Search This Blog

First Class Super Computers - முதல்தர சூப்பர் கணணிகள்

வணக்கம் நட்பூஸ்...@!!@




இன்றய கணணிகளில் அதிக செயற்றிறன் மிக்கதும் விலை கூடியதும் அதி உயர் தொழில்நுட்பத்திலும் அமையப்பெற்றிருக்கும் கணணியே சூப்பர் கொப்புயுட்டர்ஸ் ஆகும். 

இவை பெரும்பாலும் பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சிகூடங்கள், பெரும் வேலை பழுவுள்ள நிறுவனங்களிலேயே பயன்படுத்தப்படுகின்றது. 

இவை ஆயிரக் கணக்காண  Micro Processors களை தன்னகத்தே கொண்டுள்ளதோடு எமது வீட்டிலுள்ள கணணிகளை விட பன் மடங்கு செயற்றிறன்மிக்கவை.


Micro Processor பலவகைகளிலும் பல அமைப்புகளிலுமுண்டு. Micro Processor நாங்கள் பாவிக்கும் கணிப்பான்கள், டிஜிற்ல் மணிக்கூடுகள், கைத்தொலைபேசிகள் மற்றும் VCR களிலும் பாவிக்கப்படுகின்றன. 

Micro Processor நாம் கொடுக்கும் அறிவுறுத்தலுக்கிணங்க பின்வரும் அடிப்படை செயற்பாடுகளைச் செய்யும் 

  1. Arithmetic/Logic Unit மூலம் கணிப்பீடுகளைச் செய்தல் (அதாவது கூட்டல் கழித்தல் பெருக்கல் பிரித்தல் போன்ற கணிப்புகளை செய்தல்) 
  2. Dataகளை Memory இடையே இடம் மாற்றல் 
  3. Logical லான முடிவுகளை எடுத்தல் 


நாம் கொடுக்கும் ஒவ்வொரு அறிவுறுத்தலும் நேரத்தின் அடிப்படையிலேயே செயற்படுத்தப் படுகின்றன. உதாரணமாக 
"பானைக்குள் இருக்கும் சோற்றை கோப்பையில் போடு" 
எனும் அறிவுறுத்தலை எடுத்துக்கொண்டால் 

  1. பானைக்கு அருகில் போதல் 
  2. சோற்றை எடுத்தல் 
  3. கோப்பைக்கு அருகில் வரல் 
  4. கோப்பையில் போடல் 

என்றவாறு Micro Processor அதை இயக்க அதற்கு 4 நேர அலகுகள் தேவைப்படும். 


இப்போதய கணணிகள் செக்கனுக்கு கொட் ரில்லியன் கணக்காக நேரத் துடிப்புகளை உருவாக்க வல்லன. ஒவ்வொரு துடிப்பிலும் அறிவுறுத்தல்கள் செயற்படுத்தப்படும். இதனால்தான் கணணியின் வேகத்தை அதன் நேர அலகை வைத்து கணிப்பிடுவார்கள். 


நாம் இப்போது உலகில் உள்ள சூப்பர் கணணிகளை அவற்றின் வேகத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்த முயற்சிப்போம்!




இறுதியிடம்...
க்ரே-1
(CRAY-1) 


  • அமெரிக்காவின் மெக்சிகோ நகரில் உள்ள லொஸ் அலமொஸ் தேசிய ஆய்வகத்தில் உள்ளது.
  • இதன் நிறை 5.5 டொன்களாகும்.
  • ஒரு செக்கனில் 160 மில்லியன் கணக்குகளை செய்யகூடியது.
  • 1976ல் உலகின் அதிவேகமான Super Computer இதுதான்.



10 ம் இடம்
க்ரே-2
(CRAY-2)


  • அமெரிக்காவின் Department of  Defense & Energy எனும் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டது.
  • "பபிள்ஸ்" என்பது இதன் இன்னுமொரு பெயராகும்.
  • ஒரு செக்கனில் 1.9 பில்லியன் கணக்குகளை செய்யகூடியது. 
  •  1985-1989 வரையில் உலகின் அதிவேகமான Super Computer இதுதான்.



9 ம் இடம்
கனெக்ஷன் மெசின் - 5
(CONNECTION MACHINE-5)


  • டெனி ஹிலிஸ் என்பவரின் ஆய்வுக்காக தயாரிக்கப்பட்டது.
  • தற்போது செயற்கை நுண்ணறிவு செயற்திட்டங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
  • 1992 ல் உலகின் அதிவேகமான Super Computer இதுதான்.



8 ம் இடம்
அஸ்கி ரெட்
(ASCI RED)

  • Intel Corp, Sandia Labs  என்பவற்றினால் இணைந்து தயாரிக்கப்பட்டது.
  • ஒரு செக்கனில் 2   ட்ரில்லியன் கணக்குகளை செய்யகூடியது.
  •  1997-2000 வரையில் உலகின் அதிவேகமான Super Computer இதுதான்.


7 ம் இடம்
அஸ்கி வைட்
(ASCI WHITE)

  • IBM நிறுவனத்தினால் ASCI RED க்கு பதிலாக தயாரிக்கப்பட்டது.
  • ஒரு செக்கனில் 12.3   ட்ரில்லியன் கணக்குகளை செய்யகூடியது.
  •  2000-2002 வரையில் உலகின் அதிவேகமான Super Computer இதுதான்.


