What has Hitler's Life taught us - ஹிட்லரின் வாழ்க்கை எமக்கு கற்று தருவது என்ன? (Part - 1)
"வாழ்க்கை என்றால் ஆயிரம் ; இருக்கும்வாசல் தோறும் வேதனை இருக்கும் ; வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை ; எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்!"
வணக்கம் நண்பர்களே...
வாழ்க்கை ஒரு சவால் அதனைச் சாதியுங்கள் ; வாழ்க்கை ஒரு பரிசு அதனை ஏற்றுக் கொள்ளுங்கள் ; வாழ்க்கை ஒரு சாகசப்பயணம் அதனை மேற்கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சரியாக முடிவெடுக்கும்போது சரியான விஷயங்கள் நிகழ்கின்றன. தவறாக முடிவெடுக்கும்போது எல்லாம் தவறாகவே போகின்றன. வெற்றியும் தோல்வியும் இந்த அடிப்படையில்தான் நிகழ்கின்றன. இதுதான் ஹிட்லரின் வாழ்க்கை எமக்கு கற்றுத் தரும் பாடம். அதனால்தான் மேலே தரப்பட்டுள்ள கவியரசுவின் பாடல் ஹிட்லருக்காகவே எழுதப்பட்டதோ என நினைக்கிறேன்.
ஒரு சாதாரணமானவன் உழைப்பின் மூலம் பெரும் கோடீஸ்வரனாக மாறுவதை தமிழ் சினிமா பல முறை காட்டியிருக்கிறது. ஆனால் ஒரு அசாதாரணமான மனிதன் தன் திட்டங்கள் மற்றும் விடாமுயற்சியின் மூலம் நாட்டின் தலைவனாக மாறுவதை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா? ஹிட்லர் அதைத்தான் செய்தார்.
இங்கே நான் அசாதாரணம் என குறிப்பிட்டதற்கு காரணம் உண்டு. ஒரு பால்காரன் ஒரு பால் பண்ணைக்கு அதிபரானால் அது சாதாரணம் ; ஆனால் ஒரு ஓவியன் உலகை நடுநடுங்க வைத்த சர்வதிகாரியானால் ; அது அசாதாரணம் அன்றி வேறென்ன?இப்பேர்ப்பட்டவனின் வாழ்க்கையை ஒரேயொரு பதிவின் மூலம் முழுதாய் சொல்லிவிட நினைப்பது மடத்தனம். எனவே இது பதிவுகளாய் தொடரும்!
சிறுவயதில் ஹிட்லர் ஒரு கொடுங்கோலன் என எனக்கு சொல்லித்தரப்பட்டிருந்தது. அதில் 100 வீதமான உண்மையிருந்தாலும் ; ஹிட்லரை தோற்கடித்தவர்கள் நல்லவர்களென்றும் எனக்கு சொல்லித்தரப்பட்டிருந்தது. இது உண்மைதானா? ஸ்டாலினும், சர்சிலும், ரூஸ்வெல்ட்டும் அப்பழுக்கற்றவர்களா? எனும் வினா எனக்குள் எழுந்தது. விளைவு ஹிட்லரை பற்றி அதிகமதிகம் வாசிக்க ஆரம்பித்தேன். அவ்வாறு நான் வாசித்து பெற்றுக்கொண்ட விடயங்கள்தான் இப்பதிவுகளில் இடம்பிடிக்கப் போகின்றன. அவற்றை முடிந்த வரையில் சுவாரசியமாக சொல்ல முயற்சிக்கிறேன். பதிவு சவசவவென இருக்கும் பட்சத்தில் தயங்காமல் வாசகர்கள் என் தலையில் ஒரு குட்டு வைத்திடவேண்டும். (By Comments). ஹிட்லரை நியாயப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. ஆனால் அவர் செயல்களுக்கான காரணம் என்ன? வெறும் பதவியாசை மட்டும்தானா? என்பதை விளக்குவதே என் நோக்கம்.
ஓர் உண்மையை சொல்லியாக வேண்டும். ஹிட்லர் மட்டும் பிறக்காதிருந்தால் இந்தியாவுக்கோ இலங்கைக்கோ சுதந்திரமே கிடைத்திருக்காது. இதைப் பற்றி வரும் பதிவுகளில் விரிவாக சொல்கிறேன்... so wait & see
அதுவரை stay cool...@!!@
ஹிட்லர் சம்பந்தமான சில ஒளிப்படங்கள்
ஹிட்லர் சிறுவனாக |
ஹிட்லரின் தாயார் |
ஹிட்லர் குழந்தையாக |
ஹிட்லர் இளைஞனாக |
ஹிட்லருடன் காதலி ஈவா |
நன்றி
வணக்கம்
Post a Comment