'கெப்டன் அமெரிக்கா : சிவில் வோர்' ட்ரெய்லர் விமர்சனம் - 'CAPTAIN AMERICA : CIVIL WAR' TRAILER REVIEW
மெக் மில்லரின் "கெப்டன் அமெரிக்கா: சிவில் வோர்" எனும் கொமிக் ஸ் புத்தகத்தின் கதையமைப்பு மற்றும் எண்ணக்கருவை மையமாகக் கொண்டு
மாக்கஸ் மற்றும் மெக்பீலியின் திரைக்கதை எழுத்துப் பணிகளுடன் திரைப்படத்தின் ஆக்கப் பணிகள் 2013இல் ஆரம்பமாயின.
2014 இன் ஆரம்பத்தில் றூசோ சகோதரர்களின் முந்தைய படத்தினைத் (கெப்டன் அமெரிக்கா : தி வின்ரர் சோல்ஜர்) திரையிடும் சோதனை முயற்சிகள் வெற்றியளிக்கவே,
இத்திரைப்படத்துக்கான பணிகளிலும் இருவரும் அமர்த்தப்பட்டனர்.
2014 அக்டோபரில் இதற்கு "கெப்டன் அமெரிக்கா: சிவில் வோர்" என்ற தலைப்பு முடிவானது.
"கெப்டன் அமெரிக்கா: சிவில் வோர்" இவ்வருடம் மே 6 இல்
3டி மற்றும் ஐமேக்சில் வெளியிடத் திட்டமிட்டுள்ளார்கள்.
இந்த படத்திற்குரிய ட்ரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டு மிகப்பெரும் பார்வையாளர் எண்ணிக்கையையும் லைக் ஸையும் பெற்றுவருகிறது.
ட்ரெய்லரைப் பார்த்து நான் புரிந்து கொண்ட கதை இதுதான்
'அவெஞ்சர்ஸ் : ஏஜ் ஒஃப் அல்ட்றோன்' திரைப்படத்தின் சம்பவங்களில் அவெஞ்சர்சின் உலகைக் காப்பாற்றும் முயற்சி பாரிய சேதங்களை உருவாக்கியதன் காரணமாக
அவர்களின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் Superhuman Registration Act பதிவுச் சட்டத்தை கொண்டுவருகிறது.
இதன் விளைவாக ஒரு புது எதிரியை அவெஞ்சர்ஸ் குழு எதிர்கொள்ளும்போது, குழுவிவினரிடையே விரிசல் உண்டாகிறது.
அயர்ன் மென் மற்றும் கெப்டன் அமெரிக்கா தலைமையில் இரண்டு குழுக்களாக பிரிந்து அடித்துக் கொள்கிறார்கள்
அயர்ன் மென் குழு
1. டொனி ஸ்டார்க்-அயன் மேன் :
Marvel கொமிக் ஸில் புகழ்பெற்ற 'The Three Monsters'ல் ஒருவர்.
மற்ற இருவர் ஹல்க் & தோர்.
ஆண்டு 1963.
ஹல்க் & தோர் கொமிஸ்கள் நன்றாகப் போய்க்கொண்டிருந்த நேரம். கொமிஸ் ரசிகர்களுக்கு ஒரு வெரைட்டி தேவைப்பட்டது.
1963ல், மக்கள் அதிகம் வெறுக்கக்கூடிய விஷயம் ராணுவம்தான்!
பனிப்போரின் உச்சகட்டம்.
மக்கள் அதிகமாக வெறுத்த ஒரு விஷயத்தையே அவர்களின் மீது அளவுக்கதிகமாகத் திணித்து,
அவர்களுக்கு அந்தக் கதாபாத்திரத்தைப் பிடிக்கவைக்க விரும்பினார் எழுத்தாளர் 'ஸ்டன் லீ'.
ஆகவே, ஒரு ஆயுத வியாபாரியாக தனது ஹீரோவை உருவாக்கினார்.
எப்போது பார்த்தாலும் ஆயுதங்களையே சிந்தித்து ஆயுதங்களுடனேயே வாழும் நபராக அப் புதிய ஹீரோ இருந்தான்.
கூடவே, அவன் ஒரு பெரும் பணக்காரனாகவும் இருந்தான்.
பெண்களுடனேயே காலம் கழிக்கும் மனிதன்.
பிறரின் கவலைகளைப் பற்றிக் கவலையில்லாத மனிதன்.
