Search This Blog

Cemetery of Elephant - யானைக் கல்லறை


வணக்கம் நண்பர்களே...!





யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி (இலையுண்ணி) விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும் (70 ஆண்டுகள்). மாந்தர்களைத் தவிர்த்த விலங்குகளிலே இதுவே அதிக நாட்கள் வாழும் நில விலங்கு ஆகும். இவை மிகவும் வலிமையானவை.




சிங்கம், புலி முதலியனவும் நெருங்க முடியாத வலிமை கொண்டவை. ஒரோவொருக்கால் சிங்கங்கள் ஒன்றாகச் சேர்ந்து, தனியாக வர நேரிடும் களைத்த அல்லது இளைத்த யானையைக் கொல்லும், ஆனால் இவ்வகை நிகழ்வுகள் மிக மிக குறைவே. யானைகளை எந்த விலங்கும் வேட்டையாடுவதில்லை (மனிதனைத்தவிர).




யானைகளில் மூன்று சிற்றினங்கள் இன்று உலகில் எஞ்சியுள்ளன. அவை ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், மற்றும் ஆசிய யானைகள் ஆகும். இவைகளுக்கு இடையே சிறப்பான வேறுபாடுகள் உண்டு.

வெள்ளை யானை என்பது வெள்ளை நிறத்தில் உள்ள யானை அல்ல. இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் ஒரு வித அரிய ரக யானை இனத்தினைக் குறிக்கிறது. தாய்லாந்து நாட்டில் வெள்ளை யானைகளிடமிருந்து எந்த வேலையையும் வாங்க மாட்டார்கள். ஆயினும் அதை வைத்து வளர்ப்போருக்கு பெரும் பொருட்செலவு ஏற்படும். இதனைக் குறிக்கும் வகையில் வெள்ளை யானை எனும் சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது - எதற்கும் பயன்படாத ஆனால் கெளரவுத்துக்காகவும், பெருமைக்காகவும் பெரும்பொருட்செலவில் பராமரிக்கப்படும் திட்டங்கள், விஷயங்கள் “வெள்ளை யானை”கள் என்று அழைக்கப்படுகின்றன.

ஆண் யானைக்கு களிறு என்று பெயர். பெண் யானைக்கு பிடி என்று பெயர். யானையின் குட்டியைக் கன்று என்றோ குட்டியானை என்றோ சொல்வர். யானை உரக்க எழுப்பும் ஒலியை பிளிறுதல் என்பர்.

யானைகள் இரண்டு தந்தங்களைக் கொண்டுள்ளன. இவைகளுக்கு யானைக் கோடு என்று பெயர். இந்த யானைக் கோடானது ஆசிய இந்திய யானைகளில் ஆண் யானைகளுக்கு (களிறுக்கு) மட்டுமே உண்டு ; பெண் யானைகளுக்குக் (பிடிக்குக்) கிடையா. ஆனால் ஆப்பிரிக்கக் காட்டு யானைகளில் ஆண் பெண் ஆகிய இருபால் யானைகளுக்கும் (களிறு, பிடி ஆகிய இரண்டிற்கும்) கோடு உண்டு. சுமத்ரா போர்னியோ பகுதிகளில் வாழும் யானை, இலங்கையின் யானைகளில் ஆண் பெண் (களிறு, பிடி) ஆகிய இருபால் விலங்குகளுக்கும் பெரும்பாலும் யானைக் கோடு கிடையா. யானைக் கோடானது யானையின் கடைவாய்ப் பற்களின் நீட்சியாகும். இதனால் இவைகளுக்கு யானைகளின் எயிறு அல்லது தந்தம் என்றும் பெயர் (எயிறு, தந்தம் என்றால் பல் என்று பொருள்). தந்தங்கள் 3 மீட்டர் (10 அடி) வரை வளரக்கூடியவை. மேலும் இவை 90 கிலோகிராம் எடை வரை இருக்கலாம்.


தந்தத்தினாலான அரியனை

யானைகள் தன்னுணர்வு கொண்டவை. இது கண்ணாடிச் சோதனை மூலம் நிறுவப்பட்டுள்ளது. யானைகள் முன் கண்ணாடியை வைக்கும் போது இவை தங்களை அடையாளம் கண்டுகொள்கின்றன. இத்திறன் இதுவரை மதிமாக்கள் ; சில குரங்கினங்கள் ; டால்பின்களில் மட்டுமே கண்டறியப் பட்டுள்ளது.

யானைகளுக்கு முக்கியமான அச்சுறுத்தல் வேட்டையாடுதல் ஆகும். யானைகள் அவற்றின் தந்தங்களுக்காக வேட்டை ஆடப்படுகின்றன.




யானைத் தந்தங்களுக்கு கறுப்பு சந்தையில் நிலவும் மதிப்பு மனிதர்களை இவ்வாறு செய்ய தூண்டுகிறது. யானைத் தந்தங்களைக் கொண்டு செய்யப்படும் பொருட்கள் பல லட்ச ரூபாய் மதிப்புள்ளவை. எனவேதான் வறிய நாடுகளில் வசிக்கும் ஆபிரிக்க நாட்டு மக்கள் யானை வேட்டையை ஒரு தொழிலாகவே செய்து வருகின்றனர். அது சட்ட விரோதமாக இருந்தும்கூட! இன்று யானை வேட்டை என்பது பரவலாக பல நாடுகளிலும் இடம்பெறுவதை நாம் காணலாம்.

