Search This Blog

The Tamil who drived Ship V.U. SITHAMPARANAR - கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் பிறந்த தின சிறப்பு பதிவு

வாணிபம் செய்வதற்காக இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு வந்த ஆங்கிலேயர் இங்கு வலிமை மிக்க ஆட்சி இல்லாத நிலையைப் பயன் படுத்திக் கொண்டு  மெல்ல மெல்ல அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். 

ஆங்கில வல்லாட்சியின் இரும்புப் பிடியில் இருந்து இந்திய நாட்டை விடுவிக்க ஆயிரம் ஆயிரம் தியாகிகள் தங்கள் வியர்வை, கண்ணீர், இரத்தத்தைச் சிந்தி அறப்போரில் ஈடுபட்டனர். அத்தகைய புகழ்மிக்க தியாகிகளில் உன்னதமான இடத்தைப் பெற்றவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார்!









 கேரளாவில் உள்ள வைக்கத்தில் ஜாதி ஆணவத்தையும், தீண்டாமையையும் எதிர்த்து அறப்போர் நடத்திய தந்தை பெரியார் பிறப்பதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் 1872 செப்டம்பர் 5ஆம் நாள் உலகநாதப் பிள்ளைக்கும் பரமாயி அம்மையாருக்கும் ஓட்டப்பிடாரத்தில் பிறந்தார். 

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில், சேதுபதி சமஸ்தானத்தைச் சேர்ந்த பாண்டித்துரைத் தேவரைத் தலைவராகக் கொண்டு மதுரைத் தமிழ்ச்சங்கம் இயங்கி வந்தது. 1905 மே மாதம் வ.உ.சி. சங்கத்தில் ஓர் உறுப் பினராகச் சேர்ந்தார். பாண்டித்துரைத் தேவரின் நட்பு வ.உ.சி.க்கு சுதேசிக் கப்பல் நிறுவனம் அமைக்கப் பேருதவியாக இருந்தது. அக்காலத்தில் தூத்துக் குடி நகருக்கும் இலங்கைக்கும் இடையே ஆங்கிலேயருக்குச் சொந்தமான பிரிட் டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேஷன் என்ற நிறுவனத்தின் கப்பல்களே வணிகப் போக்குவரத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தன.

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை ஒழிக்க எண்ணிய வ.உ.சி. 1906 அக்டோபர் 16ஆம் நாள் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். நிறுவனத்தின் தலைவராகப் பாண்டித்துரைத் தேவரும், வ.உ.சி. செயலராகவும் பதவி ஏற்றுக் கொண்டனர். 

வ.உ.சி. ஷா லைன் ஸ்டீமர்ஸ் என்ற நிறுவனத்திடமிருந்து கப்பலை குத்தகைக்கு வாங்கி தூத்துக் குடிக்கும் - ஈழத் தீவிற்கும் இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்கினார். இதைக் கண்டு ஆங்கிலேய நிறுவனத்தாருக்குப் பொறாமை ஏற்பட்டது. ஷா லைன் ஸ்டீமர்ஸ் நிறுவனத்தாரை மிரட்டிக் கப்பல் குத்தகையை ரத்து செய்ய வைத்து, குத்தகைக்குக் கொடுத்திருந்த கப்பலைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வைத்தது.




சுதேசிக் கப்பல் நிறுவனத்திற்கு என்று வ.உ.சி.யின் விடாமுயற்சியால் காலிபா, லாவோ என்ற இரு கப்பல்கள் சொந்தமாக வாங்கப்பட்டன. இதற்கு தூத்துக்குடி வணிகப் பெருமக்கள் தங்களால் ஆன நிதி உதவி அளித்தனர். மும்பை, கொல்கத்தா போன்ற வட இந்திய நகரங்களில் உள்ள வணிகர்களும் சுதேசிக் கப்பல் நிறுவனத்திற்கு நிதி வழங்கினார்கள். 1907 ஜூன் மாதம் முதல் தூத்துக்குடிக்கும் - கொழும்பிற்கும் இடையே பயணக் கப்பல்கள் ஓடத் தொடங்கின.  வ.உ.சி.யின் சாதனையைத் தேசியப் பத்திரிகைகள் எல்லாம் புகழ்ந்தன!

தமிழர்கள் அனைவரும் இன உணர்வுடன் சுதேசிக் கப்பலிலேயே ஈழத் தீவிற்குப் பயணம் செய்தனர். தங்களின் வாணிபப் பொருள்களையும் சுதேசிக் கப்பலிலேயே அனுப்பி வைத்தார்கள்.

ஆங்கிலேயக் கப்பல் நிறுவனத்தார் சுதேசிக் கப்பல் நிறுவனத்தை அழிக்கப் பல்வேறு வழிகளில் முயற்சித்தனர்.