ஆயிரம் இருந்தும்…. வசதிகள் இருந்தும்…நிம்மதி இல்லாமல் அவனை அலைக்கழிப்பதற்கென்றே அவனது உள்மனதில் ஒரு ரகசியம் உண்டு.
ஆம். அவனது இருதயம் அழிந்துகொண்டிருக்கிறது.
இதிலிருந்து தன்னை அவன் எப்படிக் காத்துக்கொள்கிறான்?
இப்படியாக டொனி ஸ்டார்க்- The Iron Man உருவானார்.
கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பவர் Robert Downey
2. ஜேம்ஸ் ரோட்ஸ் - வோர் மெஷின் :
இவர் அயன்மென் பக்கம் இருப்பதில் வியப்பேதுமில்லை!
டொனி ஸ்டார்க்கின் தனிப்பட்ட வானூர்தி ஓட்டுநர் இவர்.
அத்தோடு நம்பிக்கையான உயிர் நண்பர் வேறு.
கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பவர் Don Cheadle
3. நடாஷா ரொமனப் - ப்ளாக் விடோ :
எனக்கு ஆச்சரியமே இவள் எப்படி அயன்மெனுடன் சேர்ந்தாள் என்பதுதான்.
ஆரம்பத்திலிருந்தே இவளுக்கு அயன்மெனுடன் ஒத்துவராது.
கெப்டனுடன் தான் அதிக நெருக்கம் காட்டுவாள்.
ஆரம்பத்தில் ரஷிய உளவாளியாக அமெரிக்காவிற்குள் நுழைகிறாள்.
பின்னர் இவளை ரஷியா கைவிடுகிறது.
நிக் பியுரி இவளை காப்பாற்றி ஸீல்டின் மெம்பராக்குகிறார்.
பின்னர் அவெஞ்சர்ஸ்ஸிலும் இணைத்து விடுகிறார்.
விடோவின் கடந்தகாலம் எப்போதும் அவளைத் துரத்துகிறது.
அவள் கடந்த காலத்தில் இருந்து விடுபட்டு முன்செல்லவும்
தனது வாழ்கையின் அர்த்தங்களை விளங்கிக் கொள்ளவும் முயல்கிறாள்.
அவள் சிறந்ததொரு குறிக்கோளைக் கொண்டுள்ளதுடன்
அவை கடந்தகாலத்திலிருந்து மீண்டு வரும் வலுவை அவளுக்கு கொடுக்கின்றன.
கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பவர் Scarlett Johansson
4. விஷன் :
வேற்றுக் கிரக வாசிகள் படையெடுத்தால் பூமி அழிவது நிச்சயம் என்ற உண்மை ஸ்டார்க்கின் மனதில் தோன்றிக்கொண்டே இருக்கிறது.
ஏற்கனவே பல இரும்பு மனிதர்களை அவர் உருவாக்கியாகிவிட்டது.
ஏற்கனவே அவரிடம் 'ஜார்விஸ்' என்கிற ப்ரோகிரமும் உண்டு.
அவர்கள் மட்டும் போதாது என்றும்
இன்னும் சிந்தனையிலும் ஆற்றலிலும் சக்திவாய்ந்த ஒரு இயந்திரத்தை உருவாக்கிவிட்டால்
உலக அமைதியை அது பார்த்துக்கொள்ளும் என்ற உறுதியான நம்பிக்கையின்படி
அல்ட்ரான் என்ற ப்ரோக்ராமை உருவாக்கி வைத்திருக்கிறார்.
ஆனால் இந்த அல்ட்ரானை எப்படி உயிர்ப்பிப்பது?
இத்தகைய சூழலில்தான் அவெஞ்சர்ஸ் முதல் பாகத்தில்
தோரின் தம்பி லோகி விட்டுச்சென்ற அவனது சக்திவாய்ந்த மந்திரத்தடி HYDRAவின் (ஸீல்டுக்கு எதிரான நாசகார அமைப்பு) பரிசோதனைக்கூடத்தில் இருப்பது அவெஞ்சர்களுக்குத் தெரியவருகிறது.
உடனடியாக அச் சோதனைச்சாலையை அவெஞ்சர்கள் தாக்குகின்றனர்
இறுதியில் அவெஞ்சர்களால் லோகியின் தடியைக் கைப்பற்ற முடிகிறது.