காலம் காலமாக ஆபிரிக்க நாட்டு பழங்குடி மக்களிடையே விசித்திரமான ஒரு கதை உலாவி வருகின்றது. யானைகளின் கல்லறை! மரணம் நெருங்கி விட்டதாக உணரும் யானைகள் ஒரு குறிப்பிட்ட இலக்கை சென்றடைந்து அங்கேதான் உயிர்விட வேண்டும் என்ற வைராக்கியத்தோடு எஞ்சியிருக்கும் சக்தியை எல்லாம் திரட்டி பல 100km தூரம் ஓயாத பயணத்தை மேற்கொள்ளுமாம். இது பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்து வருவதால் அங்கே ஏகப்பட்ட யானைகளின் எலும்புக் கூடுகளும் தந்தங்களும் குவியல் குவியலாக கிடக்கிறதாம்! எவரேனும் ஒருவர் உயிரைப் பணயம் வைத்து இவ்விலக்கை அடைந்து விட்டால் இவ்வுலகில் அவர்தான் முதல் செல்வந்தர். எனினும் இதற்கான முயற்சியில் இறங்கியோர் மிகச் சிலரே! காரணம் யானைக் கல்லறையைச் சுற்றியிருக்கும் அபாயங்கள்தான்.

முதலாவது யானைக் கல்லறை என இவர்கள் சொல்லுமிடம் இருக்கும் பகுதி உலகிலேயே அடர்ந்த கானகமான அமெசான் காட்டுப்பகுதி . இங்கு வாகனங்களில் செல்ல முடியாது! தரைவழியாக கால்நடைப் பயணம்தான். அடர்ந்த கானகத்தினூடாக செல்கையில் எம்மைக் கடிக்கும் அட்டைகளையும் விசப்பூச்சிகளையும் தாங்கிக் கொள்ள வேண்டும். தொடர்ந்து முன்னேறுகையில் நாம் எதிர்பாரா சமயத்தில் கொடிய காட்டு விலங்குகளும் பாம்புகளும் எம்மை எதிர்கொண்டழைக்கும். 

சரி.... இவற்றையெல்லாம் ஒருமாதிரியாக சமாளித்து முன்னேறுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்... இறுதியாக நரமாமிசம் உண்ணும் காட்டுவாசிகளின் விச அம்புகள் உங்களுக்கு அறிமுகமாகும். இவர்களிடமிருந்து இதுவரை யாரும் தப்பித்ததாக எவரும் சொல்கிறார்களில்லை. எல்லாவற்றையும் விட முக்கியமானதொன்று இந்த இடத்துக்கு செல்ல வரைபடம் என்று எதுவும் இல்லை! எனவேதான் என்பது இதுவரை ஒரு மர்மமாக ஒரு புரியாத புதிராகவே இருந்து வருகிறது.




இன்னும் சில விடயங்களைப் பார்த்துவிட்டு நாம் இந்தப் பதிவை நிறைவு செய்யலாம்.

பெரியவையும், நீண்ட காலம் வாழுவனவும், குறைவான வேகத்தில் இனம் பெருகுவனவுமான யானைகளுக்கு அளவு மீறி வேட்டையாடுதல் பெரும் பாதிப்பை எற்படுத்துகின்றது. இவை பெரிதாக இருப்பதனால் எளிதில் மறைந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு யானையும் வளர்ந்து இனம் பெருக்குவதற்குப் பல ஆண்டுகள் ஆகின்றன. ஒவ்வொரு யானைக்கும் சராசரியாக நாளொன்றுக்கு 140 கிலோகிராம் (300 இறாத்தல்) இலை தழைகள் தேவைப்படுகின்றது. புலி, சிங்கம் போன்ற பெரிய கோண்மாக்கள் அழிக்கப்படுவதாலும் யானைகளின் உணவுக்குப் போட்டியாக உள்ள சிறிய தாவர உண்ணிகள் பெருகி தாவரங்களைப் பெருமளவில் அழிப்பதால் யானைகளுக்கு உணவு பெறுவது கடினமாகின்றது. யானைகள் மனிதனால் கொல்லப்படுவதைத் தவிர பிற விலங்குகளால் உணவுக்காகக் கொல்லப்படுவது அரிது.

யானைகள்  மனிதர்களினால் சட்டத்துக்கு அமைவாகவும் எதிராகவும் கொல்லப்படுவதனால்  யானைகளின் உடலமைப்பில் எதிர்பாராத விளைவுகளும் ஏற்படுகின்றன. ஆப்பிரிக்காவில் தந்தங்களுக்காக வேட்டையாடுபவர்கள்  பெரிய தந்தங்களுள்ள யானைகளையே வேட்டையாடுவதால் எஞ்சியிருக்கும் யானைகள் சிறிய தந்தங்கள் உள்ளவையாக அல்லது தந்தங்கள் இல்லாதவையாக உள்ளன. புதிதாகப் பிறக்கும் குட்டிகளும் இவற்றின் மூலமாகவே பிறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகரிப்பதால் புதிய தலைமுறைகளில் தந்தமில்லாத் தன்மையை உருவாக்கும் மரபணுக்கள் கூடுதலாகிப் பெருமளவிலான தந்தமில்லா யானைகள் பிறப்பதற்கு வழியேற்படுகிறது. 1930ல் 1% ஆக இருந்த இவ்வாறான யானைகளின் தொகை இப்போது சில பகுதிகளில் 30% வரை அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் தந்தமில்லாத் தன்மை என்பது ஒரு அரிதான இயல்புப் பிறழ்வாக இருந்த நிலை மாறி இப்போது பொதுவான மரபுவழி இயல்பாக மாறிவருகிறது.

உயிர்ப் பல்வகைமையின் ஒரு கூறான யானை இனம் அழியாது பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது இன்னுமொரு கூறான மனித இனத்தின் கடமையாகும்! 




நன்றி 
வணக்கம்




No comments

Powered by Blogger.