Search This Blog

Warm Bodies Review - கிருமியான உடல்கள் விமர்சனம்


காதல் என்பது ஒரு வகையான தனித்த உணர்வு. அந்த உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அது உள்ளுக்குள் சென்று ஊடுருவி...

"அப்படியெல்லாம் எதுவுமில்லை ; காதல் என்பது ஆசை, அன்பு, நட்பு, காமம்,  விரகம் ஆகிய உணர்வுகளில் ஒன்று அல்லது இவைகள் அனைத்தும் கலந்த ஒரு உணர்வு" என்று பெரியார் கூறினார்.

ஜாதி மாறி காதலித்தால் கலாச்சாரம் மாறிவிடும் ; பண்பாடு கெட்டுவிடும் ; காதல் என்பது வெளிநாட்டுப் பண்பாடு ; காதலை ஒழிக்க வேண்டும் ; காதல் திருமணங்கள் எல்லாம் பணம் பறிக்க நடக்கும் நாடகத் திருமணங்கள் என்று பலர் நினைக்கின்றனர்.

முதலில் காதல் என்பது வெளிநாட்டுப் பண்பாடா என்று பார்க்க வேண்டியுள்ளது.

இப்படிப் பேசுபவர்கள் அரிச்சுவடியே தெரியாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். தமிழர் வரலாற்றில் காதல் ஒரு முக்கியமான பண்பாட்டுக்கூறு ;  தமிழ் இலக்கியங்களில் காதலைப் பற்றிப் பேசப்படாத, காதலைப் போற்றாத ஒரு இலக்கியத்தைக் கூட பார்க்க முடியாது ; தமிழ் இலக்கியங்களில் அகநானூறு என்ற இலக்கியம் தமிழரின் காதல் வாழ்க்கையைப் பற்றி, காதலைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது!

பொதுவாக காதல் மிருக குணமுள்ள மனிதனைக்கூட தெய்வீகத்தன்மையுள்ளவனாக மாற்றிவிடும் என்பர். அவ்வளவு சக்தி காதலுக்கு உண்டு. 

அதெல்லாம் சரி... ரத்தக் காட்டேரிக்கு காதல் வந்தால்... அதுவும் ஒரு மனிதப் பெண்ணின் மீது காதல் வந்தால்... அவன் என்ன செய்வான்? மனிதப் பெண்ணைப் பார்த்ததும் அவளைக் கடித்துக் குதறி ரத்தருசி பார்க்க தூண்டும் குணவியல்பை எவ்வாறு கட்டுப்படுத்துவான்? தன் ஏனைய காட்டேரி நண்பர்களிடமிருந்து அவளை எப்படி காப்பாற்றுவான்?

இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லும் ஹொலிவூட் படம்தான் 'கிருமியான உடல்கள்' அதாவது 'Warm Bodies'




Isaac Marion எழுதிய 'Warm Bodies' நாவலைத்தழுவி எடுத்திருக்கிறார்கள் ; 
 David Hoberman ,  Todd Lieberman மற்றும் Bruna Papandrea இணைந்து தயாரித்திருக்கிறார்கள்  ; 
திரைக்கதை மற்றும் இயக்கம் Jonathan Levine ; 
இசை Marco Beltrami மற்றும் Buck Sanders ; 
ஏனைய தொழில்நுட்பக் கலைஞர்களை படத்தில் Title Card போடும்போது பார்த்துக்கொள்ளுங்கள்.

வெதுவெதுப்பான உடல்களில் காட்டப்படும் உலகம் நாம் இதற்கு முன்னர் பார்த்திராதவொன்று ; படம் ஆரம்பித்தவுடனே அவ்வுலகிற்குள் நாமும் ஈர்க்கப்பட்டு விடுவோம் ; வைரஸ் கிருமியின் தாக்கத்தினால் மனிதர்கள் காட்டேரிகளாக மாறி சக மனிதர்களையே அடித்து தின்னும் பல படங்களை நாம் ஏற்கனவே பார்த்திருந்தாலும் - அவற்றிலிருந்து மாறுபட்டு தெரிகிறது ; இதற்கு காரணம் இயக்குனரின் மிகச்சிறந்த திரைக்கதை அமைப்பு என கூறலாம் ; அதிரடியான சண்டைகள், த்ரிலிங்கான சேசிங்கள் எதுவும் இல்லாமலே படம் மெதுவாக நகர்ந்து செல்கிறது ; இருந்தாலும் போரடிக்கவில்லை ; படத்தில் கதாபாத்திரங்களுக்கிடையிலான உரையாடல்கள் அதிகம் ; இருந்தும் நடிகர்களின் உடல்மொழி வித்தியாசமாக தெரிவதனால் அதுவும் சுவாரசியமாகவே உள்ளது.

  சில காட்சிகள் பார்வையாளர்களை நெகிழ வைக்கின்றன. உதாரணத்திற்கு தன்னால் காப்பாற்றப்பட்ட பெண் ஆதரவாய் பழக தொடங்கியதும் காட்டேரியின் நின்று போன இதயம் மறுபடியும் துடிக்க தொடங்குவது ; அதைப் பார்க்கும் ஏனைய காட்டேரிகளின் இதயமும் துடிப்பது ; காட்டேரியை சுடும் பொலிஸ் அவன் உடலிலிருந்து இரத்தம் வடிவதைப் பார்த்து அவன் மீண்டும் மனிதனாகிவிட்டான் என நம்புவது ; இவையெல்லாம் நான் ரசித்த காட்சிகள்தான். உங்களுக்கு வேறு சில காட்சிகளும் தெரியலாம். 







படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் :









Nicholas Hoult (Hero)


Teresa Palmer (Heroin)
Rob Corddry


Analeigh Tipton


Dave Franco


Cory Hardrict


John Malkovich


மொத்தத்தில் நீங்கள் ஒரு அமைதியான காதல் காட்டேரியின் படம் பார்க்க விரும்பினால் - இது உங்களுக்கான படம். 



நன்றி 
வணக்கம்



No comments

Powered by Blogger.