அதனுள் இருப்பது infinity stone என்று அழைக்கப்படும் அண்டவெளியின் மிகச்சக்திவாய்ந்த ஆறு கற்களில் ஒன்று.
அதை வைத்து என்னவேண்டுமானாலும் செய்ய இயலும்.
இந்த வெற்றியை அவர்கள் கொண்டாடும்போதுதான்
இந்தக் கல்லில் இருக்கும் சக்தி வழியாகத் தனது அல்ட்ரான் ப்ரோக்ராமுக்கு உயிர் கொடுக்கிறார் டொனி.
அந்த அல்ட்ரானோ இவர் உருவாக்கியதற்கு நேர் எதிரான சிந்தனையோடு
உலகில் இருந்தே மனிதர்களை அழிக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டு உயிர்பெறுகிறது.
அப்போது இதன் தவறான உருவாக்கத்தைக் கண்டுபிடிக்கும் ஜார்விஸையும் அழிக்கப் பார்க்கிறது.
ஆனால் ஜார்விஸ் புத்திசாலித்தனமாக மறைந்துவிடுகிறது
பின்னர் அல்ட்ரான் ஒரு உடலை உருவாக்கி தனது ப்ரோகிராமை அந்த உடலுக்குள் செலுத்த முயல்கிறது.
இம் முயற்சி அவெஞ்சர்களினால் தடுக்கப்பட்டு அவ்வுடல் கைப்பற் றப்படுகிறது
இவ்வுடலுக்கு தோர் தனது சுத்தியலால் உயிர் கொடுக்க
விஷன் உருவாகிறான்.
இவன் பலத்தில் தோருக்கு நிகரானவன்.
கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பவர் Paul Bettany
5. டகல்லா - ப்ளாக் பாந்தர் :
வைப்ரேனியம் புகழ்பெற்ற உலோகம்.
கெப்டன் அமெரிக்காவின் கேடயம் வைப்ரேனியத்தால் உருவாக்கப்பட்டதுதான்.
அல்ட் ரானின் உடலும் இந்த உலோகத்தால் உருவாக்கப்பட்டதுதான்.
மிக மிக உறுதியான உலோகமிது!
உலகிலேயே வைப்ரேனியம் கிடைக்கும் ஒரே நாடு
அப்ரிக்காவின் வகனாடா (Wakanada).
இந்த நாட்டை ஆள்பவன் டகல்லா.
இவன் தான் ப்ளாக் பாந்தர் என்ற பெயரில் அறிமுகமாயிருக்கும் புதிய அவெஞ்சர்.
கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பவர் Chadwick Boseman
கெப்டன் அமெரிக்கா குழு
1. ஸ்டீவ் ரொஜர்ஸ் - கெப்டன் அமெரிக்கா:
அவெஞ்சர் கதாபாத்திரங்களிலேயே அலுப்பான ஆள் கெப்டன் தான்!
மற்றவர்கள் எல்லாம் புதிய கருவிகள் வைத்துக்கொண்டு அதிரடியைக் கிளப்புகையில்
கெப்டன் மட்டும் ஒரே ஒரு கேடயத்தை வைத்துக்கொண்டு எல்லாரையும் அடித்துக்கொண்டிருப்பார்.
கூடவே, யாரிடமும் இல்லாத தர்ம நியாயம் வேறு இவரிடம் எக்கச்சக்கம்.
இதனாலேயே இவரது கதாபாத்திரம் பெரிதாகப் பேசப்படவில்லை.
அவெஞ்சர்ஸ் அசைன்மெண்ட் ஒன்றை செய்யும்போது அவர்களுக்கு கட்டளை வழங்கி வழி நடத்துவதுதான் இவர் தொழில்!
இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த நேரம்.
ஹிட்லரும், முசோலினியும், ஜப்பானும் உலகையே கூறுபோட்டு விழுங்க முயற்சித்த சூழலில்
அமெரிக்க ராணுவத்தில் சேர ஆசைப்படுகிறான் ஸ்டீவ் ரொஜர்ஸ்.
இதன் மூலம் ஹிட்லரின் நாஜிப் படைகளை வீழ்த்தலாம் என்பது அவன் கனவு.
ஆனால் அவனது உடல் போதிய ஆரோக்கியமின்றி இருந்ததால்
அவனால் ராணுவத்தில் சேர முடியவில்லை.
என்ன செய்யலாம்?
