விஜய்-சச்சின் : விக்ரம்-ட்ராவிட் : அஜித்-கங்குலி | VIJAY-SACHIN : VIKRAM-DRAVID : AJITH-GANGULY
விஜய்-சச்சின்
இருவருக்கும் ரசிகர்கள் அதிகம்.
ஒருவர் களத்தில் இறங்கினால் மைதானம் அலறும்,
மற்றொருவருக்கு தியேட்டர்.
பெரியவர் முதல் குழந்தை வரை கவர்ந்தவர்கள்.
ஒருவருக்கு விளம்பரபட தயாரிப்பாளர்கள்,
மற்றொருவருக்கு பட தயாரிப்பாளர்கள் கொட்டிக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.
இருவருக்கும் கடவுள் பக்தி அதிகம்.
விஜய்க்கு சர்ச்ஜேசு, சச்சினுக்கு சாய்பாபா
இருவரும் மஹாபாரத அர்ஜுனனை போன்றவர்கள்.
களத்தில் இறங்கினால் அதகளம்தான்!
ஆனால் தலைமைப்பண்பு என வரும்போது?
அதற்கென்று சில தனியான குணங்கள் வேண்டும்.
அது இருவருக்கும் குறைவு.
இமேஜ் பற்றி அதிகம் கவலைப்பட்டவர்கள்.
வால்டர் தேவாரம் வீரப்பனைப் பிடிக்க அதிரடிப்படை தலைவரான போது இப்படி சொன்னார்கள்,
"இவர் அருள்,ஸ்ரீபால் போன்றோர் வியூகம் அமைத்து கொடுத்தால் சிறப்பாக செயல்படுவார்; ஆனால் இவரால் தனியாக சிறப்பாக செயல்படமுடியாது" என்று.
துரதிஷ்டவசமாக அவரும் அதை நிரூபித்தார்.
இவர்களும் அவரைப் போன்றவர்களே!
--------
விக்ரம்-ட்ராவிட்
இருவரும் தங்கள் துறைகளில் கைதேர்ந்தவர்கள்.
முன் ஜோடியுடன் ஒப்பிட்டால் திறமை அதிகம். ஆனால் அதற்கேற்ற ரசிகர்கள் குறைவு.
இருவரும் வல்லுனர்களால் சிலாகிக்கப்படுபவர்கள்.
சாதாரண ரசிகர்களால் அந்நியனாக பார்க்கப்படுபவர்கள்.
ஒருவர் அற்புதமான பேட்டிங் டெக்னிக் கொண்டவர்.
மற்றவர் அபாரமான நடிப்பு திறமை உடையவர்.
ட்ராவிட்டுக்கு இந்தியாவைவிட வெளிநாட்டில் டெஸ்ட் சராசரி அதிகம்.
விக்ரமுக்கு தமிழ்நாட்டை விட வெளி மாநிலங்களில் மதிப்பு அதிகம்.
--------
அஜித்-கங்குலி
முன் இரு ஜோடிகளுடன் ஒப்பிட்டால் இவர்களுக்கு தொழில் திறமை குறைவு.
ஆனாலும் இருப்பதை வைத்துக்கொண்டு இவர்களுடன் மல்லுக்கட்டி முன்னேறியவர்கள்.
கங்குலிக்கு ஓப் சைட் என்றால் அஜித்துக்கு அக்சன் சீன்.
கங்குலிக்கு லெக் சைட்டில் நளினமாக ஆடவராது.
நம்மாளுக்கு காலை வைத்து நளினமாக ஆட தெரியாது.
போர்ம் இல்லாத காலங்களில் மீடியாக்களால் பந்தாடப்பட்டவர்கள். ஒருவருக்கு வங்காளம் பின்னால் நின்றது.
இவருக்கு இவரது பி & சி ரசிகர்கள்.
துறை வல்லுனர்களிடம் இவர்களைப்பற்றி கேட்டால் நல்லமுறையில் பதில் வராது.
ஆனாலும் நின்றவர்கள்!
ஆனால் தலைமைக்கு தேவையான குணங்கள் இருவரிடமும் அதிகம்.
தைரியமானவர்கள்!
கங்குலி 1991 அவுஸ்திரேலியப் பயணத்தில்
"நான் கிரிக்கெட் ஆட வந்தேன், கூல்ட்ரிங்ஸ் கொடுக்க அல்ல" என்று நிர்வாகத்தை எதிர்த்தவர்.
இவர் 'பாசத் தலைவனுக்கு பாராட்டு' விழாவில் அந்த தலைவன் முன்னாலேயே பொங்கியவர்.
இருவரும் போர்மை இழந்து பின்னர் மீண்டும் ஜெயிப்பார்கள்.
பல தோல்விகள் கொடுத்தாலும் பின் ஒரே ஒரு வெற்றியின் மூலம் இருவரும் எழுந்து நிற்பார்கள்!
***
Post a Comment