்மையில் இறந்து போயிருந்ததைக் கண்டறிந்த அனைவரும் அதனை எடுத்துக்கொண்டு சென்று புதைத்தார்கள்!

ஓராண்டு கழிந்த பிறகு, 1216ம் ஆண்டு, பிரெஞ்சு ராணுவம் மீண்டும் பிரிட்டனில் கால் பதித்தது. 
இவர்களைச் சமாளிக்கமுடியாது என்பதை உணர்ந்துகொண்ட 
ஜோன் மன்னர் படைகளை விட்டுவிட்டு ஓடிப்போனார். 
பிரான்ஸ் பிரிட்டனை வெற்றிக்கொண்ட அந்தத் தருணத்தில் 
ஜோன் தன் வாழ்நாளில் இதுவரை செய்திராத ஒரு வீரச் செயலை செய்தார். இறந்துபோனார். 
அவர் இடத்தி்ல் பொருத்தப்பட்ட  KING ஹென்றி  III , 
முதல் காரியமாக Magna Cartaவைத் தோண்டி எடுத்தார். 
அவருக்கு ராஜதந்திரம் தெரிந்திருந்தது. 
பிரான்ஸைத் துரத்தியடிக்கவேண்டுமானால் படைகள் மட்டும் போதாது, 
மக்களின் ஆதரவும் தேவை என்பதை அவர் உணர்ந்திருந்தார். 
Magna Carta  கைகொடுத்தது. 

KING  HENRY  III   of   ENGLAND

ஆபத்து சமயங்களில் இன்றைய தேதி வரை உலக நாடுகள் மேற்கொண்டுவரும் ஒரு யுக்தியை 
KING  ஹென்றி  III  வெற்றிகரமாகப் பிரயோகித்தார். 
தேச பக்தியைத் தூண்டிவிட்டார். 
"நம் நாடு  (ஜோன் நாடோ ஹென்றி நாடோ அல்ல)  அபாயத்தில் இருக்கிறது. 
நம் மக்கள் எதிரிகளால் தாக்கப்படுகிறார்கள். 
நமக்கு ஆபத்து. நாம் ஒன்றுசேர்ந்தால்தான் அவர்களை ஒழிக்கமுடியும். 
எனவே, பொதுமக்களே அரசரின் கீழ் திரளுங்கள். 
Magna Carta  என்னும் ஒப்பற்ற உரிமை சாசனத்தில் கீழ் திரண்டு வாருங்கள். 
மன்னர் உங்களை அழைக்கவில்லை, 
மகாசாசனம் அழைக்கிறது." 
எதற்காக உயிரூட்டப்பட்டதோ அந்தப் பணியை Magna Carta  நிறைவேற்றியது!

Magna Carta

Magna Carta வில் இடம்பெறும் பெரும்பாலான சட்டத்திட்டங்களை பிரிட்டனே அடுத்தடுத்து உடைத்தெறிந்தது தனிக்கதை. 
உதவாதச் சட்டங்கள் முதலில் உடைக்கப்பட்டன. 

31வது பிரிவு: பிரபுக்களும் அரசு அதிகாரிகளும் உரிமையாளரின் அனுமதி இல்லாமல் மரம் எடுத்துச்செல்லக்கூடாது. 

இது Magna Cartaவின் ஒரு விதி. 

தங்களுக்கான கோட்டை வீடுகளைக் கட்டிக்கொள்ள பிரபுக்கள் பொது மக்களுக்குச் சொந்தமான மரங்களை வெட்டியெடுத்து அபகரித்துச்செல்வது வழக்கமாக இருந்த காரணத்தால் 
இந்த விதி சேர்க்கப்பட்டது. 
மக்களைத் திருப்திபடுத்துவதற்காக பிரபுக்களால் சேர்க்கப்பட்ட ஒரு பிரிவு இது. 
சேர்க்கப்பட்டது கண்துடைப்புக்காக மட்டுமே என்பதால் 
எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் இந்த விதியை மீறினார்கள்.

இன்னொரு சட்டப்பிரிவு : இதுவரை நாம் கைப்பற்றியிருந்த காடுகளையும் நதிக்கரைகளையும் நாம் விட்டுக்கொடுக்கவேண்டும். காடுகளை வைத்துக்கொண்டு இதுவரை பிரபுக்கள் செய்துவந்த அக்கிரமங்கள் கைவிடப்படவேண்டும். 

பொது மக்களை அரசும்  பிரபுக்களும் எந்த அளவுக்குச் சுரண்டி வந்தனர் என்பதை இந்த விதியைக் கொ்ண்டே புரிந்துகொள்ளமுடியும். 
கீழே விழுந்திருக்கும் சுள்ளிகளைப் பொறுக்கி வந்தால்கூட, திருட்டுக்குற்றம் சாட்டி வந்த காலகட்டம் அது. 
பழங்களைத் தின்றால் குற்றம். 
விறகு எடுத்தால் குற்றம். 
ஏனென்றால், சம்பந்தப்பட்ட மரம் ஏதாவதொரு பிரபு வளைத்துப்போட்ட காட்டின் ஒரு பகுதியில் அமைந்திருக்கும். 