6 ம் இடம்
ஏர்த் சிமியுலெட்டர்
(EARTH SIMULATOR)

  • Japan Aerospace Exploration Agency, Japan Atomic Energy Research Institute, Japan Marina Science & Technology Center எனபவற்றினால் உருவாக்கப்பட்டது.
  • 2002-2004 வரையில் உலகின் அதிவேகமான Super Computer இதுதான்.


5 ம் இடம்
புளு ஜீன்/எல் 
(BLUE GENE/L)


  • உலகின் வேகமான 7வது Super Computer  இதுவாகும்.
  • அமெரிக்காவின் கலிபோர்னியாவின் லிவ்மோரில் அமைந்துள்ள லோரன்ஸ் லிவ்மோர் தேசிய ஆய்வகத்தில் உள்ளது.
  • ஒரு செக்கனில் 478.2   ட்ரில்லியன் கணக்குகளை செய்யகூடியது.



4 ம் இடம்
சிறுத்தை கணனி 
(JAGUAR)


  • டெனிசிலுள்ள ஓக்ரிஜ்ஜின் ஓக்ரிஜ் தேசிய ஆய்வகத்தில் உள்ளது.
  • இது உலகிலேயே மிக வேகமான 500 Super Computer களினுள் ஒன்றாக கருதப்படுகிறது. 
  • இன்னுமொரு பெயர் Cray XT5. 
  • ஒரு செக்கனில் 1கொட்ரில்லியன் கணக்குகளை செய்யகூடியது.



3 ம் இடம்
ஐ.பி.எம் ரோட் ரன்னர் 
(IBM ROAD RUNNER)


  • அமெரிக்காவின் மெக்சிகோ நகரில் உள்ள லொஸ் அலமொஸ் தேசிய ஆய்வகத்தில் உள்ளது.
  • ஒரு செக்கனில் 1.042 கொட்ரில்லியன் கணக்குகளை செய்யகூடியது.



2 ம் இடம்
டைட்டன்
(TITAN)


  • கிரே நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது.
  • அறிவியல் ஆய்வுகளுக்காக ஓக் ரிச் நசனல் லபோரட்டரியில் அமைக்கப்பட்டது.
  • ஓக் ரிச் நசனல் லபோட்டரியில் முன்னைய JAGUAR மீத்திறன் கணினியின் மேம்பட்டது. 
  • ஒக்டோபர் 2011 இல் அறிவிக்கப்பட்டு, ஒக்டோபர் 2012 இல் செயற்பாட்டிற்கு வந்தது.
  • உச்சபட்ச செயற்பாட்டு திறன் 17.59 ஐம்மிதப்புப் புள்ளிச் செயல்பாடு (Peta Flops per Second) ஆகும்.
  • அதாவது ஒரு வினாடியில் 17.59 கொட்ரில்லியன் கணித்தல்களைச் செய்யக்கூடியது.




முதலாமிடம்...
டியானே - 2
(TIANHE-2)

  • சூப்பர் கணணிகளின் சூப்பர் ஸ்டார்.
  • தற்போது உலகின் மிக வேகமான கணணி.
  • சீனாவின் சங்காசா நகரிலுள்ள தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
  • 2015-ம் ஆண்டு வர இருந்த இக்கணினி 2013-ம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்டது. 
  • இது உலகின் மிக வேகமான கணினியாக ஜூன் 2013-ல் அறிவிக்கப்பட்டது.
  • 3.12 மில்லியன் ப்ரோசெசர் இணைப்புகளை கொண்டுள்ளது.
  • இன்டெல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஐவி பிரிட்ஜ் மற்றும் சியோன் பி ஆகிய கம்ப்யூட்டர் Chip கள்  பயன்படுத்தப்படுகின்றன. 
  • 33.86 ஐம்மிதப்புப் புள்ளிச் செயல்பாடு (Peta Flops per Second) கொண்ட கணினியாகும்.
  • அதாவது ஒரு வினாடியில் 33.86 கொட்ரில்லியன் கணித்தல்களைச் செய்யக்கூடியது.
  • மேம்படுத்தல்களை மேற்கொள்வதன் மூலம் வேகத்தை 54.9 ஐம்மிதப்புப் புள்ளிச் செயல்பாடு வரை அதிகரிக்க கூடியதாக இருக்கும் என்பது கணணி விற்பன்னர்களின் கருத்தாகும்.
  • லினக்ஸ் வகை இயங்குதளமான கைலின் மூலம் இயக்கப்படும். 
  • இதற்கு முன்னர் உலகின் அதிவேகக் கணணியாக இருந்த அமெரிக்காவின் டைட்டன் மீத்திறன் கணணியை போல் ஏறத்தாழ இரண்டு மடங்கு வேகமுடையதாக காணப்படுகின்றது.
  • குவான்சு நகரிலுள்ள தேசிய மீத்திறன் கணனி நிறுவகத்தில் நிறுவப்பட்டு தென்சீனாவின் கல்வி மற்றும் ஆய்வுகளிற்காக பயன்படுத்தப்படவுள்ளது.

100          one
101          ten
102          hundred
103          thousand
104          ten thousand
105          hundred thousand
106          million
109          billion  
1012        trillion 
1015        quadrillion





நன்றி
வணக்கம்




No comments

Powered by Blogger.