இந்தியா ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் கட்டுப்பட்டு அடிமை நாடாக இருக்கும் வரை சமூக, கல்வி, பொருளாதாரத் துறைகளில் முன்னேற முடியாது என்பதை வ.உ.சி. அறிந்து கொண்டார். நாட்டு மக்களிடையே விடுதலை வேட்கையை ஏற்படுத்தி வெள்ளையர் ஆட்சியை இந்திய மண்ணிலிருந்து அகற்ற அரும்பாடுபட்டார். தனது நண்பர் சுப்பிரமணிய சிவாவுடன் இணைந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடு பட்டார். 

காவல் துறை அனுமதியின்றிப் பொதுக் கூட்டம் நடத்தியது ; அரசுக்கு எதிராகப் பொது மக்களைத் தூண்டி  விட்டது ஆகிய குற்றங்களுக் காக மாவட்ட நீதிமன்றத்தில் வ.உ.சி. மீது வழக்கு தொடரப்பட்டது. 1908 ஜூலை 7ஆம் நாள் வெள்ளைக்கார நீதிபதி வ.உ.சி.க்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்! 

தனக்கு விதிக்கப்பட்ட 40 ஆண்டுகள் ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி வ.உ.சி. சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். தீர்ப்பில் ஆயுள் தண்டனை  6 ஆண்டுக் கடுங்காவல் தண்டனையாகக் குறைக்கப்பட்டது! கோயம்புத்தூர் மற்றும் கண்ணனூர் சிறைகளில் தாங்கொணாத் துன்பங் களை அனுபவித்து விட்டு 1912 டிசம்பர் மாதம் கண்ணனூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

வ.உ.சி. விடுதலைப் போரில் தீவிரப் பங்கு எடுத்ததைப் போல் தமிழுக்கும் புகழ்மிக்க தொண்டு செய்துள்ளார். திருவள்ளுவரின் திருக்குறளுக்கு எளிய உரை எழுதி வெளியிட்டார்.





1936ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் நாள் சிதம்பரனார் இயற்கை எய்தினார். தமிழகத்தின் தலைநகர் சென்னைத் துறைமுகத்தின் வாயிலில் உள்ள சிதம்பரனார் சிலையும் ; புதுச்சேரி சட்டமன்றத்திற்கு எதிரில் உள்ள அவர் சிலையும் அவரின் தியாக வாழ்வை என்றென்றும் தமிழர்களுக்கு நினைவூட்டுவனவாகும்!






முக்கியமான சிலைகள்.

  1. சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலக முகப்பு.(1939)
  2. திருநெல்வேலி பாளையங்கோட்டை நுழைவாயில்.
  3. சென்னை மெரீனா கடற்கரை.
  4. தூத்துக்குடி துறைமுகம்.(முன்னாள் பிரதம மந்திரி திருமதி. இந்திரா காந்தி அம்மையாரால் திறந்து வைக்கப்பட்டது.)
  5. மதுரை சிம்மக்கல் (முன்னாள் முதல் அமைச்சர் திரு. எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.)
  6. திருநெல்வேலி வ.உ.சி. நினைவு இல்லம். (முதல் அமைச்சர் செல்வி. ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.)

நினைவு இல்லங்கள்.

  • ஓட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சி. யின் இல்லம்.[2]
தமிழ்நாடு அரசு வ.உ.சிதம்பரனார் பிறந்த தூத்துக்குடிமாவட்டம்ஒட்டப்பிடாரம் ஊரில் வ.உ.சிதம்பரனார் இல்லம் அமைத்துள்ளது. இதில் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இங்கு வ.உ.சி. அவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
  • திருநெல்வேலி வ.உ.சி. நினைவு இல்லம்.

வ.உ.சி. யின் நூற்றாண்டு விழாவின் போது முன்னாள் பிரதம மந்திரி திருமதி. இந்திரா காந்தி அம்மையாரால் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

தூத்துக்குடி துறைமுகம் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடியைத் தலைநகராகக் கொண்டு 1986-ல் மாவட்டம் உருவாக்கப்பட்ட போது இவருடைய பெயர் அந்த மாவட்டத்துக்கு வைக்கப்பட்டது.

வ.உ.சி. யின் வாழ்க்கை வரலாறு 'கப்பலோட்டிய தமிழன்' என்ற பெயரில் வெளியானது. நடிகர் திலகம் திரு. சிவாஜி கணேசன் அவர்கள் வ.உ.சி. யாகத் தோன்றினார். திரு. டி. ஆர். பந்துலு அவர்கள் படத்தைத் தயாரித்து இயக்கினார்.






இறுதியாக...




கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் வாரிசு முத்து பிரம்ம நாயகி உயர் கல்விக்காக உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரது தந்தை தினக்கூலி வேலை செய்யும் ஏழை. பொறியியல் படிப்புக்கு அவரது தகுதி மதிப்பெண் 1,130 / 1,200

உரிய உதவிகள் அவரைச் சென்றடைந்ததா என்பது பற்றி தெரியவில்லை. நண்பர்கள் இது பற்றி அறிந்தால் தெரியப் படுத்தவும்!



வ. உ. சி. இழுத்த செக்கு சென்னை காந்தி மண்டபத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

நன்றி 
வணக்கம்



No comments

Powered by Blogger.