Nelkattum Seval Village - நெல்கட்டும் செவல் கிராமம்
ஒரு வீட்டுக்குள் அல்லது பாடசாலைப் பருவங்களில் ஒரு வகுப்பில் ஒரே பெயரைக்கொண்ட இருவரோ அல்லது மூவரோ இருந்தாலே வாத்தியாருக்கு தலை பிச்சுக்கும். ஆனால் ஒரு கிராமத்தில் வசிக்கும் அனைத்து தரப்பினருக்கும் ஒரே பெயர் என்றால் எப்படி இருக்கும்? இது ஒன்றும் கதை அல்ல. உண்மை!
நம்ப முடியாத எத்தனையோ விசித்திரங்கள் உலகில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இதுபோல இதுவும் ஒன்று - கிராம மக்கள் அனைவரும் குழந்தை முதல் பல் விழுந்த வயோதிபர் வரை ஒரே மாதிரியான பெயர்!
நெல்கட்டும் செவல் கிராமத்தின் அழகிய தோற்றம். |
வெள்ளப்பாண்டி ஜமீன்தார் |
இதோ இவர் ஒரு ஜமீந்தார் ; சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்னால் சொந்த உறவினர்களால் கொடூரமாக குத்தி கொலை செய்யப்ட்டார் ; இந்தக் கிராமத்தில் எந்த குழந்தை பிறந்தாலும் அவரது பெயரைத்தான் சூட்டவேண்டும் ; இல்லையென்றால் அந்தக் குழந்தை துடிதுடித்து இறந்து விடுமாம் ; இன்னமும் பீதியில் உறைந்து கிடக்கிறது இக்கிராமம்.
நெல்கட்டும் செவல் ; நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் இருந்து 15km தொலைவில் இருக்கின்றது.
இந்தியப் போராட்ட வரலாற்றிலே இந்த சின்னஞ்சிறிய கிராமத்திற்கும் மிகப் பெரிய பங்கு இருக்கிறது. வெள்ளையர்களை எதிர்த்து முதன் முதலில் வீரவாள் ஏந்தியவர்கள் இந்தக் கிராமத்திற்கு சொந்தக்காரர்கள்.
மாமன்னர் பூலித்தேவர் |
1755 ம் ஆண்டு நெல்லையில் ஆங்கிலேய தளபதியாக இருந்தார் 'அலக்ஸாண்டர் கெரொன்' என்பவர் ; நெல்கட்டும் செவலில் ஆட்சி செய்துகொண்டிருந்த மன்னர் 'பூலித்தேவரிடம்' கப்பம் கட்டச்சொல்லி வற்புறுத்தினார் அவர் ; ஆனால் "ஒரு நெல்மணிகூட கப்பமாக கட்டமாட்டேன்" என எதிர்ப்புத் தெரிவித்தார் பூலித்தேவர் ; அதனால்தான் இக்கிராமத்திற்கு 'நெல் கட்டான் செவல்' என பெயர் ; கால மாற்றத்தால் அதுவே 'நெல்கட்டும் செவல்' என மாறிப்போனது.
பூலித்தேவன் கோட்டை |
இப்படி வீரத்திற்கு பெயர்போன இக்கிராமத்தில்தான் அடுத்துவந்த ஜமீன்தாரின் மரணம் அனைவரையும் அதிர்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றது ; அதனால்தான் அனைவரும் ஒரே பெயரை சூடிக்கொள்கிறார்கள். அது ஆணாக் இருந்தால் 'வெள்ளைத்துரை' - பெண்ணாக இருந்தால் 'வெள்ளைத்தாய்'
நன்றி
வணக்கம்
Post a Comment