Search This Blog

Thalaiva Review - தலைவா விமர்சனம்


வணக்கம் நண்பர்களே...

மேலே உள்ள தலைவா பட போஸ்டரை நன்கு கவனிக்கவும்... பின்னனியில் கோட்டை ; கோட்டையின் முன்னால் நாற்காலி ; நாற்காலியில் சிந்தித்தவாறு விஜய் ; மேலே கொட்டை எழுத்துக்களில் தலைவா எனும் வாசகம். புரிந்திருக்குமே!

இந்தப் படத்தைப் பார்க்கும் எண்ணத்தில் நான் இருக்கவில்லை... இங்கே இலங்கையில் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள்... இவற்றுக்கு நடுவே பார்க்க தூண்டியது FB நண்பர்களும் அவர்கள் செய்த அலப்பறையும்தான்...

அவற்றையெல்லாம் தூக்கிசாப்பிட்டது ஒரு இளைஞரின் மரணம் பற்றிய செய்தி... ஏன் இப்படியெல்லாம்???

சரி... இவற்றையெல்லாம் தள்ளிவைத்துவிட்டு படத்தைப்பார்த்தால்...

விஜய் நாயகன் ; அமலாபால் நாயகி ; இவர்களுடன் சத்யராஜ், சந்தானம், நாசர், பொன்வண்ணன், ரேகா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

இயக்கம் A.L.விஜய், ஒளிப்பதிவு நீரவ் ஷா, இசை G.V.ப்ரகாஷ், மற்றைய கலைஞர்களை படம் பார்க்கும்போது Title Card போடுவார்கள். பார்த்துக் கொள்ளுங்கள்.

படத்தில் கதையென்று பார்த்தால் "மக்களுக்காக வாழும் மனிதநேயமுள்ள ஒருவன் வஞ்சிக்கப்பட்டு சாகடிக்கப்படுகிறான். அவனது பாதையை அவனது மகன் தேர்ந்தெடுக்கிறான்."

ஏற்கனவே நாயகனில் மணிரத்னமும் ; தேவர் மகனில் பரதனும் புகுந்து விளையாடிய கதைக்களம்தான்... ஆனால் இங்கு A.Lவிஜய் என்ன செய்கிறார்?

தெய்வத்திருமகளில் சீயானிடமிருந்து நடிப்பை வாங்கிய அளவிற்கு இல்லாவிட்டாலும் ; குழந்தை சாராவிடமிருந்து வாங்கிய அளவிற்காவது விஜயிடமிருந்து நடிப்பை வாங்கியிருக்கலாம்! ஆனால் ஏனோ அதைச் செய்யவில்லை. சில நேரங்களில் விஜய் எப்படி நடித்தாலும் ரசிகர்கள் பார்ப்பார்களென்று நினைத்தாரோ என்னமோ?

ஆனால் ஒரு விடயத்தினை இப்போதிருக்கும் இயக்குனர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இது M.G.R, ரஜனி காலமல்ல... இப்போதிருக்கும் ரசிகர்களை ஏமாற்றுவது கடினம்.

படத்தில் முதல் பாதியை சந்தானம், விஜய்-அமலாபால் காதல் காட்சிகள் மற்றும் நீரவ்வின் ஒளிப்பதிவோடு விறுவிறுப்பாக கொண்டு செல்லும் இயக்குனர் ஒரு அருமையான திருப்பத்துடன் இடைவேளை என்கிறார். இடைவேளை முடிந்துவந்து ஆவலோடு உட்கார்ந்தால் ஸ்ஸ்ஸப்ப்பா என்று ஆகிவிட்டது. படம் முடிந்து வெளியே வரும்போது இந்தப் படத்திற்கா இவ்வளவு பில்டப்பு என தோன்றியது.



சத்யராஜ் அப்பாவாக ; ரேகா அம்மாவாக ; விஜய் மகனாக நடித்திருக்கின்றனர். விஜயின் நண்பனாக வழக்கம்போல் சந்தானம். இருவரும் இணைந்து வரும் காட்சிகளில் கலகலப்புக்கு பஞ்சமில்லை. 


அதேபோல் அமலாபாலுடன் விஜய் வரும் காதல் காட்சிகள்... குறிப்பாக அந்த புன்னகை மன்னன் ஸ்டைல் நடனக் காட்சி... அழகாக வந்திருக்கின்றது.






ஆனால் இருவரையும் அருகருகே பார்க்கும் போது யார் அமலாபால்? யார் விஜய் என்பதில் குழப்பம் ஏற்பட்டது... அந்தளவிற்கு  Brother-Sister Face-cut...
விஜய்க்கு ஜோடியாக அமலாபாலை போடுவதை தவிர்க்கலாம்!

விஜய்யை பொருத்தவரை பெரிதாக ஒன்றும் கஸ்டப்பட்டு நடிக்கவில்லை... தனக்கு என்ன வருமோ அதை செய்கிறார். நன்றாக நடனம் ஆடுகிறார்... ஆனால் அமலாபாலுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பதற்காகவோ என்னமோ? வழக்கமான விஜய் ஸ்டைல் மிஸ்ஸிங்...

அமலாபால் வருகிறார் ; போகிறார் ; இடைவேளை ட்விஸ்ட்டுக்கு பயன்படுகிறார். அவ்வளவுதான்!

படத்தின் மிகப்பெரிய பலமே சந்தானம்தான். முதல்பாதி முழுக்க வரும் இவர் இரண்டாம் பாதியிலும் கொஞ்ச நேரம் வந்து கிச்சு கிச்சு மூட்டிவிட்டு செல்கிறார்.

அருமையான நடிகர் சத்யராஜ் ; வீணடிக்கப்பட்டிருக்கிறார். ரேகா, பொன்வண்ணன் போன்றவர்களும் அப்படியே!

G.V இசையில்"வாங்கண்ணா... வணக்கங்கண்ணா" நல்லாருக்கும் ; மற்றதெல்லாம் சுமார் ரகம்தான்... பாடல்களை படமாக்கிய விதத்திலும் விசேசமில்லை....



மற்ற வலையுலக நண்பர்கள் சொல்வது போல் "இது மொக்கை... தப்பிச்சுக்கோங்க" அல்லது "சூப்பர்" என்றெல்லாம் சொல்ல மாட்டேன். அது நீங்களாகவே உணரவேண்டிய விசயம்.

ஆனால் ஒன்று... இதொன்றும் பார்த்தே தீர வேண்டிய ரகம் இல்லை!



நன்றி 
வணக்கம்



No comments

Powered by Blogger.