ஐரோப்பாவில் நிலவி வந்த இப்படிப்பட்ட கடுமையான சட்டங்களால் உந்தித்தள்ளப்பட்ட கார்ல் மார்க்ஸ் தன் பொருளாதாரத் தத்துவத்தை முற்றிலும் எதிர் திசையில் வடிவமைத்தார்.

மேற்படி சட்ட அம்சம் தவிர்த்து, Magna Cartaவில் பொது மக்களுக்கு வழங்கப்படும் உரிமைகளுக்கான விதிகள் என்பது மிகவும் சொற்பமே. 
அவையும் அலங்காரத்துக்காக மட்டுமே சேர்க்கப்பட்டவை. 
உதாரணத்துக்கு, 

சட்டப்பிரிவு 39 : எந்தவித சுதந்திர மனிதனும் அநியாயமான முறையில் கைது செய்யப்படமாட்டான். சட்டத்து்க்கு விரோதமாக சிறை வைக்கப்படமாட்டான். நாடு கடத்தப்படமாட்டான். 

சட்டப்பிரிவு 40 : எந்த சுதந்திர மனிதனின் உரிமையும் பறிக்கப்படமாட்டாது. மறுக்கப்படமாட்டாது. 

இந்த அலங்கார மொழிகளுக்கு உள்ளேயும் ஒரு திருகல் இருக்கிறது. 
அரசர் அளிக்கும் உரிமைகள் சுதந்திர மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தும். 
யார் சுதந்திர மனிதன்? என்பதை அரசர்தான் தீர்மானிப்பார். 
தங்களுககுப் பிடிக்காத கலகக்காரர்களை பிரபுக்கள் நிச்சயம் சுதந்திர மனிதர்கள் என்று அழைக்கப்போவதில்லை. 
உரிமைகள் வழங்கப்போவதும் இல்லை.

ஹரி பிங்கம் வியந்து பாராட்டும் 

சட்டப்பிரிவு 61 : மன்னர் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்தான். மன்னர் சட்டத்தை மீறினால் அவர் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். அவர் நிலங்கள் பிடுங்கப்படும். 

அரசர்தான் எல்லாமும்! என்று இருந்து வந்த காலத்தில் இது புரட்சிகரமான ஓர் அம்சம் என்று திகைக்கிறார் ஹரி பிங்கம். 

ஆனால், எந்த மன்னரையும் Magna Cartaவைப் பயன்படுத்தி பொது மக்கள் பதவியில் இருந்து இறக்கவில்லை. 
பிரபுக்குலத்தைச் சேர்ந்த எந்தவொரு கோமகனையும் Magna Carta தண்டிக்கவில்லை. 
விதிகளை மீறும் எந்தவொரு செல்வந்தரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதில்லை.

Magna Carta என்பது மக்களுக்கானதல்ல.  அது .ஒரு அரசு ஏற்பாடு. அவ்வளவுதான்! 
இது உள்ளடக்கம் அல்லது வடிவம் என எதிலும் தனித்துவமானதாக இல்லாதிருப்பினும், 
இந்தச் சாசனத்தின் மூலம் ஆங்கிலம் பேசும் உலகெங்கும் அரசமைப்பு சட்டங்களின்படி ஆட்சி நடத்த வழி வகுத்தது. 
நடைமுறையில் Magna Carta அரசரின் அதிகாரங்களை மட்டுப்படுத்தாதிருந்தபோதும் அரசரும் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர் எனக் காட்ட ஓர் குறியீடாக இருந்தது.
Magna Carta அரசனின் அதிகாரத்தை பலவீனப்படுத்தும் முதலாவது வரலாற்று ஆவணமாகவும்,பாராளமன்ற அதிகாரம் வளர்ச்சி பெறுவது சம்பந்தமான முக்கிய நிகழ்வாகவும் அமையப்பெற்றது.
அரசனால் மேற்கொள்ளப்படும் தீர்மானம் சட்டமாகக் கருதப்படும் காலத்தில்,
இவ்வொப்பந்தத்தில் கையொப்பமிட்டதன் மூலம் அவனும் சட்டத்திற்கு கட்டுப்படும் நிலை ஏற்பட்டது. 
புதிய நாடுகளில் குடியேறியவர்களுக்கு ஓர் வழிகாட்டுதலாக  அவர்தம் அரசமைப்பு ஆவணங்களை, 
அமெரிக்க அரசியலைப்பு உட்பட, உருவாக்கிட Magna Carta உதவியது.

***



No comments

Powered by Blogger.