The Wall of Cricket - கிரிக்கட்டின் தடுப்புச் சுவர்
வ்ணக்கம் நண்பர்களே...@!!@
2007-08 ஆண்டுகளில் இந்திய அணி, அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதியது.
இதன் முதல் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றபோது இந்திய அணியின் தடுப்பு சுவர் என்று வர்ணிக்கப்படும் டிராவிட் 41 பந்துகளுக்கு பிறகு ஒரு ஓட்டம் எடுத்தார்.
2 இன்னிங்ஸிலும் அவுஸ்திரேலிய வீரர்கள் நொந்து போக காரணம் இந்திய அணியில் பொறுமையின் சிகரமாக திகழும் டிராவிட் தான். இந்த போட்டியில் இவர் அடித்த ஓட்டங்கள் மொத்தமாக 21 ஓட்டங்கள் தான். ஆனால் இவர் சந்தித்த பந்துகள் 180 ஆகும்.
இவரின் பொறுமையான நிலையை கண்டு வீரர்கள் திக்குமுக்காடி போயினர். ரசிகர்களும் தலையில் துண்டை போட்டு அமர ஆரம்பித்து விட்டனர்.
இவர் அடிப்பாரா? மாட்டாரா? என பிராட் லீ பந்து வீச, அணித்தலைவர் பொண்டிங் மற்றும் விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் இருவரும் தங்களுடைய முகத்தை மாறி மாறி பார்த்துக் கொண்டனர். நடுவர் கூட நின்று கொண்டே தூங்கும் நிலைக்கு சென்று விட்டார்.
40 பந்துகளை சந்தித்து ஒரு ஓட்டம் கூட எடுக்காத நிலையில், பிராட் லீயின் ஓவரில் 41வது பந்தை சந்தித்த டிராவிட் 1 ஓட்டம் எடுத்தார்.
இதனை பார்த்த அவுஸ்திரேலிய ரசிகர்கள் எழுந்து நின்று கை தட்டி அவரை உற்சாகப்படுத்தினர். இதனால் அரங்கமே ஒரு நிமிடம் ஆடிப்போனது.
பிறகு சதத்துக்கு சமமாக கருதப்பட்ட தனது 1 ஓட்டங்களுக்காக தனது மட்டையை தூக்கி காட்டினார் டிராவிட்.
இந்த நிகழ்வும் கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகவே உள்ளது.
நன்றி
வணக்கம்
Post a Comment