ஜெர்மனிக்கு எதிராக போர் புரியவேண்டியது
தன் கடமையாயிற்றே...
உடல்நலம் குன்றி இருப்பதுதானே பிரச்னை?
நல்லது.
அதற்கு மாற்று ஏற்பாடு செய்யலாம்.
அறிவியலின் துணையுடன் அவன் உடல் தேறுகிறது.
அதுமட்டுமல்ல
சர்வ வல்லமைப் படைத்த சூப்பர் ஹீரோ ஆக உருமாறுகிறான்.
அவனது பெயரும் கெப்டன் அமெரிக்காவாகிறது.
அமெரிக்க கொடியாலான உடை அணிந்து
தனியாக ஒரு படையை நிர்மாணித்து
நாஜிக்களை பூண்டோடு அழிக்கிறான்.
ஒரு போரில் பனிப்பாறைக்குள் புதைந்து போகும் கெப்டனை நிக் பியுரி தோண்டி எடுக்கிறார்.
இரண்டாம் உலகப்போரின் காலகட்டத்தைச் சேர்ந்த கெப்டனால்
21ம் நூற்றாண்டின் வேகமான அசுர வளர்ச்சியுடன் ஒத்துப்போக முடிவதில்லை
கையில் ஒரு குறிப்பேட்டுடன், கேள்விப்படும் நல்ல விஷயங்கள் அனைத்தையும் அதில் குறித்துக்கொண்டு அவைகளைத் தேடிப்படித்து வருகிறார்.
இண்டர்நெட் இருப்பதால் இவைகளைப் பற்றிக் கொஞ்சமாவது படிக்க முடிகிறது என்று அங்கலாய்த்துக்கொள்கிறார்
இந்த உலகின் முதல் 'சுப்பர் ஹீரோ'
கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பவர் Chris Evans
2. ஜேம்ஸ் புக்கானன் பர்னஸ் - வின்ரர் சோல்ஜர்:
ஸ்டீவ் ரொஜர்சின் உற்ற நண்பனான இவன்
இரண்டாம் உலகப் போரின்போது கொல்லப்படுகிறான்.
பின்னர் ஹைட்ரா அமைப்பினால் மீளவுயிர்ப்பிக்கப்பட்டு
நாச வேலைகளைச் செய்வதற்காக மூளைச் சலவைக்கு உட்படுத்தப்படுகிறான்.
இவன் ஒரு கொலை இயந்திரம் போல தொழிற்படுவதன் காரணத்தால்
கெப்டன் அமெரிக்காவால் இவனை தோற்கடிக்க முடிவதில்லை.
அவனை பற்றி எஞ்சியிருப்பது எல்லாம் அவனுடைய ஆளுமை பற்றிய தேடல்கள் மட்டுமே.
அவன் உயிர்ப்பிக்கப்படக்கூடியவனா?
இதுவரையிலும் இந்த உலகம் பார்த்த கொலைஞர்களினும் மோசமானவனா?
அல்லது வருந்தித் துடிக்கும் ஒரு போர்க் கைதியா?
அவனுடைய நினைவுகள் மீளுமா?
இல்லையெனில் அவன் கெப்டனை எவ்வாறு அடையாளம் காண்பான்?
என்று பல கேள்விகள் எழுகின்றன.
கெப்டன் அமெரிக்காவின் இறப்பிற்கு பின்னர் புதிய கெப்டனாக பொறுப்பேற்க போகிறவன் இவன் தான்!
இதனால் அவனது கதாபாத்திரம்
ஒரு கவர்ச்சிகரமானதும் செழிப்பானதுமாகும்!
கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பவர் Sebastian Stan
3. சாம் வில்சன் - பல்கன் :
வான்வெளித்தாக்குதல் மற்றும் வான்வெளி மீட்புக்குழு நடவடிக்கைகளுக்காக விசேடமாக உருவாக்கப்பட்ட
இறகு-வடிவுடைய பொறியை இயக்குவதில் வல்லவர் இவர்.
கெப்டன் அமெரிக்காவின் உற்ற நண்பரும் கூட.
கெப்டனையும் பல்கனையும் பற்றிய சிறந்த விடயமானது தங்களிடையே கொண்டுள்ள பரஸ்பர மரியாதையே!
கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பவர் Anthony Mackie
4. கிளின்ட் பாட்டன் - ஹோக்கை :
இவர் ஒரு கைதேர்ந்த வில்லாளி
முன்னாள் ஷீல்டு (S.H.I.E.L.D.) உளவாளி
தற்போதைய அவெஞ்சர்
குழுவாகச் செயற்படுவதில் மகிழ்ச்சியடைபவன்
தனக்கென்று இருக்கும் குடும்பத்தையும்
கருவுற்றிருக்கும் தன் மனைவியையும் அருகிலிருந்து பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் இவனது கனவு!
கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பவர் Jeremy Renner
5. வண்டா மெக்சிமப் - ஸ்கார்லெட் விச் :
மந்திரங்கள், தொலையியக்க சக்திகளைக் கையாள்வதில் வல்லமையான அவெஞ்சர்.
இவளது சகோதரன் குயிக் சில்வர் - அல்ட் ரானுடன் நடந்த போரில் ஹோக்கையை காப்பாற்ற உயிரை விட்டவன்.
இவர்கள் இருவரும் இரட்டையர்கள்
இவர்கள் இருவரின் தந்தை
உலகப் பிரசித்தி பெற்ற வில்லன்களில் ஒருவர்.
மிகவும் கிழப்பருவம் எய்தியும் இன்னும் படுபயங்கர வில்லத்தனம் செய்துகொண்டிருக்கும் அந்த வில்லன் – M A G N E T O!
X men படங்களில் எல்லாம் நாம் பார்த்துவந்த அதே மேக்னீடோதான்!
கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பவர் Elizabeth Olsen
6. ஸ்கொட் லேங் - அன்ட் மேன்
எறும்பு முகமூடி போன்ற உடையை அணிந்துகொண்டால், அணிபவர் எறும்பு அளவுக்கு சிறிய உருவத்துக்கு மாறிவிடுவார்.
ஆனால் அவருக்கு மனிதன் அளவுக்கு பலம் இருக்கும்
என்பதுதான் அன்ட் மேன் டெக்னோலஜி.
1989 ம் ஆண்டு விஞ்ஞானி ஹங்க் பிம் கண்டுபிடித்த அன்ட் மேன் டெக்னோலஜியை தவறாகப் பயன்படுத்துகிறது ஷீல்ட் நிறுவனம்.
அதனால் கோபமாகும் பிம்
அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி
ஒரே மகள் ஹோப் வன் டெய்னுடன் வாழ்கிறார்.
மனைவியிடம் இருந்து விவாகரத்தாகி
குழந்தையைப் பிரிந்து வாழும் ஒரு சிறிய திருடன் ஸ்கொட் லேங்.
ஸ்கொட் சிறையில் இருக்கும்போது
ஒரு வீட்டில் திருடச்சொல்லி அசைன்மெண்ட் கொடுக்கப்படுகிறது. அந்த இடத்தில் திருடச்செல்கிறான்.
ஆனால் அங்கே ஒரு சட்டையைத் தவிர வேறு எதுவும் இல்லாமல் போக,
என்னவென்று தெரியாமல் அதனை மட்டும் தூக்கிவருகிறான்.
சும்மா இருக்க முடியாமல் அந்த டிரெஸ்ஸைப் போட்டுப்பார்க்க, அன்ட் மேனாக மாறிவிடுகிறான்.
அதன்பிறகுதான் அந்த டிரெஸ்ஸை திருடச் சொன்னது பிம் என்பது தெரியவருகிறது.
ஹைற்றாவினால் மனித குலத்துக்கு ஆபத்து என்பதால்
அதனை அழிக்க ஸ்கொட்டை தேர்வு செய்திருக்கிறார் பிம்.
இப்படித்தான் அறிமுகமாகிறான் அன்ட் மேன்!
கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பவர் Paul Rudd
பல சுப்பர் ஹீரோக்கள் இணைந்து செய்யும் அதிரடி சாகசங்களையும் மோதல்களையும் பார்த்துக்கொண்டே இருந்த ரசிகர்களை
திடீரென வியப்பில் ஆழ்த்தும் விதமாக ட் ரெய்லரின் இறுதியில் அட்டகாசமாக என்ட்றி கொடுக்கிறான் ஸ்பைடெர் மேன்
கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பவர் Tom Holland
12 சூப்பர் ஹீரோக்களும் ரசிகர்களுக்கு செம்ம ட் ரீட் வைப்பது நிச்சயம்!
***
Post a Comment