Search This Blog

Mallar Kampam known as Game of Stalag - கழுமர விளையாட்டு எனப்படும் மள்ளர் கம்பம்


வணக்கம் நண்பர்களே...

கழுமரம் என்பது ஒரு கொலைக்கருவி. கூர்மையாக செதுக்கபட்ட மரம் ஒன்றினில் குற்றாவளியின் ஆசனவாயை சொருகி விடுவார்கள்; அவன் கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுள்ளேறி இறந்து போவான். வலி தாங்காமல் அவன் இரவெல்லாம் கூப்பாடு போடுவதும், செத்த உடலை பறவைகள் கிழித்து உண்பதையும் பற்றி நிறைய கேள்விபட்டிருக்கிறேன்!

ஆனால் அதே பெயரில் ஒரு விளையாட்டினை பண்டைய தமிழர்கள் விளையாடியிருக்கின்றனர் எனும் விடயத்தினை அறிந்தபோது ஆச்சியப்பட்டேன்!







இதைச் சொன்னவர்கள் என் FB நண்பர்கள்!






அந்த மரத்தாலான கம்பத்தின் பெயர் தான் கழுமரம். கழுமரம் ஏறி விளையாடும் அந்த விளையாட்டின் பெயர் மள்ளர் கம்பம். பழங்காலத்தில் அதை விளையாடுபவர்கள் மருத நில மள்ளர்கள். மருத நிலத்தில் தான் பண்பாடு, கலாச்சாரம் முதலியன தோன்றின என்று தொல்காப்பியம் சொல்கிறது. எனவே அந்த விளையாட்டு மள்ளர் கம்பம் என்று அழைக்கப்பட்டது!

இவ் விளையாட்டுக்கான பயிற்சிகள் தமிழ் நாட்டில் விழுப்புரத்தில் உள்ள நகராட்சி பூங்காவிலும் ; திருச்சியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்திலும் நடக்கிறது என அறியக்கிடைக்கிறது!

இலங்கையிலும் இவ்வாறான பயிற்சிகள் நடப்பதாக அறிந்தால் தயவுசெய்து அறியத்தாருங்கள்!

தமிழர் கலைகள் அழியாது பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரினதும் கடமையாகும்!



மேலதிக விபரங்களுக்கு



மேலும் சில ஒளிப்படங்கள்

























நன்றி 
வணக்கம்



No comments

Powered by Blogger.